எலிசா நெல்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எலிசா நெல்சன் ஒரு ஹாக்கி வீரர் ஆவார். இவர், தேசிய பெண்கள் ஹாக்கி அணியின் முன்னாள் தலைவர் ஆவார். 27 செப்டம்பர் 1956ல் கோவாவைச் சேர்ந்த பெற்றோருக்கு மகராட்டிர மாநிலம் பூனாவில் பிறந்தார். இவர், இந்திய இரயில்வேயின் சார்பாக விளையாடினார். மேலும், 1982ல், புது டெல்லியில் நடைபெற்ற 9ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய தேசிய அணியினை வழிநடத்திச் சென்று, தங்கப் பதக்கத்தினை வெல்லச் செய்தார். இவர், 1980ல் மாஸ்கோவில் நடைபெற்ற கோடை ஒலிம்பிக்கில் 4வது இடத்தைப் பெற்ற இந்திய அணியின் உறுப்பினர். 1981ல் அர்ச்சுனா விருதினைப் பெற்றார். இந்திய அரசு, இந்திய மக்களை கௌரவிக்கும் நான்காவது விருதான பத்மசிறீ விருதினை 1983ஆம் ஆண்டு இவருக்கு வழங்கியது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசா_நெல்சன்&oldid=2758278" இலிருந்து மீள்விக்கப்பட்டது