உள்ளடக்கத்துக்குச் செல்

எலினா ஏப்பிரைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலினா ஏப்பிரைல்
பிறப்பு(1954-03-12)மார்ச்சு 12, 1954
மிலான், இத்தாலி
துறைஇயற்பியல்
பணியிடங்கள்கொலம்பியா பல்கலைக்கழகம்]]
கல்வி கற்ற இடங்கள்நேப்புள்சு பல்கலைக்கழகம்
ஜெனீவா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுசெனான் கரும்பொருண்மத் தேட்டம்

எலினா ஏப்பிரைல் (Elena Aprile) (பிறப்பு: மார்ச்சு 12, 1954, மிலான்) ஓர் இத்தாலியச் செய்முறைத் துகள் இயற்பியலாளர் ஆவார். இவர் 1986 இல் இருந்து கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ளார். இவர் செனான் கரும்பொருண்மச் செய்முறையின் நிறுவல் அமைப்பாளரும் பரப்புரையாளரும் ஆவார். இவர் நோபுள் வளிம/நீர்மக் காணிகள் ஆய்வுக்கும் கரும்பொருண்ம வானியற்பியல் ஆராய்ச்சிக்கும் பெயர்பெற்றவர் ஆவார்.[1][2]

கல்வியும் கல்விப்பணியும்

[தொகு]

இவர் நேப்புள்சு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படித்துள்ளார். இவர் செர்ன் ஆய்வகத்தில் கார்லோ உருபியா மேற்பார்வையில் முதுநிலைப் பட்டத்துக்கான ஆய்வைச் செய்துள்ளார்.[3] இவர் இலாரியா எனும் முதுநிலைப் பட்டத்தை1978 இல் பெற்றதும் ஜெனீவா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1982 இல் இயற்பியலில் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர் 1903 இல் முதுமுனைவர் ஆய்வு செய்ய கார்லோ உரூபியா ஆய்வுக்குழுவில் இணந்துள்ளார்ரிவர் 1986 இல் புல உறுப்பினராக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார். அங்கே 2001 இல் முழு பேராசிரியர் தகவைப் பெற்றுள்ளார்.[3] இவர் 2003 முதல் 2009 வரை கொலம்பியா வானியற்பியல் ஆய்வக இணை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.

ஆராய்ச்சி

[தொகு]

இவர் நோபுள் நீர்ம்ம் காணிகளிலும் துகள் இயற்பியலிலுக்கும் வானியற்பியலுக்கும் பயன்படுத்துவதிலும் புலமை மிக்கவர்..[4] இவர் செர்ன் பட்டமேற் படிப்பு மாணவராகவும் ஆர்வார்டு முதுமுனைவர் பட்ட ஆராய்ச்சியாளராகவும் நீர்ம ஆர்கான் காணிகளின் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். கொலம்பியாவில் கதிர்வீச்சுக் கதிர்நிரல் அளவிக்காகவும் வானியற்பியல் படிமம் உருவாக்கவும் நோபுள் நீர்ம இயல்புகளில் ஆய்வு செய்துள்ளார்.[5] இவருக்கு இந்த நோபுள் நீர்ம ஆய்வு மெகாமின்னன்வோல்ட் காம்மாக்கதிர்க்ளுக்கான காம்ப்டன் தொலைநோக்கியாக நீர்ம எறிவுக்கலனைப் பயன்கொள்ளமுடியும் என்ற தெளிவை உணர வைத்துள்ளது.

தகைமைகளும் விருதுகளும்

[தொகு]
  • இவர் 1991 இல் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் வாழ்க்கைப்பணி விருதைப் பெற்றார். இவர் 1999 இல் யப்பான் அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் விருதைப் பெற்றார்ரிவர் 2000 இல் இருந்து அமெரிக்க இயற்பியல் கழகத்தின் ஆய்வுறுப்பினராக உள்ளார்.
  • இவர் 2005 இல் இத்தாலியக் குடியரசு தகைமையாணை பதக்கத்தை இத்தாலியக் குடியரசு தலைவர் கார்லோ அழெகிலியோ சியாம்ப் இடமிருந்து பெற்றார்.[6]
  • சில்வனோ காசுல்லி எனும் இத்தாலியப் பயில்நிலை வானியலாளர் கண்டுபிடித்த சிறுகோள் 268686 எலினாப்பிரைல் 2006 இல் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[7] முறையான அலுவலகப் பெயரீட்டுச் சான்று MoMP|2686867 வெளியீடு, சிறுகோள் மையத்தால் 2017 நவம்பர் மாதம் 4 அன்று வெளியிடப்பட்டது. (M.P.C. 107121).[8]
  • இவர் 2019 இல் அமெரிக்க வானியல் கழகத்தில் ஆற்றிய தரமிக்க வானியல் பணிக்காக நியூயார்க் சமுதாய அறக்கட்டளையில் இருந்து இலான்சிலாடெம். பெர்க்கேலி பரிசைப் பெற்றார்.[9]
  • இவர் 2020 இல் சாந்தியாகோ வில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக இயற்பியல் துறையில் மார்கரெட் பர்பிட்ஜ் வருகைதரு பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார் .[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kolata, Gina (2011-06-06). "Women Atop Their Fields Dissect the Scientific Life". The New York Times (New York). https://www.nytimes.com/2011/06/07/science/07women.html?pagewanted=all. 
  2. http://discovermagazine.com/2010/jul-aug/20-the-dark-hunter
  3. 3.0 3.1 Nathaniel Herzberg (2017-05-29). "Elena Aprile, la chasseuse de matière noire". Le Monde (in பிரெஞ்சு). பார்க்கப்பட்ட நாள் 2017-05-29.
  4. E. Aprile, A. E. Bolotnikov, A. I. Bolozdynya, T. Doke: Noble Gas Detectors. Wiley 2006.
  5. Aprile, E.; Doke, T. (2010). "Liquid xenon detectors for particle physics and astrophysics". Reviews of Modern Physics 82 (3): 2053–2097. doi:10.1103/RevModPhys.82.2053. Bibcode: 2010RvMP...82.2053A. 
  6. "Ufficiale Ordine al Merito della Repubblica Italiana" (in Italian). 2015. Archived from the original on 2015-03-16.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. "268686 Elenaaprile (2006 GW)". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 5 September 2019.
  8. "MPC/MPO/MPS Archive". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 5 September 2019.
  9. "Elena Aprile of XENON1T to Receive 2019 Berkeley Prize". AAS – American Astronomical Society. 18 June 2018. பார்க்கப்பட்ட நாள் 5 September 2019.
  10. "UC San Diego Announces Margaret Burbidge Visiting Professorship". ucsdnews.ucsd.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-03-05.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலினா_ஏப்பிரைல்&oldid=3952048" இலிருந்து மீள்விக்கப்பட்டது