எலிக்காய்ச்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எலிக்காய்ச்சல் என அழைக்கப்படும் லெப்டோபைரோசிஸ் ஒரு தொற்று நோயாகும்.இந்நோய் விலங்குகளில்தான் பெரும்பாலும் காணப்படுகின்றது.விவசாயம் அல்லது அதனைச்சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள மனிதர்களில் இந்நோய் பாதிப்புக்கள் அதிகம்.

பருவமழைக்காய்ச்சல்[தொகு]

தமிழகத்தில் பருவமழைக்காலங்களில் காய்ச்சலை எற்படுத்தக் கூடிய வியாதிகளில் எலிக்காய்ச்சல் முக்கியமான ஒன்றாகும் . அதாவது காய்ச்சலினால் பாதிக்கப்பட்டோரில் 38 சதவீதமும்,சிறுநீரகம் செயலிழந்தோரில் 47 சதவீதமும் மற்றும் மஞ்சள் காமாலை நோயினால் 64 சதவீதமும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய் பரவும் விதம்[தொகு]

பெரும்பாலும் எலிகள் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் மூலமாக இந்நோய் ஆரோக்கியமான மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்குப் பரவுகிறது. இக்கிருமிகள் வெளியேற்றப்படும் நீரிலோ அல்லது ஈரமான மண் பகுதியிலோ காரத்தன்மை அதிமாகக் காணப்படின்ää இக்கிருமிகள் பல்கிப் பெருகின்றன. 32 டிகிரி சென்டிகிரேடு வெப்பமு;இ70-80 சதவீதம் ஈரப்பதமு; எலிக்காய்ச்சலை உண்டுபண்ணும்.

நோயினால் பாதிக்கப்படுவோர்[தொகு]

இந்நோய் ஆண்ääபெண் என இருபாலரையம் பாதிக்கின்றது. இந்நோய்த்தாக்கம் இளம்வயதினர்ääவயதானவர்கள் மற்றும் தொழிலில் ஈடுபட்டிருப்போரில்தான் அதிகமாகக் காணப்படுகின்றது.

[1]

  1. முருகன்.மு.ச, பழனிச்சாமி.வெ,எலிக்காய்ச்சல்,அறிக அறிவியல் ,அக்டோபர்2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிக்காய்ச்சல்&oldid=2573219" இருந்து மீள்விக்கப்பட்டது