எலினா டேனியலியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எலினா டேனியலியன்
Elina Danielian
Էլինա Դանիելյան
Elina Danielian 2013.jpg
2013 இல் கிராண்டு மாசுட்டர் எலினா டேனியலியன்
நாடுஅர்மீனியா
பிறப்பு16 ஆகத்து 1978 (1978-08-16) (அகவை 42)
அசர்பைசான், பக்கூ நகரம்
தலைப்புகிராண்டு மாசுட்டர்
FIDE தரவுகோல்2467 (நவம்பர் 2020)
எலோ தரவுகோள்2521 (சூலை 2011)

எலினா டேனியலியன் (Elina Danielian) என்பவர் அர்மீனியாவின் பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1978 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 16 ஆம் நாள் பக்கூ நகரில் பிறந்தார்[1]. 1993, 1994. 1999, 2002, 2003, 2004 ஆகிய ஆறு ஆண்டுகளிலும் நடைபெற்ற அர்மீனிய பெண்கள் சதுரங்க சாம்பியன் பட்டத்தை இவர் வென்றார்[2]. 1992 முதல் 2014 வரை நடைபெற்ற பெண்கள் சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் அர்மீனியாவின் சார்பாக இவர் 12 முறை பங்கேற்றுள்ளார்[3]. 2003 ஆம் ஆண்டு புளோவ்டிவ் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய பெண்கள் அணி சதுரங்கச் சாம்பியன் பட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அர்மீனிய அனியில் இவர் ஓர் அங்கமாக இருந்தார்[4].

1992 ஆம் ஆண்டு துயிசுபர்க் நகரில் நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்டோர் பெண்கள் உலக சதுரங்கப் போட்டியில் முதலிடம் பிடித்தார். இதேபோல 1993 ஆம் ஆண்டு பிராடிசுலாவாவில் நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்டோர் பெண்கள் உலக சதுரங்கப் போட்டியிலும் வெற்றி பெற்றார். 2001 இல் மின்சுக் நகரில் நடைபெற்ற பெண்கள் ஐரோப்பிய விரைவு சதுரங்கப் போட்டியிலும் வெற்றியைப் பெற்றார்[5].

2011 மார்ச்சு மாத்த்தில் தோகாவில் நடைபெற்ற பிடே பெண்கள் கிராண்டு பிரிக்சு 2009-2011 போட்டியில் முதலிடத்திற்கான நிலையில் சமநிலை பெற்றார்[6][7]. 2011 பெண்கள் ஐரோப்பிய சதுரங்க சாம்பியன் போட்டியில் 8/11 புள்ளிகள் எடுத்து வெண்கலப் பதக்கம் வென்றார்[8].

மேற்கோள்கள்[தொகு]

  1. Danielian, Elina. "About me". ElinaChess.com. பார்த்த நாள் 9 March 2011.
  2. "All Women's Champions of Armenia". Armchess. மூல முகவரியிலிருந்து 30 September 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 28 July 2011.
  3. "Women's Chess Olympiads: Elina Danielian". OlimpBase. பார்த்த நாள் 5 January 2012.
  4. "5th European Team Chess Championship (women), Plovdiv 2003, Armenia". OlimpBase. பார்த்த நாள் 27 April 2011.
  5. "TWIC 362: European Women's Rapid and Blitz". The Week in Chess (2001-10-15). பார்த்த நாள் 9 January 2016.
  6. "Koneru Humpy wins FIDE Grand Prix". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 March 2011. http://articles.timesofindia.indiatimes.com/2011-03-06/chess/28659532_1_hou-yifan-zhu-chen-lilit-mkrtchian. பார்த்த நாள்: 7 March 2011. 
  7. "FIDE Women's Grand Prix 2011". பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு. பார்த்த நாள் 2011-03-06.
  8. "European Woman Chess Championship-2011". Chess-Results.com (2011-05-18). பார்த்த நாள் 21 May 2011.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலினா_டேனியலியன்&oldid=2726699" இருந்து மீள்விக்கப்பட்டது