எலினோர் பைர்ன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலினோர் பைர்ன்ஸ்
பிறப்பு1876 (1876)
இண்டியானாவின் லாஃபாயெட்
இறப்புமே 27, 1957(1957-05-27) (அகவை 80–81)
தேசியம்அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்சிக்காகோ பல்கலைக்கழகம், நியூயார்க் பல்கலைக்கழகம்
பணிவழக்குரைஞர், வாக்குரிமையாளர்

எலினோர் பைர்ன்ஸ் ( Elinor Byrns ) (1876 - மே 27, 1957) ஒரு அமெரிக்க வழக்கறிஞரும், அமைதிவாதியும், பெண்ணியவாதியும், பெண்கள் அமைதி சங்கம் மற்றும் பெண்கள் அமைதி ஒன்றியத்தின் இணை நிறுவனரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

எலினோர் பைர்ன்ஸ் 1876 இல் இண்டியானாவின் லாஃபாயெட்டில் பிறந்தார், இண்டியானாபோலிஸில் உள்ள பெண்கள் கிளாசிக்கல் பள்ளியில் பயின்றார். [1] [2] 1900 இல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின்னர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞராக பட்டம் பெற்றார். [3]

தொழில்[தொகு]

எலினோர் பைர்ன்ஸ் நியூயார்க் நகரத்தில் உள்ள ஒரு கார்ப்பரேட் சட்ட நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். அங்கு, சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை அறிந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். [4] இவர் 1916 ஆம் ஆண்டு தி நியூ ரிபப்ளிக் இதழுக்கு "தி வுமன் லாயர்" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், எலினோர் பைர்ன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது அவருக்குக் கிடைத்த அனுபவத்திலிருந்து "வழக்கறிஞர் தொழிலானது ஒரு ஆட்டமாக இருந்தால் நான் அப்பணியைச் செய்ய விரும்பவில்லை" என்று குறிப்பிட்டார்.[5] [6]

செயற்பாடு[தொகு]

பைர்ன்ஸ் 1910 ஆண்டில், நியூ யார்க் நகரத்தின் பெண்ணிய வட்டங்களில் "ஹெட்டரோடாக்சி" என்ற பெண்ணியக் குழு உறுப்பினராகச் செயல்பட்டார், [7] மேலும், ஐந்தாவது அவென்யூவில் முதல் வாக்குரிமை அணிவகுப்பைத் திட்டமிட உதவினார். [8] இவர் நியூ யார்க் மாநிலத்தின் கல்லூரி சம வாக்குரிமை சங்கத்துடன் தீவிரமாக இணைந்து, செயற்பாட்டில் பங்குபெற ஆர்வமுள்ள இளம்பெண்களுக்குப் பயிற்சியளிக்கும் "வாக்குரிமைக் கல்லூரிகளை" ஊக்குவித்தார். இவர் தேசிய அமெரிக்க பெண் வாக்குரிமை சங்கத்தின் தேசிய விளம்பர இயக்குநராக இருந்தார். முதலாம் உலகப் போரை அச் சங்கம் ஆதரித்தால் தன் பணியை 1917 இல் ராஜினாமா செய்தார். அதே சமயத்தில் அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான மகளிர் சர்வதேசச் சங்கத்திலிருந்தும் ராஜினாமா செய்தார். [9] [10]

முக்கியப் பெண்ணிய அமைப்புகளிலிருந்து பிரிந்தவர், 1919 இல் உருவாக்கப்பட்ட மகளிர் அமைதி சங்கத்தின் [11] தலைவராகவும், 1921 இல் மகளிர் அமைதி ஒன்றியத்தின் இணை நிறுவனராகவும் பணியாற்றி, அமைதிவாதத்தில் தனது கவனத்தைச் செலுத்தினார். 1923 ஆம் ஆண்டில், இவரும் கரோலின் லெக்ஸோ பாப்காக் இருவரும் இணைந்து போரை அறிவிக்க அல்லது நிதியளிக்க அமெரிக்க காங்கிரசுக்குள்ள அதிகாரத்தை அகற்றும் அரசியலமைப்பு திருத்த வரைவை உருவாக்கினர்.[12] 1924 இல், போரை எதிர்ப்போர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுவிலும் பைர்ன்ஸ் இருந்தார் [13]

1927 இல் நடந்த அமெரிக்க செனட் விசாரணையில், தனது அமைதிப் பணியின் பின்னணியில் உள்ள உந்துதலைப் பற்றி எலினோர் பைர்ன்ஸ் விளக்கினார்:

உயிரை மதிக்கக் கற்றுக் கொள்ளும் அரசாங்கம், தனது குடிமக்களைப் போரின் அசாதாரணத்தில் ஈடுபட அனுமதிப்பதன் முட்டாள்தனத்தையும் அக்கிரமத்தையும் உணர்ந்து, விவேகமான அரசாங்கமாக இருக்கும். வாழ்க்கையை, மதிப்புமிக்கதாக மாற்ற முடியும் என்பதை அது அறியும். அதன் குடிமக்கள் கொலை, மற்றும் பிறரின் ஆளுமையை மீறுதல் போன்ற அசிங்கமான பழக்கங்களை கைவிட்டு, ஆக்கப்பூர்வமான, செயல்களில் கவனம் செலுத்தாத வரை, வளர்ச்சியின் உச்ச நிலையை அடைய முடியாது என்பதை அது புரிந்து கொள்ளும். [14]

இறப்பு[தொகு]

பைர்ன்ஸ் 1957 இல் தனது 80வது வயதில் இறந்தார்.

சான்றுகள்[தொகு]

  1. "Girls' Classical School Exercises," Indianapolis Journal (May 27, 1894): 8.
  2. University of Chicago, Alumni Council, Alumni Directory (1910): 101.
  3. Linda J. Lumsden, Inez: The Life and Times of Inez Milholland (Indiana University Press 2004): 65. ISBN 0253344182
  4. Virginia G. Drachman, Sisters in Law: Women Lawyers in Modern American History (Harvard University Press 2001): 227-229. ISBN 0674006941
  5. Elinor Byrns, "The Woman Lawyer," The New Republic 5(January 8, 1916): 246-247.
  6. Virginia G. Drachman, Sisters in Law: Women Lawyers in Modern American History (Harvard University Press 2001): 227. ISBN 0674006941
  7. Nancy F. Cott, The Grounding of American Feminism (Yale University Press 1987): 38. ISBN 0300042280
  8. Linda J. Lumsden, Inez: The Life and Times of Inez Milholland (Indiana University Press 2004): 65. ISBN 0674006941
  9. Linda Kay Schott, Reconstructing Women's Thoughts: The Women's International League for Peace and Freedom Before World War II (Stanford University Press 1997): 81. ISBN 0804727465
  10. Megan Threlkeld, Pan American Women: U. S. Internationalists and Revolutionary Mexico (University Press of Pennsylvania 2014): 21. ISBN 0812246330
  11. Peter Brock and Thomas Paul Socknat, eds., Challenge to Mars: Essays on Pacifism from 1918 to 1945 (University of Toronto Press 1999): 202. ISBN 0802043712
  12. Harriet Hyman Alonso, The Women's Peace Union and the Outlawry of War, 1921 — 1942 (University of Tennessee Press 1990): 25. ISBN 0870496174
  13. Scott H. Bennett, Radical Pacifism: The War Resisters League and Gandhian Nonviolence in America, 1915 — 1963 (Syracuse University Press 2003): 19. ISBN 0815630034
  14. Harriet Hyman Alonso, The Women's Peace Union and the Outlawry of War, 1921 — 1942 (University of Tennessee Press 1990): 52. ISBN 0870496174
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலினோர்_பைர்ன்ஸ்&oldid=3676480" இலிருந்து மீள்விக்கப்பட்டது