எலபர்கா

ஆள்கூறுகள்: 15°38′N 76°01′E / 15.63°N 76.02°E / 15.63; 76.02
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலபர்கா
Yalaburga
நகரம்
எலபர்கா is located in கருநாடகம்
எலபர்கா
எலபர்கா
கர்நாடகாவில் எலபர்காவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 15°38′N 76°01′E / 15.63°N 76.02°E / 15.63; 76.02
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்கொப்பள்
ஏற்றம்605 m (1,985 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்11,437
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்583236
தொலைபேசி குறியீட்டு எண்08534
வாகனப் பதிவுகேஏ 37
இணையதளம்www.yelburgatown.gov.in

எலபர்கா (Yalaburga) எல்பர்கா எனவும் அழைக்கப்படும் இது இந்திய மாநிலமான கர்நாடகாவின் கொப்பள் மாவட்டத்திலுள்ள ஓர் பேரூராட்சியாகும்.

நிலவியல்[தொகு]

எலபர்கா 15.63 °வடக்கிலும் 76.02 ° கிழக்கிலும் அமைந்துள்ளது.[1] இதன் சராசரி உயரம் 605 மீட்டர் (1984 அடி) ஆகும்.

வரலாறு[தொகு]

11 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இது எலம்பர்கா வம்சத்தால் ஆளப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குறிப்பு கி.பி 1026 முதல் கி.பி 1126 வரை இவ்வூரைப் பற்றி விவரிக்கிறது.[2] ஐதராபாத் நிசாம் ஆட்சியின் போது இருந்த கடைசி வட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

புள்ளிவிவரங்கள்[தொகு]

2001 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி,[3] எலபர்காவில் 11,437 மக்கள் தொகை இருந்தது. இதில் ஆண்கள் 51%, பெண்கள் 49% ஆகும். எலபர்காவின் சராசரி கல்வியறிவு விகிதம் 58% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விடக் குறைவு: ஆண் கல்வியறிவு 69%, மற்றும் பெண் கல்வியறிவு 47%. எலபர்காவில், 15% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கின்றனர்.

அருகிலுள்ள கோயில்கள்[தொகு]

  • குக்கனூர் கல்லேஸ்வரம் மகாதேவன் கோயில்.
  • மருதேசுவரர் கோயில் எலபர்கா - பேவூர் சாலையில் 18 கி.மீ தொலைவிலுள்ள குட்டூரில் உள்ளது.
  • முதோலில் உள்ள திரிலிங்கபசாவேசுவர் கோயில் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Falling Rain Genomics, Inc - Yelbarga
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-19. பார்க்கப்பட்ட நாள் 2021-04-21.
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலபர்கா&oldid=3806284" இலிருந்து மீள்விக்கப்பட்டது