எலுமிச்சை நீலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலுமிச்சை நீலன்
எலுமிச்சை நீலன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. lajus
இருசொற் பெயரீடு
Chilades lajus
(Cramer 1782)
வேறு பெயர்கள்
  • Chilades laius (lapsus)
  • Hesperia cajus Fabricius, 1793
  • Lycaena brahmina C. & R. Felder, [1865]
  • Polyommatus kandura Moore, [1866]

எலுமிச்சை நீலன் என்பது இந்தியாவில் பரவலாக காணப்படும் நீலன்கள் குடும்பத்தை சேர்ந்த சிறு வண்ணத்துப்பூச்சி ஆகும். இவை இந்தியா, இலங்கை, மியான்மர், தாய்வான், ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களில் காணப்படுகின்றன.[1]

தோற்றம்[தொகு]

இவற்றின் சிறகளவு 26-30 மிமீ வரை இருக்கும்.[1]

ஆண் பூச்சிகளின் சிறகின் மேற்புறம் ஊதா கலந்த நீல நிறத்துடன் காணப்படும். வெளி விளிம்பு பகுதியில் பழுப்பு கலந்த கருப்பு நிற பட்டை ( சில வேளைகளில் மங்கிய நிறத்தில் காணப்படலாம் ) காணப்படும். பெண் பூச்சிகளின் சிறகின் மேற்புறம் பழுப்பு நிறத்திலும், சிறகின் அடித்தள பகுதியில் சிறிது ஊதா நீல நிறம் கலந்தும் காணப்படும். ஆண் மற்றும் பெண் பூச்சிகளின் சிறகின் அடிப்புறம் வெளிர் பழுப்பு நிறத்ததுடன், கரும்புள்ளிகள் மற்றும் பழுப்பு திட்டுகள் கொண்டிருக்கும்.[2]

முன் மற்றும் பின் சிறகின் அடிப்புறத்தில் சிறகின் வெளி விளிம்பிற்கு சற்று கீழே இரு கரும்புள்ளிகள் இணைந்து ஆங்கில எழுத்து "L" போன்ற வடிவத்தில் அமைந்திருக்கும். இப்புள்ளிகளை கொண்டு பெரும்பாலான நேரங்களில் இவற்றை எளிதில் அடையாளம் காணலாம்.

நடத்தை[தொகு]

  • சூரிய ஒளியை அதிகம் நாடி இருப்பவை. திறந்த வெளிகளில் சிறகை விரித்து வெயில் காய்வதை காணலாம்.
  • புல்வெளிகளிலும், இவற்றின் உணவு தாவரங்களான தேசி மற்றும் மாதுளை உள்ள இடங்களில் இவற்றை பெரும்பாலும் காணமுடியும்.
  • மெதுவாக சிறகடித்து தரையை ஒட்டி பறப்பவை.

படங்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 I.J. GUPTA & MRIDULA MAJUMDAR (2012). HANDBOOK ON DIVERSITY IN SOME OF THE INDIAN BUTTERFLIES. Director, Zoological Surv. India, Kolkata. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788181712981. 
  2. முனைவர் பானுமதி (2015). வண்ணத்துப்பூச்சிகள்: அறிமுகக் கையேடு. சென்னை: கிரியா. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789382394136. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலுமிச்சை_நீலன்&oldid=2547670" இலிருந்து மீள்விக்கப்பட்டது