எர்ரனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எர்ரனா (தெலுங்கு: ఎఱ్ఱన్న) அல்லது எர்ரப்பிரகதா, ரெட்டி அரசை நிறுவிய பிரளய வேம ரெட்டியின் அரசவைக் கவி.[1] தெலுங்கு மொழியில் மகாபாரதத்தை எழுதியோருள் மூன்றாமவர். நன்னயா மற்றும் திக்கனா ஆகியோர் கால வரிசையில் முதலில் மகாபாரதம் பாடியோர். முதலிருவர் முழு பாரதமும் பாடவில்லை. எர்ரனாவே முழுதையும் பாடிய சிறப்புடையவர். பாரதக்கதை மட்டுமின்றி ஹரிவம்சம் மற்றும் இராமாயணத்தையும் இவர் தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "நக்கீரன் இதழ் செய்தி". நக்கீரன். நவம்பர் 1, 2008. பார்க்கப்பட்ட நாள் சனவரி 3, 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்ரனா&oldid=3751724" இலிருந்து மீள்விக்கப்பட்டது