அலங்கு
| எறும்புத்தின்னி புதைப்படிவ காலம்:ஆரம்ப மியோசின் காலம் முதல் | |
|---|---|
| பெரும் எறும்புண்ணி | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | பில்லோசா இல்லிகெர், 1811
|
| துணைவரிசை: | புழு நாக்குடையவை
|
| குடும்பம் | |
| |
எறும்புண்ணி அல்லது அழுங்கு, அலங்கு (Anteater) என்பது பாலூட்டி இனத்தை சேர்ந்தது. இவைகள் புற்றுகளிலுள்ள எறும்புகளையும், கறையான்களையும், ஈசல்களையும் மட்டுமே உண்பதால் இதற்கு எறும்புத் தின்னி என்று பெயராயிற்று. எறும்பு தின்னியில் எட்டு வகையான இனங்கள் உள்ளன. இலங்கைப் பேச்சு வழக்கில் இது அணுங்கு எனவும், சிங்களத்தில் கபல்லேவா என்றும், மலையாளத்தில் ஈனம்பேச்சி என்றும் அழைக்கப்படுகின்றது.[1]
வகைப்பாட்டியல்
[தொகு]எறும்புதின்னிகள் மற்ற பாலூட்டி குழுக்களை விட கரடிகளுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையவை. இவற்றுக்கு அடுத்தப்படியாக நெருங்கிய தொடர்புடையவை அர்மாடிலோக்கள் ஆகும். தற்போது மூன்று பேரினங்களில் நான்கு சிற்றினங்கள் உயிர்வாழ்கின்றன. மேலும், அழிந்துபோன பல பேரினங்களும் உள்ளன.
|
துணைவரிசை வெர்மிலிங்குவா (எறும்புத்தின்னி)
- குடும்பம் சைக்குளோபெடிடே
- பேரினம் சைக்லோபெசு
- Silky anteater (சை. டைடாக்டைலசு)
- பேரினம் †பேலியோமைர்மிடான் (உரோவெரெடோ 1914)[4]
- பேரினம் சைக்லோபெசு
- குடும்பம் மிர்மெகோபாகிடே
- பேரினம் மிர்மெகோபாகா
- பெரும் எறும்புண்ணி (மி. டிரைடேக்டைலா)
- பேரினம் †நியோதாமாண்டுவா (உரோவெரெடோ 1914)[5]
- பேரினம் தாமாண்டுலா
- மெக்சிக்கோ எறும்புண்ணி (தா. மெக்சிகேனா)
- தெற்கு தாமாண்டுலா (தா. டெட்ராடேக்டைலா)
- பேரினம் †புரோடோமாண்டுவா (அமேஜிகினோ 1904)[6]
- பேரினம் மிர்மெகோபாகா
உடலமைப்பு
[தொகு]எறும்புண்ணியின் தலை தவிர உடலின் மற்ற அனைத்து உறுப்புகளும் கடினமான செதில்கள் போன்ற தோலால் மூடப்பட்டுள்ளன. சிறிய தலையும், நீண்ட வாலும் கொண்ட எறும்புத் தின்னியின் உடல் 30 முதல் 100 செண்டி மீட்டர் நீளமுடையது. பெண் எறும்புத் தின்னிகள் ஆண் எறும்புத் தின்னிகளை விட சிறியவை. இவை ஆகக் கூடியது 20 ஆண்டுகள் வாழக்கூடியவை.[7]
குணம்
[தொகு]ஊனுண்ணி வகையைச் சார்ந்த எறும்புத் தின்னிகள் நீண்ட நாக்கு மூலம் எறும்புகளையும், பூச்சிகளையும் தூரத்தில் இருந்தவாறே பிடித்து உட்கொள்ளும். பூச்சிகளையும் எறும்புகளையும் தன் மோப்ப சக்தியின் மூலம் கண்டறியும் குணம் கொண்டவை.[8] நிலத்தடியில் 3 முதல் 5 மீட்டர் ஆழத்தில் வாழும் எறும்பினங்களை கண்டறிந்து, தோண்டி உட்கொள்ளும். எறும்புத் தின்னிகளுக்கு பார்வைத் திறன் மிகக் குறைவு. எனினும் இவற்றின் மோப்ப சக்தியாலும், கேட்கும் திறனாலும் இவை தமது உணவைக் தேடிக் கண்டறியும் குணமுடையவை.[8] எறும்பு தின்னிகள் நன்கு நீந்தும் ஆற்றல் கொண்டவை.[8] எதிரிகளைக் கண்டு கொண்டால், உடலை பந்து போன்று சுருட்டி வைத்துக் கொண்டு தம்மைக் காத்துக் கொள்ளும் குணமுடையவை. எறும்புத் தின்னியில் சில இனங்கள் மரமேறிகளாக உள்ளன.
இனப்பெருக்கம்
[தொகு]எறும்புத் தின்னிகள் தனிமை விரும்பிகள். எனினும் இனப்பெருக்க காலங்களில், குறிப்பாக கோடை காலங்களில் மட்டும் ஒன்றுடன் ஒன்று கூடும். ஆண் எறும்புத் தின்னி, பெண் எறும்புத் தின்னியை விட 50 விழுக்காடு பெரியது.
வாழுமிடங்கள்
[தொகு]எறும்புத் தின்னிகள் வெப்ப மண்டலப் பகுதிகளான ஆப்பிரிக்கா, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன. எறும்புத் தின்னியின் கடினமான தோலுக்காக அதிகமாக வேட்டையாடப்படுவதால் இவ்வினம் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது.[9][10]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ ""அலுங்கு" என்ற மிருகத்தை பற்றி அறிந்திருக்கின்றீர்களா?". கட்டுரை. ilakkiyainfo.com. Retrieved 8 மார்ச் 2019.
- ↑ Presslee, Samantha; Slater, Graham J.; Pujos, François; Forasiepi, Analía M.; Fischer, Roman; Molloy, Kelly; Mackie, Meaghan; Olsen, Jesper V. et al. (6 June 2019). "Palaeoproteomics resolves sloth relationships". Nature Ecology & Evolution 3 (7): 1121–1130. doi:10.1038/s41559-019-0909-z. பப்மெட்:31171860. Bibcode: 2019NatEE...3.1121P. https://eprints.whiterose.ac.uk/147061/1/5426_3_merged_1554730549.pdf.
- ↑ Gibb, G. C.; Condamine, F. L.; Kuch, M.; Enk, J.; Moraes-Barros, N.; Superina, M.; Poinar, H. N.; Delsuc, F. (2015). "Shotgun Mitogenomics Provides a Reference PhyloGenetic Framework and Timescale for Living Xenarthrans". Molecular Biology and Evolution 33 (3): 621–642. doi:10.1093/molbev/msv250. பப்மெட்:26556496.
- ↑ வார்ப்புரு:Paleodb
- ↑ வார்ப்புரு:Paleodb
- ↑ வார்ப்புரு:Paleodb
- ↑ Chan, Lap-Ki (1995). "Extrinsic Lingual Musculature of Two Pangolins (Pholidota: Manidae)". Journal of Mammalogy (Journal of Mammalogy, Vol. 76, No. 2) 76 (2): 472–480. doi:10.2307/1382356. https://archive.org/details/sim_journal-of-mammalogy_1995-05_76_2/page/472.
- ↑ 8.0 8.1 8.2 Mondadori, Arnoldo Ed., ed. (1988). Great Book of the Animal Kingdom. New York: Arch Cape Press. p. 252.
- ↑ எறும்புண்ணி உலகிலேயே அதிகமாக வேட்டையாடப்படுவது ஏன்?
- ↑ http://www.bbc.co.uk/tamil/science/2014/07/140729_pangolin.shtm