உள்ளடக்கத்துக்குச் செல்

எலிசபத் குவெலிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Lady
எலிசபெத் குவில்லிம்
பிறப்புஎலிசபெத் சைமண்ட்ஸ்
(1763-04-21)21 ஏப்ரல் 1763
ஹியர்ஃபோர்ட், இங்கிலாந்து
இறப்பு21 திசம்பர் 1807(1807-12-21) (அகவை 44)
சென்னை, இந்தியா
கல்லறைபுனித மேரி தேவாலயம், மதராசு, இந்தியா
13°04′44″N 80°17′12″E / 13.0788798°N 80.2865716°E / 13.0788798; 80.2865716
செயற்பாட்டுக்
காலம்
1801–1807
அறியப்படுவதுஇந்தியப் பறவைகளை நீர்வண்ணத்தில் வரைந்ததற்கு
வாழ்க்கைத்
துணை
சர் ஹென்றி குவில்லிம்

எலிசபெத், லேடி குவெலிம் (Elizabeth, Lady Gwillim 21 ஏப்ரல் 1763 - 21 திசம்பர் 1807) என்பவர் ஒரு ஆங்கில ஓவியர் மற்றும் இயற்கை ஆர்வலர் ஆவார். இவர் 1801 முதல் 1807 வரை இந்தியாவின் மதராசில் (இப்போது சென்னை ) வாழ்ந்தபோது, இந்தியப் பறவைகளின் சுமார் 200 நீர்வண்ண ஓவியங்களை வரைந்தார். உலக அளவில் ஜான் ஜேம்ஸ் அடுபன் பதிப்பித்து புகழ்பெற்ற தி பேர்ட்ஸ் ஆஃப் அமெரிக்காவில் (1827-1839) உள்ள இயற்கை அளவிலான ஓவியங்களே மிகச் சிறந்தவையாகக் கருதப்பட்டு வந்தன. அதை வெளியிடுவதற்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே குவில்லிமின் இயற்கை அளவிலான ஓவியங்கள் வரையப்பட்டன. இவை கண்டு பிடிக்கபட்ட பிறகு அதன் துல்லியம் மற்றும் இயற்கையான தோற்றத்துடன் உள்ளதற்காகப் பாராட்டப்பட்டன. கூண்டில் உயிரோடு உள்ள பறவைகளை நன்கு அவதானித்து அதன் மூலம் இவர் தனது நீர் வண்ண ஓவியங்களை உருவாக்கினார். சில சமயங்களில் பறவைகளை அவற்றின் இயற்கையான சூழலில் அவதானித்தும் வரைந்துள்ளார்.

இந்தியாவில்[தொகு]

எலிசபெத் குவில்லிம், அவரது கணவர், சர் ஹென்றி எலிசபெத்தின் திருமணமாகாத சகோதரி மேரி சைமண்ட்ஸ், சர் ஹென்றியின் உதவியாளர் ரிச்சர்ட் கிளார்க், மற்றொரு எழுத்தர் மற்றும் இரண்டு இந்திய ஊழியர்களும் 1801 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி இந்துஸ்தான் என்ற கப்பலில் ஏறி, ஏறக்குறைய ஐந்து மாதப் பயணத்திற்குப் பிறகு மதராசு (இப்போது சென்னை என்று அழைக்கப்படுகிறது) சூலை 26 அன்று வந்தடைந்தனர். அங்கு இவர்களது வாழ்க்கையானது, சகோதரிகள் தங்கள் தாய், சகோதரி ஹெஸ்டர், இங்கிலாந்தில் உள்ள நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக விரிவாக அறியப்படுகிறது. அந்தக் கடிதங்கள் இப்போது பிரித்தானிய நூலகத்தில் உள்ளன. [1] அந்தக் கடிதங்களின் மூலம் அப்போதைய மதராசின் நிலவமைப்பு, உயிரினங்கள், தாவரங்கள், மக்களின் பேச்சுநடை, அண்ந்த ஆடை, உணவு பண்பாடு, காலநிலை, நிலப்பரப்பு, உணவு, உள்ளூர் சமூக மற்றும் சமய பழக்கவழக்கங்கள் போன்ற பல்வேறு விசயங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன. பல துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் குவில்லிம்-சைமண்ட்ஸ் கடிதங்களை சமூகத்தில் தேவதாசி பெண்களின் பங்கு போன்ற பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றிய தகவல்களைப் பற்றி படித்துள்ளனர். [2] இது மட்டுமல்லாது குவில்லிம் தன்னைச் சுற்றியுள்ள இயற்கை உலகத்தை தனது கடிதங்களிலும், சென்னையிலிருந்த தன் வாழ்வின் ஏழு ஆண்டுகளில் உருவாக்கிய பல பறவைகளை ஓவியங்களால் விவரித்துள்ளது மிகச் சிறப்பான பணிகளில் ஒன்று ஆகும்.

இறப்பு[தொகு]

குவில்லிம் 1807 திசம்பரில் அறியப்படாத காரணங்களால் இறந்தார். 21 திசம்பர் 1807 அன்று சென்னை ஜார்ஜ் கோட்டையில் உள்ள உள்ள புனித மேரி தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இவரது கணவர் சர்ச்சைக்குரிய ஒரு சூழ்நிலையில் அடுத்த ஆண்டு திரும்ப அழைக்கப்பட்டார். அவர் மேரியுடன் நன்னம்பிக்கை முனை வழியாக இங்கிலாந்து திரும்பினார். 1920 களின் முற்பகுதியில் இலண்டனில் உள்ள ஒரு பழைய புத்தக விற்பனையாளரிடம் நிலவறையில் தூசு படிந்த ஒரு பெட்டியில் இருந்த இவரது ஓவியங்களை கண் மருத்துவரும் விலங்கியலாளருமான கேசி ஆல்பர்ட் வுட் விலைக்கு வாங்கி மெக்கில் பல்கலைக்கழகத்தில் உள்ள பிளாக்கர் வூட் நூலகத்திற்கு வழங்கினார். அப்போது இந்த ஓவியங்களை வரைந்த எலிசபெத் குவெலிம் யார் என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. [3] பிற்காலத்தில் பலரின் முயற்சிகளால் இவர் யார் என்று தெரியவந்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lady Elizabeth Gwillim Papers: 1801-1809, MSS Eur C240, India Office Records, British Library, London, England
  2. Spear 2000, ப. 142.
  3. Wood, Casey (1927). "Lady [Elizabeth Gwillim. Artist and ornithologist"]. Journal of the Bombay Natural History Society 31 (2): 486–489. https://www.biodiversitylibrary.org/page/47947173. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபத்_குவெலிம்&oldid=3852816" இலிருந்து மீள்விக்கப்பட்டது