எலும்புக்கூடு ஆய்வு
எலும்புக்கூடு ஆய்வு (Skeletal survey) என்பது உடலின் பெரும்பாலான அல்லது அனைத்து முக்கிய எலும்புகளின் தொடர்ச்சியான எக்சு-கதிர் படங்களின் தொகுப்பு ஆகும். எலும்புக்கூடு ஆய்வுக்கான நிலையான எக்சு-கதிர் தொகுப்பில், மண்டையோடு, முதுகுத்தண்டு, மார்புக்கூடு, இடுப்பு, கை மற்றும் கால் போன்ற உடலின் முக்கிய எலும்புகளின் பல எக்சு-கதிர் படங்களை எடுத்து, முழு எலும்புக்கூட்டின் நிலையை மதிப்பீடு செய்யப்படுகிறது. இது எலும்புகளில் ஏற்படும் நோய்கள், காயங்கள் அல்லது அசாதாரண மாற்றங்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மருத்துவப் பரிசோதனை முறையாகும். எலும்புப் பரிசோதனை என்ற பெயராலும் இந்த ஆய்வு அறியப்படுகிறது.[1] எலும்பு மச்சையில் உள்ள பிளாசுமா செல்களைப் பாதிக்கும் ஓர் அரிய வகை இரத்தப் புற்றுநோயை கண்டறிய இந்த ஆய்வு பயன்படுகிறது. மல்டிபிள் மைலோமா எலும்பு பாதிப்பைக் கண்டறிவதில் ஐசோடோப் வருடல்களை விட இந்த ஆய்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. காந்த அதிர்வு அலை வரைவை விட கணிசமாகக் குறைவான உணர்திறன் கொண்டதாக இருந்தாலும், அதிக எலும்புகளை உள்ளடக்குவது எளிதானது. ஓர் ஆய்வில், முதுகெலும்பு மற்றும் இடுப்புப் பகுதியை மட்டும் காந்த அதிர்வு அலை வருடல் செய்வது, விரிவான எலும்புக்கூடு ஆய்வை விட 9% குறைவான எலும்பு பாதிப்புகளைக் கண்டறியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே விரிவான எலும்புக்கூடு ஆய்வு ஒரு நிலையான முறையாக உள்ளது.[2]
குழந்தைகளில் விபத்து அல்லாத காயம் எனச் சந்தேகிக்கும்போது எலும்புக்கூடு ஆய்வுகளும் பயன்படுத்தப்படுகின்றன.[3] வழிகாட்டுதல்கள், குழந்தையின் 19 எக்சு கதிர் படங்கள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றன. இவை ஒரு குழந்தை மருத்துவ கதிரியக்க நிபுணரால் அறிக்கையிடப்படுகின்றன. மேலும் பெரும்பாலும் நகல்களும் எடுக்கப்படுகின்றன. இன்னும் நடக்கத் தொடங்காத ஒரு குழந்தைக்கு ஏற்படும் சுழல் முறிவு போன்ற, காயத்திற்குக் கொடுக்கப்பட்ட விளக்கத்துடன் மருத்துவக் கண்டுபிடிப்புகள் ஒத்துப்போகாத ஒரு காயத்தை ஒரு குழந்தை அடைந்தால், விபத்து அல்லாத காயம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
குழந்தைக்கு ஒரு வயதிற்குட்பட்டிருந்தால் அல்லது, குழந்தைக்கு வயது அதிகமாக இருந்து, குழந்தை துன்புறுத்தல் காரணமாக ஏற்பட்டிருக்கக்கூடிய மறைமுக எலும்புக் காயங்களை மதிப்பிட கதிர்ப்படங்களுடன் சேர்த்து கணிப்பொறி வரைவு வருடல் பரிசோதனை மேற்கொள்ளலாம்.
குழந்தை குழந்தை துன்புறுத்தலுக்கான ஆதாரமாக நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bone Survey". OncoLink.
- ↑ "Skeletal survey in advanced multiple myeloma: radiographic versus MR imaging survey". British Journal of Haematology 106 (1): 35–9. July 1999. doi:10.1046/j.1365-2141.1999.01529.x. பப்மெட்:10444160. https://archive.org/details/sim_british-journal-of-haematology_1999-07_106_1/page/35.
- ↑ "Guidelines for skeletal survey in young children with fractures". Archives of Disease in Childhood: Education and Practice Edition 100 (5): 253–6. October 2015. doi:10.1136/archdischild-2014-307533. பப்மெட்:25588585.