எலிபாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலிபாசு
புதைப்படிவ காலம்:பிலியோசீன் முதல் தற்காலம் வரை
ஆசிய யானை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: புரோபோசிடே
குடும்பம்: எலிபேண்டிடே
பேரினம்: எலிபாசு
லின்னேயஸ், 1758
மாதிரி இனம்
எலிபாசு மாக்சிமசு
லின்னேயஸ், 1758
சிற்றினம்

8; உரையினை காண்க

வேறு பெயர்கள்

கைப்செலிபாசு

எலிபாசு (Elephas) என்பது யானைகளின் எலிபன்டிடே, குடும்பத்தில் எஞ்சியிருக்கும் இரண்டு பேரினங்களில் ஒன்றாகும். இதில் உயிருடன் உள்ள ஒரே சிற்றினம் ஆசிய யானை, எலிபாசு மாக்சிமசு என்பதாகும்.[1]

பல அழிந்துபோன சிற்றினங்கள் பிளியோசீன் சகாப்தம் வரை நீண்டு, பேரினத்தைச் சேர்ந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. முன்பு எலிபாசு பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்ட எலிபாசு ரெக்கி, நேரான தந்தம் கொண்ட யானை எலிபாசு ஆண்டிக்குசு, பழங்கால யானை மற்றும் குள்ள யானைகள் எலிபாசு பால்கோனேரி மற்றும் எலிபாசு சைப்ரியோட்சு இப்போது தனி பேரினமான பேலியோலோக்சோடானில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பேரினம் மாமூத் பேரினத்துடன் மிக நெருங்கிய தொடர்புடையது.[2]

வகைப்பாட்டியல்[தொகு]

எலிபாசு என்ற பேரினப் பெயர் கரோலஸ் லின்னேயஸ் என்பவரால் 1758-ல் முன்மொழியப்பட்டது. இவர் இந்தப் பேரினத்தையும் இலங்கையிலிருந்து வந்த யானையையும் விவரித்தார்.[3] எலிபான்டிடே என்ற புரோபோசிடியன் குடும்பத்தின் கீழ் இந்த பேரினம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு உயிருடன் உள்ள மற்றும் அழிந்துபோன ஏழு சிற்றினங்களை கொண்டது.[4]

பின்வரும் ஆசிய யானைகள் அழிந்துபோன துணையினங்களாக முன்மொழியப்பட்டன. ஆனால் இப்போது இவை இந்திய யானைக்கு ஒத்ததாகக் கருதப்படுகின்றன:[1]

 • எலிபாசு மாக்சிமசு சோண்டைகசு சாவகம் யானை
 • எலிபாசு மாக்சிமசு ரூப்ரிடன்சு - சீன யானை
 • எலிபாசு மாக்சிமசு அசுரசு - சிரிய யானை

பின்வரும் எலிபாசு இனங்கள் அழிந்துவிட்டன:

 • எலிபாசு பேயேரி - 1911-ல் லூசோன், பிலிப்பீன்சில் வான் கொனிக்சுவால்டு[6] என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவ எச்சங்களிலிருந்து விவரிக்கப்பட்டது.
 • எலிபாசு செலிபென்சிசு - சுலவேசி குள்ள யானை, 1949-ல் ஹூய்ஜரால் தெற்கு சுலவேசியிலிருந்து விவரிக்கப்பட்டது;[7] இசுடெகோலோக்சோடான் செலிபென்சிசு என்றும் அழைக்கப்படுகிறது
 • எலிபாசு எகோரென்சிசு - குபி அல்கிபார்மேசன், துர்கானா, கென்யாவிலிருந்து விவரிக்கப்பட்டது[4]
 • எலிபாசு கைசுட்ரிகசு - பால்கோனர் மற்றும் காட்லி, 1845-ல் சிவாலிக் மலைகளில் காணப்படும் புதைபடிவ எச்சங்களிலிருந்து விவரிக்கப்பட்டது[8]
 • எலிபாசு கைசுட்ரிண்டிகசு - சாவகம் பிலிசுடோசின் புதைபடிவ யானை மற்றும் எலிபாசு மாக்சிமசு சோன்டைகசிலிருந்து வேறுபட்டது[9]
 • எலிபாசு அயோலென்சிசு
 • எலிபாசு பிளாட்டிசெபாலசு

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 வார்ப்புரு:MSW3 Proboscidea
 2. Fleischer, R. C.; Perry, E. A.; Muralidharan, K.; Stevens, E. E.; Wemmer, C. M. (2001). "Phylogeography of the Asian Elephant (Elephas maximus) based on mitochondrial DNA". Evolution 55 (9): 1882–1892. doi:10.1111/j.0014-3820.2001.tb00837.x. பப்மெட்:11681743. https://archive.org/details/sim_evolution_2001-09_55_9/page/1882. 
 3. Linnaei, C. (1760). "Elephas maximus". Caroli Linnæi Systema naturæ per regna tria naturæ, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis. Tomus I. Halae Magdeburgicae: Ioannes Ioachimus Langius. பக். 33. https://archive.org/stream/carolilinnaeisys11linn#page/n80/mode/1up. 
 4. 4.0 4.1 Maglio, V.J. (1973). "Origin and evolution of the Elephantidae". Transactions of the American Philosophical Society, Philadelphia Volume 63. American Philosophical Society, Philadelphia, pp. 149
 5. Fernando, P., Vidya, T.N.C., Payne, J., Stuewe, M., Davison, G., et al. (2003). DNA Analysis Indicates That Asian Elephants Are Native to Borneo and Are Therefore a High Priority for Conservation. PLoS Biol 1 (#1): e6
 6. Von Königswald, G.H.R. (1956). Fossil mammals from the Philippines. National Research Council of the Philippines, Manila
 7. Hooijer, D.A. (1949). Pleistocene Vertebrates from Celebes. IV. - Archidiskodon celebensis nov spec.. Zoologische Mededelingen Museum Leiden, 30 (#14): 205–226.
 8. Falconer, H. & Cautley, P. T. (1846). Fauna Antiqua Sivalensis, Being the Fossil Zoology of the Sewalik Hills. Smith, Elder & Company, London, pp. 64.
 9. Hooijer, D. A. (1955). Fossil Proboscidea from the Malay Archipelago and the Punjab. Zoologische Verhandelingen, 28 (#1): 1–146.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிபாசு&oldid=3520954" இருந்து மீள்விக்கப்பட்டது