எலெக்ட்ரான்கவர் கூட்டுவினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்திலீனின் ஒட்டு மொத்த எலெக்ட்ரான்கவர் கூட்டுவினை

கரிம வேதியியலில், இலத்திரன்கவர் கூட்டுவினை அல்லது எலெக்ட்ரான்கவர் கூட்டுவினை (electrophilic addition) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எளிய மூலக்கூறுகள் இணைந்து ஒரு பெரிய கூட்டுப்பொருளை உருவாக்கும் கூட்டு வினையாகும். இவ்வினையில் ஒரு வேதிச்சேர்மத்தின் பை பிணைப்பு (π) உடைந்து இரண்டு புதிய சிக்மா பிணைப்புகள் (σ) பிணைப்புகள் உருவாகின்றன. இலத்திரன்கவர் கூட்டுவினையில் ஈடுபடும் வினைவேதிமத்தில் ஓர் இரட்டைப் பிணைப்பு அல்லது ஒரு முப்பிணைப்பு இருத்தல் கட்டாயமாகும்.[1]

வினையில் உருவாகும் மின்கவரி X+ இலத்திரன் அதிகம் பெற்றுள்ள நிறைவுறாத C=C பிணைப்புடன் சேர்ந்து சகப் பிணைப்பு உருவாவதே இவ்வினை நிகழ்வதற்கான உந்து சக்தியாகும். X இன் நேர்மின் சுமை கார்பன்–கார்பன் பிணைப்புக்கு மாற்றப்பட்டு C-X பிணைப்பு உருவாகும்போது கார்போநேரயனி உருவாகிறது.

எலெக்ட்ரான்கவர் கூட்டுவினை வினை வழிமுறை

இலத்திரன்கவர் கூட்டுவினையின் இரண்டாவது படி நிலையில் நேர் மின்சுமை கொண்ட இடைநிலை சேர்மம் இலத்திரன் மிகுந்திருக்கும் எதிர்மின் சேர்மம் (Y) உடன் சேர்ந்து இரண்டாவது சகப்பிணைப்பை உருவாக்குகிறது.

படி 2 இல் நிகழும் வினை, ஒரு SN1 வகை வினையில் காணப்படும் அதே அணுக்கருத் தாக்குதல் செயல்முறை வினையாக அறியப்படுகிறது. இலத்திரன்கவரியின் மிகச்சரியான தன்மையும் நேர் மின்சுமை கொண்ட இடைநிலை அயனியின் தன்மையும் எப்போதும் தெளிவாக இருப்பதில்லை. அவை வினைபடுபொருள்களையும் வினைநிகழும் நிபந்தனைகளையும் சார்ந்து இருக்கிறது.

கார்பனுக்கு சமச்சீரில்லா எல்லா கூட்டு வினைகளிலும் தலத்தேர்வு முக்கியப் பங்குவகிக்கிறது. பெரும்பாலும் இது மார்கோவ்னிக்காவ் விதியைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. கரிமபோரேன் சேர்மங்கள் எதிர் மார்க்கோவ்னிக்காவ் கூட்டுவினையைத் தருகின்றன. அரோமாட்டிக் வகை சேர்மங்கள் மீதனான இலத்திரன்கவர் தாக்குதலால் ஒரு கூட்டுவினை நிகழ்வதற்குப் பதிலாக இலத்திரன்கவர் அரோமாட்டிக் பதிலீட்டுவினை நிகழ்கிறது.

முக்கிய இலத்திரன்கவர் கூட்டு வினைகள்[தொகு]

ஆல்க்கீன்கள் வினைமுகவருடன் புரியும் எலக்ட்ரான் கவர் கூட்டு வினைகளில் குறிப்பிடத்தகுந்த சில வினைகள் :

மேற்கோள்கள்[தொகு]

  1. March Jerry; (1985). Advanced Organic Chemistry reactions, mechanisms and structure (3rd ed.). New York: John Wiley & Sons, inc. ISBN 0-471-85472-7