எலின் போலக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எலின் போலக்
பிறப்பு1992
இறப்பு (அகவை 28)
இசுதான்புல், துருக்கி
இறப்பிற்கான
காரணம்
உண்ணாநிலைப் போராட்டம்
கல்லறைஇசுதான்புல்
பணிபாடகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2015 — 2020

எலின் போலக் (Helin Bölek) (1992 – ஏப்ரல் 3, 2020) ஒரு இடதுசாரி அரசியல் துருக்கிய நாட்டுப்புற இசைக் கலைஞர் ஆவார். இவர் குரூப் யோரம் என்ற இசைக்குழுவில் இருந்தார். [1][2]

வாழ்வு மற்றும் போராட்டம்[தொகு]

தென்கிழக்கு துருக்கியின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான தியார்பர்கரைச் சார்ந்த குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். இளமைப் பருவத்திலேயே கலையைத் தன் பணியாகக் கொண்டார். குரூப் யோரம் என்ற இசைக்குழுவில் ஒரு தனிப்பாடகராகப் பங்கெடுத்திருந்தார். ஒரு தீவிரவாதக் குழுவில் பங்கெடுத்திருந்ததாகவும், காவல்துறையை எதிர்த்தாகவும், இழிவுபடுத்தியதாகவும் கூறி நவம்பர் 2016 இல் இசைக்குழுவில் இருந்த இதர 7 நபர்களோடு சேர்த்து இவர் இசுதான்புல், ஐடில் கலாச்சார மையத்தில் வைத்து முதன்முதலாக கைது செய்யப்பட்டார். இசைக்கலைஞர்கள் பாகர் குர்ட், பாரிஸ் யக்செல் மற்றும் அலி அராசி ஆகியோர் அரசு கலாச்சார மையங்களில் நடத்தும் திடீர் ஆய்வு மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான தடை போன்ற துன்புறுத்தல்களை முடிவிற்குக் கொண்டுவரும் பொருட்டு அரசுக்கெதிராக கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தினை அறிவித்தனர்.

போலக் இந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் சூன் 2019 இல் பங்கேற்றார். [3] இவர் 2019 இல் நவம்பர் விடுவிக்கப்பட்டார். ஆனால், உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார். [4] 2020 மார்ச் 11 இல் இப்ராகிம் கோக்செக் மற்றும் எலின் போலக் ஆகியோர் 2020 ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று காலை இசுதான்புல்லில் ஆர்முட்லுவில் அவர்களுடைய வீட்டிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு உம்ராணியே மாநில மருத்துவமனையில் காவல் துறையினரால் சேர்க்கப்பட்டனர்.[5] [6]குரூப் யோரம் இசைக்குழுவின் வழக்கறிஞர் டிடேம் உன்சால் தன் அறிக்கையில் இந்த இசைக்குழுவின் இரண்டு உறுப்பினர்களும் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை ஊர்தியின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, அவசர சிகிச்சை அறைக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் அந்த மருத்துவமனையில் அவர்களிருவரும் தங்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இறப்பு[தொகு]

ரசிப் தைய்யிப் எர்டோகன் தலைமையிலான துருக்கிய அரசு தனது இசைக்குழுவை விரும்பத்தாகத முறையில் நடத்தியதற்கு எதிராக தனது வீட்டில் தொடர்ந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் 288 ஆவது நாளான ஏப்ரல் 3 ஆம் நாள் இறந்தார். [7][8][9] இவரின் இறப்பிற்குப் பிறகு, மிகப்பெரும் கூட்டம் இந்த மரணத்திற்காக துக்கித்து செமெவி (பொதுக்கூடுகைக்கான இடம்) நோக்கி ஒரு பேரணியாகச் செல்லத் தொடங்கினர். காவல் துறை இந்தப் பேரணியைத் தடுத்து பல்வேறு பங்கேற்பாளர்களை தக்க வைத்துக் கொண்டது.[10] இருப்பினும் கூட்டத்தினர் காவல்துறையை சமாளித்து எலின் போலக்கின் சவத்துடன் அந்த இடத்தை அடைந்தனர். [11] கூட்டம் இடுகாட்டிற்குள் நுழைய முற்பட்டதை அறிந்து காவல்துறை அவர்களைத் தடுத்ததோடு மீண்டும் காவல்துறையினர் பேரணியாக வந்த பல பங்கேற்பாளர்களை பிடித்து வைத்துக் கொண்டனர். பிறகு, காவல்துறை எலின் போலக்கை கல்லறைக்கு எடுத்துச் சென்றனர். [10]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Helin Bölek of Turkish band Grup Yorum dies after hunger strike" (en).
 2. Press, The Associated (2020-04-03). "Member of Turkish Band Dies on 288th Day of Hunger Strike" (in en-US). The New York Times. https://www.nytimes.com/aponline/2020/04/03/world/europe/ap-eu-turkey-hunger-strike.html. 
 3. "Kurdish singer dies 288 days into hunger strike in Turkey".
 4. "Turkish Musician Dies Following Hunger Strike" (en) (2020-04-03).
 5. "Helin Bölek of Turkish band Grup Yorum dies after hunger strike" (en).
 6. "Tribute to Helin Bölek of Group Yorum" (en).
 7. "Member of banned Turkish folk group dies after hunger strike" (April 3, 2020).
 8. Kamer, Hatice (April 3, 2020). "288 gündür ölüm orucunda olan Grup Yorum üyesi Helin Bölek hayatını kaybetti" (tr).
 9. "Death Fasting Grup Yorum Member Helin Bölek Loses Her Life".
 10. 10.0 10.1 "Police detain many people at the funeral of Helin Bölek" (en).
 11. "Tribute to Helin Bölek of Group Yorum" (en).
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலின்_போலக்&oldid=2948295" இருந்து மீள்விக்கப்பட்டது