எல்சுவொர்தைட்டு
| யுரேன்பைரோகுளோர் (ஓகார்த்து 1977) | |
|---|---|
| பொதுவானாவை | |
| வகை | பைரோகுளோர் குழு |
| வேதி வாய்பாடு | (Ca,U)2(Ti,Nb,Ta)2O6(OH) |
| இனங்காணல் | |
| நிறம் | மஞ்சள் முதல் அடர் பழுப்பு வரை; ஒளிபுகாது முதல் ஒளி கசியும் வரை |
| படிக அமைப்பு | சம அளவு |
| பிளப்பு | இல்லை |
| முறிவு | சங்குப் பிளவு |
| மோவின் அளவுகோல் வலிமை | 5.5 |
| மிளிர்வு | பளபளக்கும் |
| கீற்றுவண்ணம் | மஞ்சள் முதல் அடர் பழுப்பு வரை[1] |
| பிற சிறப்பியல்புகள் | |
| மேற்கோள்கள் | [1][2] |
எல்சுவொர்தைட்டு (Ellsworthite) என்பது (Ca,U)2(Ti,Nb,Ta)2O6(OH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். அரிய அருமண் கனிமமான இது பீட்டாபைட்டு யுரேன்பைரோகுளோர் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறது. பெரும்பாலும் வட அமெரிக்காவின் வடக்குப் பகுதிகளில் காணப்படுகிறது. இது ஒரு யுரேனியம் தனிமம் மிகுந்த பைரோகுளோர் குழு கனிமமாகும். கனடிய புவியியல் ஆய்வின் ஆர்டி வி. எல்சுவொர்த்தின் பெயரால் வாக்கர் மற்றும் பார்சன்சு ஆகியோரால் பெயரிடப்பட்டது.[3] கனிமத்தில் அதிக அளவில் யுரேனியமும் தோரியமும் நிறைந்திருப்பதால் இக்கனிமம் கதிரியக்கப் பண்பு கொண்டுள்ளது. எல்சுவொர்தைட்டு கனிமத்தில் சுமார் 17.1% யுரேனியம் உள்ளது.[4] இதையடுத்து எல்சுவொர்தைட்டில் தோரியம் தனிமமும் உள்ளது. பெரும்பாலும் கனடா மற்றும் அலாசுகாவில் காணப்படுகிறது. முதலில் ஒண்டாரியோவின் ஐப்லாவில் கண்டுபிடிக்கப்பட்டது.[2]
இயைபு
[தொகு]எல்சுவொர்தைட்டில் நையோபியம், தாண்டலம், சோடியம், கால்சியம் ஆகியவற்றின் அணைவு நீரேற்ற ஆக்சைடுகள் உள்ளன. ஐதராக்சில் மற்றும் புளோரின் ஆகியவையும் இதில் உள்ளன; எல்சுவொர்தைட்டு கனிமத்தில் 17% யுரேனியம் வரை இருக்கிறது.[5][1][6]
கட்டமைப்பு
[தொகு]எல்சுவொர்தைட்டின் கட்டமைப்பு கனசதுர வடிவமானது. 4/மீ 3* 2/மீ என்ற புள்ளிக்குழுவைக் கொண்டுள்ளது. இது சம அளவு கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். Fd3m என்ற இடக்குழுவில் ஆறெண்முக படிகமாகப் படிகமாகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Betafite" (PDF). The Handbook of Mineralogy. Archived from the original (PDF) on 22 August 2011. Retrieved 21 October 2013.
- ↑ 2.0 2.1 Frodel, Clifford. (1958). Systematic Mineralogy of Uranium And Thorium, Geological survey bulletin 1064 pg.326-330
- ↑ T. L. Walker and A. L. Parsons (1923) Ellsworthite and associated minerals from Hybla, Ontario. Contrib. Canad. Min., 1923, Univ. Toronto Stud., Geol. Ser., 16, 13-20
- ↑ "A glossary of uranium- and thorium-bearing minerals / by Judith Weiss Frondel and Michael Fleischer". HathiTrust (in ஆங்கிலம்). Retrieved 2024-09-03.
- ↑ Bates, R.G., Wedow Jr, H. (1953). Preliminary summary review of Thorium-Bearing mineral occurrence in Alaska. Geological Survey bulletin 202
- ↑ Hogarth D.D. (1961) A study of Pyrochlore and Betafite, volume 6, issue 5. Canadian Mineralogist pg.610
- Bulletin of the National Research Council, Number 77, Physics of the Earth - I Volcanology, By the Subsidiary Committee on Volcanology, Published by the United States National Research Council of The National Academy of Sciences Washington, D.C., (1931)