உள்ளடக்கத்துக்குச் செல்

எர்ன்ஸ்ட் அகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிறிஸ்டோஃப் குஸ்டாவ் எர்னெஸ்ட் அகல் (Christoph Gustav Ernst Ahl; 1 செப்டம்பர் 1898 - 14 பிப்ரவரி 1945) செருமனிய விலங்கியல் நிபுணர் ஆவார். இவர் பெர்லினில் பிறந்தார். பெர்னிலில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் மீனியல் மற்றும் இருவாழ்விகள், ஊர்வன (கெர்பெட்டாலஜி) துறையின் இயக்குநராக இருந்தார். தாஸ் அக்வாரியம் என்னும் ஆராய்ச்சி இதழின் முதன்மைத் தொகுப்பாசிரியராக 1927 முதல் 1934 வரை இருந்தார்.

இரண்டாம் உலகப் போரின்போது அகல், ​​வேர்மாக்ட் நிலையில் போலந்து மற்றும் வட ஆப்பிரிக்கா பின்னர் யூகோஸ்லாவியாவில் போராடினார். அகல் யூகோஸ்லாவியாவில் தஞ்சம் அடைந்தபோது செருமன் நாட்டவர் என நினைத்துத் தூக்கிலிட்டனர்.

தட்டான்கள் குறித்த ஆய்வினை முதலில் மேற்கொண்ட இவர் அவற்றின் பேரினம் என்ன என்பதைத் தீர்மானித்தார்.

இரண்டு வகை பல்லிகளின் அறிவியல் பெயர்களில் அகல் நினைவு கூறப்படுகிறார். அவை அனோலிஸ் அஹ்லி (Anolis ahli) மற்றும் எமோயா அஹ்லி (Emoia ahli) என்பன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. ("Ahl", p. 3).

மேலும் படிக்க[தொகு]

  • Paepke, Hans-Joachim (1995). "Über das Leben und Werk von Ernst Ahl [= About the Life and Work of Ernst Ahl]". Mitteilungen aus dem Zoologischen Museum in Berlin 71 (1): 79-101. (in German).
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்ன்ஸ்ட்_அகல்&oldid=3027381" இலிருந்து மீள்விக்கப்பட்டது