எலும்பு மீன்
எலும்பு மீன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | அல்புலிபாம்சு
|
குடும்பம்: | அல்புலிடே
|
பேரினம்: | அல்புலா
|
இனம்: | அ. வல்பசு
|
இருசொற் பெயரீடு | |
அல்புலா வலுபசு (லின்,, 1758) |
எலும்புமீன் (Bonefish) என்பது ஆஸ்டிசிடிஸ் என்ற சிறப்பு வகுப்புகளில் காணப்படும் ஒரே மீன் வகையாகும். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எலும்பு மீன்களின் செவுள்கள் உணவகங்களில் காணப்படுகின்றன.
விளக்கம்
[தொகு]எலும்பு மீன் 8.6 கிலோ வரை எடைவரையும் 90 செ.மீ நீளம் வரையும் வளர்வது. இதன் மங்கலான துடுப்பு வெள்ளி நிறம் கொண்டது. மார்புத்துடுப்பு மஞ்சள் நிறம் கொண்டு காணப்படுகிறது.
நடத்தை
[தொகு]ஆம்பிட்ரோமஸ் சிற்றின எலும்பு மீன்கள் கரையோர வெப்பமண்டல நீரில் வாழும். இவை ஆழமற்ற ஈரத்தன்மையுடைய தரையை நோக்கியே நகர்ந்து செல்லும், கடல் மட்டத்தின் ஏற்ற இறக்கத்திற்கேற்ப உட்கொண்டு வாழும் திறன் கொண்டது. குஞ்சுகளும் பெரிய மீன்களும் கூட்டமாக வாழும். சில இடங்களில் தனியாகவும், ஆண் பெண் இணையாகவும் காணப்படுவதுண்டு. எலும்பு மீன்கள் கடலுக்கு அடியிலுள்ள புழுக்கள், நுண்ணிய மீன் குஞ்சுகள், சுத்தமான சத்தான கடல்புற்களில் விளைகின்ற நண்டுகள், இறால் மீன்கள் போன்றவற்றை உணவாக்க் கொள்கின்றன.[1] இது சுறா இன வகைகளை பின்பற்றி சிறிய விலங்குகளை பிடித்துக்கொண்கிறது.
மீன்பிடித்தல் மற்றும் சமைக்கும் முறை
[தொகு]எலும்பு மீன்களைப்பிடித்தல் பகாமஸ் மற்றும் தெற்கு ப்ளோரிடாவில் பரவலானவொரு விளையாட்டாகும். எலும்பு மீன்கள் ஆழமற்ற கரையோரத்தில் வாழ்ந்து வருவதால் இதைப் பிடிக்க ஆழமற்ற கரையோரத்தில் கால்களால் நடந்தும் படகுகள் மூலம் சென்றும் பிடிக்கின்றனர். இந்த மீன்பிடி முறையானது ஒரு விளையாட்டாகக் மேற்கொள்ளப்படுவதால் பிடித்தபின்னர் மீன்கள் மீண்டும் விடுவிக்கப்படுகின்றன. மேலும் அவற்றை உணவாக உண்பதும் உண்டு. இம் மீன்களைச் சுட்டும் பல்வேறு வகைகளில் சமைத்தும் உண்ணுகின்றனர்.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ Adams, A., et al. 2012. Albula vulpes. In: IUCN 2012. IUCN Red List of Threatened Species. Version 2012.2. Downloaded on 2 June 2013.
- ↑ Chico Fernandez, Fly-fishing for Bonefish, 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 081170095X.
வெளி இணைப்பு
[தொகு]- Adams, A., et al. 2012. Albula vulpes. In: IUCN 2012. IUCN Red List of Threatened Species. Version 2012.2. Downloaded on 2 June 2013.
- Chico Fernandez, Fly-fishing for Bonefish, 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 081170095X.
- Bonefish and Tarpon Conservation Research
- Hawaiian Bonefish Tagging Program