எலியாவின் சீனோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலியாவின் சீனோ
Zeno of Elea
சீனொ உண்மைக்கும் பொய்மைக்கும் (Veritas et Falsitas) உள்ள வாயிலைக் காட்டுகிறார். எல் எசுகோரியல், மாட்ரிடு நூலகச் சுதை ஓவியம்
பிறப்புஅண். கிமு 490
எலியா
இறப்புஅண். கிமு 430 (அகவை ~60)
எலியா அல்லது சிராக்கியூசு
காலம்சாக்ரட்டீசுக்கு முந்தைய மெய்யியல்
பகுதிமேற்கத்தைய மெய்யியல்
பள்ளிஎலியாதிக்கப் பள்ளி
முக்கிய ஆர்வங்கள்
மீவியற்பியல், உள்ளியம் (மெய்யியல்)
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
சீனோவின் முரண்போலிகள்
செல்வாக்குச் செலுத்தியோர்
  • பர்மெனிடசு
செல்வாக்குக்கு உட்பட்டோர்

எலியாவின் சீனோ (Zeno of Elea, கிரேக்க மொழி: Ζήνων ὁ Ἐλεάτης; அண். கிமு 490 – அண். கிமு 430) ஒரு சாக்ரட்டீசுக்கு முந்தையக் கிரேக்க மெய்யியலாளர். இவர் மேக்னா கிரேசியாவைச் சேர்ந்தவர். இவர் பர்மெனிடெசு நிறுவிய எலியாதிக்கப் பள்ளியைச் சார்ந்தவர். அரிசுட்டாட்டில் இவரை இணைமுரணியலைக் கண்டறிந்தவராகக் குறிப்பிடுகிறார்.[1] இவர் தனது சீனோ முரண்புதிர்களுக்காகப் பெயர்பெற்றவர். இவற்றை பெர்ட்ரண்டு ரசல் "அளவற்ற நுட்பமும் திட்பமும் வாய்ந்தன"வாகக் கூறுகிறார்".[2]

வாழ்க்கை[தொகு]

சீனோவின் வாழ்க்கையைப் பற்றிய தகவல் ஏதும் கொஞ்சமும் கூட கிடைக்கவில்லை. சீனோவின் இறப்புக்குப் பின் ஒரு நூற்றாண்டு கழித்து பிளாட்டோ எழுதிய பர்மெனிடெசு நூல்மட்டுமே முதன்மையான தகவல் வாயிலாகும்.[3] மேலும் அரிசுட்டாட்டிலின் இயற்பியல் நுலிலும் இவர் குறிப்பிடப்படுகிறார்.[4] பர்மெனிடெசின் உரையாடலில் பர்மெனிடெசும் சீனோவும் ஏதென்சுக்கு வருகை தந்ததைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அப்போது பர்மெனிடெசுக்கு அகவை 65. சீனொவுக்கு அகவை 40. சாக்ரட்டீசு அப்போது மிகவும் இளைஞராக இருந்துள்ளார்.[5] சாக்ரட்டீசின் அகவையை 20 ஆகக் கொண்டால், சாக்ரட்டீசு பிறந்தது கி.மு469இல் எனவும் கொண்டால் சீனோவின் பிறப்பு கி.மு 490 ஆகிறது. "சீனோ உயரமாகவும் அழகாகவும் இளமையாக இருந்த்தாகவும் பர்மெனிடெசால் மிக விரும்பப்பட்டவராகவும்" பிளாட்டோ கூறுகிறார்."[5]

நூல்கள்[தொகு]

சீனோவின் எழுத்துகளைப் பற்றி பல பண்டைய எழுத்தாளர்கள் மேற்கோள் கடினாலும் அவரது நூல்கள் ஏதும் முழுமையாகக் கிடைக்கவில்லை. சீனோவும் பர்மெனிடெசுவும் ஏதென்சுக்கு முதல் தடவை வந்தபோது சீனோவின் நூல்களைக் கொண்டுவந்த்தாகப் பிளாட்டோ கூறுகிறார்.[5] சீனொ பிளாட்டோவிடம் "இவை பர்மெனிடெசுவின் வாதங்களைக் காப்பாற்றவே" எனக் கூறியுள்ளார்.[5] இவை சீனோவின் இளமையில் எழுதப்பட்டன. இவரது ஒப்புதல் இன்றியே திருடி வெளியிடப்பட்டுள்ளன. சீனோவின் நூலில் இருந்து "முதல் வாதத்துக்கான முதல் ஆய்கோளைச்" சாக்ரட்டீசு பின்வருமாறு கூறியதைப் பிளாட்டொ கேட்டுள்ளார்: "இது பலவானால், இதில் ஒத்தனவும் ஒவ்வாதனவும் கலந்திருக்க வேண்டும். எனவே இது நிலவ இயலாதது எனலாம் ஏனெனில், ஒத்தது ஒவ்வாததாகவோ, ஒவ்வாதது ஒத்ததாகவோ இருக்க வாய்ப்பில்லை."[5] பிளாட்டோவின் பர்மெனிடெசு பற்றிய உரையில், புரோக்கிளசு, "முரண்பாடுகள் உள்ள நாற்பது வாதங்களை" சீனோ உருவாக்கியதாகக் கூறுகிறார்.[6] ஆனால் இப்போது ஒன்பது மட்டுமே அறியப்பட்டுள்ளன.

சீனோவின் முரண்புதிர்கள்[தொகு]

இரண்டாயிரம் ஆண்டுகளாக சீனோவின் முரண்புதிர்கள் மெய்யியலாளர்களையும் கணிதவியலாளர்களையும் இயற்பியலாளர்களையும் குழப்பி, அறைகூவி, ஆர்வமூட்டி, மிரட்டி, தாக்கம் செலுத்தி மகிழ்ச்சியுட்டி வந்துள்ளன. இவற்றில் மிகவும் பெயர்பெற்றவை அரிசுட்டாட்டிலின் இயற்பியலை எதிர்த்தனவாகும்.[7]

குறிப்புகள்[தொகு]

  1. Diogenes Laërtius, 8.57, 9.25
  2. Russell (1996 [1903]), p. 347: "மன்னா உலகில் இறந்த பின்னும் மன்னுபுகழ் வாய்த்தலே சிறப்பு. பழங்காலத் தீர்ப்புக்கு இறந்தபின் பலியானவருள் எலியாதிகப் பள்ளி சினோ குறிப்பிடத் தக்கவர். இவர் நுட்பமும் திட்பமும் வாய்ந்த நான்கு விவாத முறைகளைக் கண்டவர். பிற்கால மெய்யியல் மரபு இவரை அறிவுத் திறமுடைய விதண்டாவாதியாக எள்ளும் மடமையும் இவரது வாதங்கள் முழுக்கமுழுக்க வெறும்குறுந்தருக்கங்கள் என மதிப்பிட்டதும் வியப்பானதாகும். இரண்டாயிர ஆண்டு மறுப்புகளுக்குப் பிறகு அவை இன்று மீண்டும் புத்துயிர்ப்புற்று கணிதவியல் புத்தொளியை ஏற்றிவைத்த அடிப்படைகளாகியமையை எப்படி போற்றுவது?..."
  3. Plato (c. 380 – 367 BC). Parmenides பரணிடப்பட்டது 2004-08-03 at the வந்தவழி இயந்திரம், translated by Benjamin Jowett. Internet Classics Archive.
  4. Aristotle (c. mid 4th century BC), Physics 233a and 239b
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 Plato, Parmenides 127b–e
  6. Proclus, Commentary on Plato's Parmenides, p. 29
  7. Aristotle. Physics பரணிடப்பட்டது 2011-01-06 at the வந்தவழி இயந்திரம், translated by R.P. Hardie and R.K. Gaye. Internet Classics Archive.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சீனோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலியாவின்_சீனோ&oldid=3706460" இலிருந்து மீள்விக்கப்பட்டது