எல்தியார் ஓரோசுபேவ்
| எல்தியார் ஓரோசுபேவ் | |
|---|---|
| நாடு | கிர்கிசுத்தான் |
| பிறப்பு | 2006 பிசுக்கெக், கிர்கிசுத்தான் |
| பட்டம் | பன்னாட்டு சதுரங்க மாசுட்டர் (2024) |
| உச்சத் தரவுகோள் | 2421 (நவம்பர் 2024) |
எல்தியார் ஓரோசுபேவ் (Eldiar Orozbaev) என்பவர் கிர்கிசுத்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீரர். 2006 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். பிடே அமைப்பு 2024 ஆம் ஆண்டில் இவருக்கு பன்னாட்டு சதுரங்க மாசுட்டர் என்ற பட்டத்தை வழங்கியது.
சதுரங்க வாழ்க்கை
[தொகு]2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் கிர்கிசுத்தான் நாட்டு சதுரங்க வாகையாளர் போட்டியில் அசில் அப்திசாபருடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். சமநிலை முறிவு ஆட்டங்களுக்குப் பிறகு இவர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.[1]
2024 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் ஆசிய இளைஞர் சதுரங்க வாகையாளர் போட்டியில் முதல் நான்கு சுற்றுகளில் சரியான தொடக்கத்தைப் பெற்ற ஐந்து வீரர்களில் இவரும் ஒருவர்..[2]
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கிர்கிசுத்தான் நாட்டு சதுரங்க வாகையாளர் போட்டியில் இவர் அசில் அப்திசாபர் மற்றும் செமெட்டெய் டோலோகன் டெகின் ஆகியோருடன் சமநிலையில் இருந்தார். சமநிலை முறிவு ஆட்டங்கள் பயன்படுத்தப்பட்ட பிறகு, ஒரு விரைவான சமநிலை முறிவு போட்டியில் அப்திசாபருடன் விளையாடி வெற்றி பெற்று, தேசிய வாகையாளரானார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nikita Khoroshev and Aleksandra Samaganova win Kyrgyzstan Championship". May 13, 2024.
- ↑ Ahmed, Shahid (June 10, 2024). "26th Asian Youth Rapid R1-4: Pratitee, Aaradhya and Pooja make a perfect start".
- ↑ "Eldiyar Orozbaev and Begimai Zairbek Kyzy win 2025 Kyrgyzstan Championship". February 24, 2025.
வெளி இணைப்புகள்
[தொகு]- எல்தியார் ஓரோசுபேவ் rating card at பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு