எலிச்செவிக்கீரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


எலிச்செவிக்கீரை - கொடி வகையைச் சேர்ந்தது.

தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில், பெரிய குளம் பகுதியில் இந்த எலிச் செவிக்கீரை அதிகமாக காணப்படுகிறது. நீலோர்பலம் என்று சொல்லப்படுகிற நீர்த்தாவரங்கள் இடர்த்தியாகக் காணப்படுகிற குளம், குட்டைகளில் எலிச்செவிக்கீரை அதிகமாக இருக்கும்.

    இலைகள் எலியின் செவியைப் போல சுருண்டு காணப்படும். இலைநிறம் நீலம். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காது தொடர்பான நோய்கள் குணமாகும். 
    எலிச்செவிக் கீரை வயலில் காய்வாய் ஓரங்களில் பொதுவாகக் காணப்படும். வலைகளைத் தோண்டி வாழ்கிற நண்டுகள் எலிச் செவிக் கீரையை மிகுந்த விருப்பத்துடன் உண்கின்றன. தண்ணீரில் இருக்கும்போது மீனினங்களும் விரும்பி உண்ணும். மனிதனுக்கு உடல் வளப்பும் வலியும் கொடுக்கும் கீரை, எலிச்செவிக் கீரையுடன் பருப்பு சேர்த்து வதக்கியோ மசியல் செய்தோ சாப்பிடலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிச்செவிக்கீரை&oldid=2374582" இருந்து மீள்விக்கப்பட்டது