எலைன் எம். சாடிலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலைன் எம். சாடிலர்
Elaine M. Sadler
தேசியம்ஆத்திரேலியர்
படித்த கல்வி நிறுவனங்கள்குவீன்சுலாந்து பல்கலைக்கழகம், ஆத்திரேலியத் தேசியப் பல்கலைக்கழகம்
பணிவானியற்பியலாளர்

எலைன் சாடிலர் (Elaine Sadler) ஓர் ஆத்திரேலிய வானியற்பியலாளர் ஆவார். இவர் சிட்னி பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பள்ளியின் வானியற்பியல் துறையின் பேராசிரியர் ஆவார். இவர் CAASTRO (ARC Centre of Excellence for All-Sky Astrophysics) மையத்தின் இயக்குநரும் ஆவார்.[1] இவர் 2010 இல் ஆத்திரேலிய அறிவியல் கல்விக்கழகத்தின் ஆய்வுறுப்பினாராகத் தேர்வானார். இவர் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் உறுப்பினரும் ஆவார்.[2] இவர் 150 ஆய்வுத்தாளகளை வெளியிட்டுள்ளார்.[3]

வாழ்க்கை[தொகு]

இவர் தன் எட்டாம் அகவையில் இருந்தே வானியலில் ஆர்வத்தோடு திகழ்ந்துள்ளார். இவர் அப்போது பெற்ற புடவி, தொலைநோக்கிகளின் புகைப்படங்கள் நிறைந்த நூலால் இந்த ஆர்வம் தோன்றியுள்ளது. இவர அதுமுதலே பெரிய சிக்கல்களைப் பற்றிச் சிந்திக்கலானார்.[4] இவர் தன் பதினொன்றாம் அகவையில் இங்கிலாந்து, கில்டுபோர்டு பயில்நிலை வானியல் கழகத்தில் உறுப்பினர் ஆனார். இவ்ரே அக்கழக மிக இளமையான உறுப்பினராக விளங்கினார்.[4]

இவர் குவீன்சுலாந்து பல்கலைக்கழகத்தில் படித்து இயற்பியலில் இளவல் பட்டம் பெற்றார்.[5] இவர் தன் முனைவர் பட்டத்தை ஆத்திரேலியத் தேசிய பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[5] in 1983.[4] பட்டப்படிப்பு முடிந்ததும், ஐரோப்பியத் தெற்கத்திய வான்காணகத்திலும் கிட்பீக் தேசிய வான்காணகத்திலும் பணிபுரிந்துப் பின்னர் ஆத்திரேலிய வானியல் நோக்கீட்டகத்துக்கு மாறியுள்ளார்.[4] இவர் 1993 இல் சிட்னி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பணிபுரியலானார். இவர் ஆத்திரேலிய ஆராய்ச்சி மன்றத்தின் மூன்று ஆய்வுநல்கைகளைப் பெற்றதால், இவர் விரிந்து பரந்த அளவில் ஆய்வுத் திட்டங்களை மேற்கொள்ள முடிந்தது.[4] இவர் தன் குழுவின் ஒத்துழைப்போடு, சிட்னி பல்கலைக்கழகத்தின் மொலாங்கிலோ கதிர்வீச்சுத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி தென் அரைவான்கோளம் முழுமைக்குமான விண்மீன்களின் கதிர்வீச்சு வரைபட அட்டவணையை உருவாக்கியுள்ளார். இந்த அட்டவணை பன்னாட்டு அளவில் பல வானியலாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.[4]

இவர் 2010 இல் ஆத்திரேலிய அறிவியல் கல்விக்கழகத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார். இக்கழகம் இவரை உலக முன்னோடி ஆராய்ச்சியாளராக விவரிக்கிறது.[6]

இவர் CAASTROவின் இயக்குநராக, அதன் ஏழு பல்கலைக்கழகங்களில் உள்ள 100 அறிவியலாளர். 40 ஆராய்ச்சி மாணவர் ஆகியோரை மேற்பார்வை இடுகிறார். இவற்ரில் சிட்னி பல்கலைக்கழகம், ஆத்திரேலியத் தேசியப் பல்கலைக்கழகம், கர்ட்டின் பல்கலைக்கழகம், மெல்பர்ன் பல்கலைக்கழகம், குவீன்சுலாந்து பல்கலைக்கழகம், சுவின்பர்ன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், மேற்கு ஆத்திரேலியப் பல்கலைக்கழகம் ஆகியவை அடங்கும். மேலும் இந்த ஆய்வு வலையில் 11 ஆத்திரேலிய, கடல்கடந்த நிறுவனங்களும் உள்ளன.[7]

இவரது ஆய்வுக்குழு 2015 ஜூலையில் 5 பில்லியன் அகவையுடைய பழம்பால்வெளி ஒன்றைக் கண்டுபிடித்தது.இதற்கு CSIRO வின் ஆத்திரேலிய SKA தடங்காணி பயன்படுத்தப்பட்டது.[8][9]

இவரது முதன்மையான ஆய்வுப் புலங்களாக பால்வெளி உருவாக்கமும் படிமலர்ச்சியும் முனைவான பால்வெளிக் கருவும் ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலைன்_எம்._சாடிலர்&oldid=3546095" இருந்து மீள்விக்கப்பட்டது