உள்ளடக்கத்துக்குச் செல்

எலனா இசின்பாயேவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலனா இசின்பாயேவா
2013 இல் எலனா இசின்பாயேவா
தனிநபர் தகவல்
முழு பெயர்எலனா காட்சீவ்னா இசின்பாயேவா
தேசியம்உருசியர்
பிறப்பு3 சூன் 1982 (1982-06-03) (அகவை 43)
வோல்கோகிராட், உருசிய சோவியத் கூட்டாட்சி சோசலிசக் குடியரசு, சோவியத் ஒன்றியம்
உயரம்1.74 m (5 அடி 8+12 அங்)
எடை65 kg (143 lb)
விளையாட்டு
நாடு உருசியா
விளையாட்டுமகளிருக்கான தடகள விளையாட்டு
நிகழ்வு(கள்)தடியூன்றித் தாண்டுதல்
கழகம்சிஎஸ்கேஏ மாஸ்கோ
பயிற்றுவித்ததுயெவ்ஜெனி ட்ரோஃபிமோவ்
Vitaly Petrov
ஓய்வுற்றது20 ஆகஸ்ட் 2016
சாதனைகளும் விருதுகளும்
உலக இறுதிவெளியரங்கு: 2003, 2005, 2007
உள்ளரங்கு: 2003, 2004, 2006, 2008
மண்டல இறுதிவெளியரங்கு: 2002, 2006 ]
உள்ளரங்கு: 2005
ஒலிம்பிக் இறுதி2004, 2008
மிகவுயர் உலக தரவரிசை1st (2005–2009)
தனிப்பட்ட சாதனை(கள்)வெளியரங்கு: 5.06 உலக சாதனை (2009)
உள்ளரங்கு: 5.01 ஐரோப்பிய சாதனை (2012)
பதக்கத் தகவல்கள்
நிகழ்வு முதல் இரண்டாம் மூன்றாம்
கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் 2 0 1
உலக தடகள போட்டிகள் 3 0 1
உலக உள்ளரங்கப் போட்டிகள் 4 1 0
உலகக் கோப்பை 1 0 0
ஐரோப்பியப் போட்டிகள் 1 1 0
ஐரோப்பிய உள்ளரங்க தடகளப் போட்டிகள் 1 0 0
23 வயதுக்குட்பட்டோருக்கான ஐரோப்பியப் போட்டிகள் 1 0 0
உலக இளையோர் போட்டிகள் 1 0 0
ஐரோப்பிய இளைஞர் போட்டிகள் 1 0 0
உலக இளைஞர் போட்டிகள் 1 0 0
Olympic Games
தங்கப் பதக்கம் – முதலிடம் 2004 ஏதன்ஸ் Pole vault
தங்கப் பதக்கம் – முதலிடம் 2008 Beijing Pole vault
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2012 London Pole vault
World Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 2005 Helsinki Pole vault
தங்கப் பதக்கம் – முதலிடம் 2007 Osaka Pole vault
தங்கப் பதக்கம் – முதலிடம் 2013 Moscow Pole vault
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2003 Paris Pole vault
World Indoor Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 2004 Budapest Pole vault
தங்கப் பதக்கம் – முதலிடம் 2006 Moscow Pole vault
தங்கப் பதக்கம் – முதலிடம் 2008 Valencia Pole vault
தங்கப் பதக்கம் – முதலிடம் 2012 Istanbul Pole vault
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2003 Birmingham Pole vault
World Cup
தங்கப் பதக்கம் – முதலிடம் 2006 Athens Pole vault
European Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 2006 Gothenburg Pole vault
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2002 Munich Pole vault
European Indoor Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 2005 Madrid Pole vault
European U23 Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 2003 Bydgoszcz Pole vault
World Junior Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 2000 Santiago Pole vault
European Junior Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 2001 Grosseto Pole vault
World Youth Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 1999 Bydgoszcz Pole vault
World Youth Games
தங்கப் பதக்கம் – முதலிடம் 1998 Moscow Pole vault
6 ஆகஸ்ட் 2012 இற்றைப்படுத்தியது.

எலனா காட்சீவ்னா இசின்பாயேவா (Yelena Gadzhievna Isinbayeva) (பிறப்பு 3 ஜூன் 1982) ஓர் உருசிய முன்னாள் தடியூன்றித் தாண்டும் வீரர் ஆவார். இவர் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் இரண்டு முறை (2004 மற்றும் 2008) தங்கப் பதக்கம் வென்றவர் மூன்று முறை உலக வாகையாளர் (2005,2007 மற்றும் 2013) இந்த நிகழ்வில் தற்போதைய உலக சாதனை, மற்றும் எல்லா காலத்திலும் சிறந்த பெண் தடியூன்றித் தாண்டும் வீராங்கனையாக பரவலாக கருதப்படுகிறார்.[1][2] உருசியாவில் ஒரு விரிவான அரசு ஆதரவுடன் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனை முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இசின்பயேவா 2016 ரியோ ஒலிம்பிக்கிலிருந்து தடை செய்யப்பட்டார்.[3] இதனால் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனையுடன் ஓய்வு பெறும் இவரது நம்பிக்கையைத் தகர்த்தெறியப்பட்டது. பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தடகள ஆணையத்தில் சேர்ந்து 8 ஆண்டு காலத்திற்குப் பணியாற்றிய பின்னர், ஆகஸ்ட் 2016 இல் தடகளத்திலிருந்து ஓய்வு பெற்றார்.[4]

இசின்பாயேவா ஒன்பது சந்தர்ப்பங்களில் (ஒலிம்பிக், உலக வெளிப்புற மற்றும் உள்ளரங்கப் போட்டிகள் மற்றும் ஐரோப்பிய வெளிப்புற மற்றும் உள்ளரங்கப் போட்டிகள்) ஒரு பெரிய வெற்றியாளராக இருந்து வருகிறார். 2007 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் சர்வதேச தடகள கூட்டமைப்புகள் சங்கத்தின் கோல்டன் லீக் தொடரின் ஜாக்பாட் வெற்றியாளராகவும் இருந்தார். 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் உலகப் போட்டிகளில் மோசமான செயல்திறனுக்குப் பிறகு, இவர் விளையாட்டிலிருந்து ஒரு வருட இடைவெளி எடுத்தார்.

2005 ஆம் ஆண்டில் ஐந்து மீட்டர் தடையை கடந்த முதல் பெண்மணி ஆனார். ஆகஸ்ட் 2009 இல் சூரிக்கு நகரில் உள்ளரங்கத்தில் நடந்த போட்டியில் 5.06 மீட்டர் தாண்டியது இவரது தற்போதைய உலக சாதனையாகும்.[5] 2024 வரை இது இன்னும் முறியடிக்கப்படவில்லை.[6] இவர் 5.01 மீட்டர் தூரத்தை உள்ளரங்கத்தில் தாண்டியது ஒரு வருடத்திற்கும் மேலாக உலக சாதனையாக இருந்தது. பிந்தையது இசின்பயேவாவின் இருபத்தெட்டாவது போல் வால்ட் உலக சாதனையாகும்.[7]  பிந்தையது இசின்பயேவாவின் இருபத்தி எட்டாவது தடியூன்றித் தாண்டுதலில் உலக சாதனையாகும்.

2004, 2005 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில்சர்வதேச தடகள கூட்டமைப்புகள் சங்கத்தால் ஆண்டின் சிறந்த பெண் தடகள வீரராகவும், 2007 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் லாரஸ் அமைப்பால் ஆண்டின் உலக விளையாட்டு வீரராகவும் இசின்பாயேவா பெயரிடப்பட்டார். விளையாட்டுக்கான பிரின்ஸ் ஆஃப் அஸ்டூரியஸ் விருது 2009 இல் இவருக்கு வழங்கப்பட்டது. வலேரி ஆடம்ஸ், உசைன் போல்ட், வெரோனிகா காம்ப்பெல் பிரௌன், ஆர்மண்ட் டுப்லாண்டிஸ், ஜாக் பிரீடாக், கிரானி ஜேம்ஸ், பெய்த் கிப்யேகன், ஜானா பிட்மேன், டேனி சாமுவேல்ஸ் மற்றும் டேவிட் ஸ்டோர்லால் ஆகியோருடன் இணைந்து இளைஞர், இளையோர் மற்றும் மூத்த தடகளப் போட்டிகளில் உலக வாகையாளர் பட்டங்களை வென்ற பதினொரு விளையாட்டு வீரர்களில் இசின்பாயேவாவும் ஒருவர்.

1998 மாஸ்கோவில் நடந்த உலக இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் இசின்பாயேவா
ஒசாகாவில் நடந்த போட்டியில் இசின்பாயேவா தடியூன்றி தாண்டுகிறார்
பெர்லினில் நடைபெற்ற உலகப் போட்டியில் எலனா இசின்பாயேவா

செயல்பாடுகள்

[தொகு]

2012 ஆம் ஆண்டில், 2012 உருசிய அதிபர் தேர்தலின் போது விளாதிமிர் புடினின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இசின்பாயேவா பணியாற்றினார். நவம்பர் 2017 இல், புடின் மற்றும் அவரது 2018 உருசிய அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆதரிப்பதற்கான புடின் டீம் என்ற சமூக இயகத்தில் சேர்ந்தார்.[8][9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pole-Vaulter Keeps a Low Profile During Her Ambitious Ascent". The New York Times. 2 February 2007. https://www.nytimes.com/2007/02/02/sports/othersports/02millrose.html. 
  2. "Athletics: Pole-vault diva toys with foes and fans". The New York Times. 29 August 2007. https://www.nytimes.com/2007/08/29/sports/29iht-TRACK.1.7302544.html. 
  3. "Yelena Isinbayeva: Russia's former Olympic and World pole vault champion retires". BBC. 19 August 2016. Retrieved 22 August 2016.
  4. "Yelena Isinbayeva voted on to IOC athletes' commission despite ban". The Guardian. Reuters. 19 August 2016. https://www.theguardian.com/sport/2016/aug/18/yelena-isinbayeva-ioc-voted-athletes-commision-russia-pole-vault-ban. 
  5. "New world record for Isinbayeva". Eurosport. Yahoo! Sports. 23 January 2012. Retrieved 24 January 2012.
  6. "IAAF: World records ratified- News - iaaf.org". Retrieved 26 August 2016.
  7. "New world record for Isinbayeva". Eurosport. Yahoo! Sports. 23 January 2012. Retrieved 24 January 2012.
  8. "Putin loyalist and former Olympic pole vaulter Yelena Isinbayeva moves to NATO country". The Insider (in ஆங்கிலம்). 2023-07-12. Retrieved 2023-07-17.
  9. ""I am a woman of the world": Putin Team member and former pole vaulter Yelena Isinbayeva says she will continue working for the IOC". The Insider (in ஆங்கிலம்). 2023-07-17. Retrieved 2023-07-19.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=எலனா_இசின்பாயேவா&oldid=4380094" இலிருந்து மீள்விக்கப்பட்டது