உள்ளடக்கத்துக்குச் செல்

எர்பியம் எக்சாபோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எர்பியம் எக்சாபோரைடு (Erbium hexaboride) என்பது ErB6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டு புவியின் மேலோட்டில் காணப்படும் ஓர் அரிய எக்சா போரைடு சேர்மமாகும். இச்சேர்மம் கால்சியம் எக்சாபோரைடு படிகக் கட்டமைப்பைப் பெற்றுள்ளது.

எர்பியமும் போரானும் வினைபுரிவதால் உண்டாகும் அடிப்படைச் சேர்மங்களில் எர்பியம் எக்சாபோரைடும் ஒரு சேர்மமாகும். இலந்தனம் எக்சாபோரைடு, சமாரியம் எக்சாபோரைடு, சீரியம் எக்சாபோரைடு போன்ற பிற அரியமண் எக்சாபோரைடுகள் போன்ற படிகக் கட்டமைப்பை எர்பியம் எக்சாபோரைடும் பெற்றுள்ளது[1]. அரியமண் எக்சாபோரைடுகளின் ஒத்த படிகக் கட்டமைப்பு பண்பினாலும், படிகத்திற்குள் எண்முக போரானின் வலிமையான இடைவினையாலும் இச்சேர்மங்கள் உயர் அணிக்கோவை பொருத்தங்களை வெளிப்படுத்துகின்றன. இதனால் படிகத்திற்குள் மற்றோர் அரியமண் உலோகத்தைப் பதிலீடு செய்து கலப்பு செய்ய வாய்ப்பு இருக்கிறது[2][3]. சமீப காலம்வரை எர்பியம் எக்சாபோரைடு சேர்மம் நிலைத்தன்மை அற்றது என்று கருத்தியலாக நம்பப்பட்டு வந்தது. அரியமண் எக்சாபோரைடு சேர்மங்களை உருவாக்கும் மற்ற அரியமண் தனிமங்களின் அயனி ஆரத்தை ஒப்பிடுகையில் Er3+ நேர்மின் அயனியின் அயனி ஆரம் சிறியதாக இருப்பது இதற்கான காரணமாகக் கருதப்பட்டது [4]. தற்போது இதற்கான காரணம் விளக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இப்போதைய புதிய நுண்ணளவு செயற்கை முறைமைகள், உயர்-தூய்மைமிக்க நிலையான எர்பியம் எக்சாபோரைடு நுண்கம்பிகளை உற்பத்தி செய்யும் திறன் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வேதியியல் நீராவிப் படிவு முறையைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் இந்த கம்பிகள் அணிக்கோவை மாறிலி மதிப்பு 4.1 Å இருப்பதாக அறியப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Samsonov, Grigorii (1965). High-Temperature Compounds of Rare Earth Metals with Nonmetals. New York: Consultants Bureau.
  2. Schmidt, P. H.; Joy, D. C. (1978). "Low Work Function Electron Emitter Hexaborides". Journal of Vacuum Science and Technology 15 (6): 1809–1810. doi:10.1116/1.569847. Bibcode: 1978JVST...15.1809S. 
  3. Tarascon, J. M.; Y. Isikawa; B. Chevalier; J. Etoumeau; P. Hagenmuller; M. Kasaya (1980). "Valence Transition of Samarium in Hexaboride Solid Solutions Sm1−xMxB6 (M = Yb2+, Sr2+, La3+, Y3+, Th4+)". J. Phys. France 41 (10): 1135–1140. doi:10.1051/jphys:0198000410100113500. 
  4. Mar, R. W. (1973). "Conditions for Formation of ErB6". J. Am. Ceram. Soc. 56 (5): 275–278. doi:10.1111/j.1151-2916.1973.tb12487.x. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்பியம்_எக்சாபோரைடு&oldid=3622609" இலிருந்து மீள்விக்கப்பட்டது