எர்னெசுட்டு பிரீட்ரிக் நோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்னெசுட்டு பிரீட்ரிக் நோர்
Ernst Friedrich Knorre
Ernst Friedrich Knorre.jpg
பிறப்புஎர்னெசுட்டு கிறித்தோப் பிரீட்ரிக் நோர்
திசம்பர் 11, 1759(1759-12-11)
நியூகால்டென்சுலெபென், செருமானியப் பேரரசு
இறப்பு1 திசம்பர் 1810(1810-12-01) (அகவை 50)
தோர்பத், உருசியப் பேரரசு
படித்த கல்வி நிறுவனங்கள்ஆல்லே பல்கலைக்கழகம்
அமைப்பு(கள்)
அறியப்படுவதுஎசுதோனையப் புவிபரப்பியல் வரைதல்
பிள்ளைகள்கார்ல் பிரீட்ரிக் நோர்

எர்னெசுட்டு கிறித்தோப் பிரீட்ரிக் நோர் (Ernst Christoph Friedrich Knorre) (11 திசம்பர் 1759 – 1 திசம்பர் 1810) ஒரு செருமனியில் பிரந்த வானியலாளர் ஆவார். இவர் இன்றைய எசுதோனியவில் வாழ்ந்து பணிபுரிந்தார். அங்கு இவர் தோர்பத பல்கலைக்கழகத்தில் கணிதவியலின் முதல் நிறுவற் பேராசிரியராக பணிபுரிந்தார். தோர்பத வான்காணகத்தில் தலைமை நோக்கீட்டாளரகவும் விளங்கினார்]. இவரது மகன் கார்ல் பிரீட்ரிக் நோர் அவர்களும் பேரன் விக்தர் நோர் அவர்களும் குறிப்பிடத்தகுந்த வானியலாளர்களாவர்.[1] அண்மையில் மூன்று தலைமுறை நோர் வானியலாளர்களின் நினைவாக, நாசா ஒரு குறுங்கோளுக்குப் பெயரிட்டுள்ளது.[2]

வாழ்வும் பணியும்[தொகு]

நோர் செருமானியப் பேர்ரசின் மக்தேபர்குக்கு அருகில் அமைந்த நியூகால்டென்சுலெபெனில் பிறந்தார். இளைஞராக இருந்தபோதே, தன் அண்ணனாகிய யோகானுடன் இறையியல் படிக்க ஆல்லே பல்கலைக்கழகத்துக்கு வீட்டைவிட்டுச் சென்றார். அங்கே இருவரும் தனிப்பயிற்சி ஆசிரியர்களாகப் பணியில் சேர்ந்துள்ளனர். யோகான் 1786 இல் தோர்பாத்தில் உள்ள புதிய பெண்கள் தொடக்கநிலைப் பள்ளி இயக்குநராக பணியமர்த்தப்பட்டுள்ளார். விரைவில் இவர் இன்றைய எசுதோனியாவில் அமைந்த இலிவோனியாவுக்குச் சென்றுள்ளார். சிறிது காலம் சென்றதும் நோரும் அங்கு சென்று அவருடன் சேர்ந்துள்ளார். பின்னர், 1780 இல்யோகான் தோர்பாத்தை விட்டு நார்வாவுக்குச் செல்லவே, தோர்பத் உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார்.

அறிவியலிலும் கணிதவியலிலும் ஆர்வம் கொண்டிருந்த நோர், தன் 35 ஆம் அகவையில் வானியல் தேட்டத்தில் ஈடுபடலானார். அப்போது தோர்பத்தில் பல்கலைக்கழகம் ஏதும் இல்லாத்தால், இவரது அரிவுத்தேட்ட்த்துக்கு தக்க உதவி கிடைக்கவில்லை. இருந்தும் இவர் தன் வானியல் ஆய்வைத் தொடர்ந்தார். அன்றாட வான்கோள நோக்கீடுகளை 1795 இல் இருந்தே நாட்குறிப்பில் பதிவு செய்துவந்தார் . அதே ஆண்டில் இவர் சொந்த முயற்சியால் வானியல் கருவி ஒன்றை வடிவமைத்துக் கட்டி யமைத்துள்ளார். அதைக் கொண்டு தோர்பத்தின் புவியியல் அகலாங்கை தீர்மானித்துள்ளார். தான் வாழும் இருமாடி கட்டிடத்தின் மேற்சுவரில் நான்கு தட்டுகளில் வட்டத் துளைகளையிட்டு நீர்மட்டமும் நூற்குண்டும் கொண்டு அவற்றைப் பொருத்தியுள்ளார். அடித் துளையில் ஆடியொன்றை வைத்து, நோர் விண்மீன்களை நோக்கியுள்ளார். அவர் நோகிய விண்மீனின் இறக்க க் கோணம் 58° இல் இருந்து மேல் துலையின் விட்டத்தில் 59° ஆக மாறுவதைப் பதிவு செய்தார். இந்த விண்மீன் சிறுகரடி எனவும் குறித்தார். இது சரியல்ல தான். கருவி மிக எளியது என்பதால், தன் கணக்கிடுகளை முடித்து வான்காண்கம் ஒன்றின் அகலாங்கை இவர் தான் முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஆனார்.[1]

நோரின் இந்த வானியல் வெற்றி தோர்பாத் அறிவியல் குழுமத்தில் புகழீட்டித் தந்தது. இவரது தொடர்புகளும் அரசியல் வட்ட நெருக்கமும் பெருகின. உருசியாவின் முதலாம் அலெக்சாந்தர் 1802 இல் தோர்பாத்தில் பல்கலைக்கழகம் நிறுவியதும் நோர் முதல் கணிதவியல் இணைப்பேராசிரியர் பதவியைப் பெற்றார். மேலும் தோர்பாத்தில் 1803 இல் வான்காணகக் கட்டிட வேலை தொடங்கியது. தோர்பாத் வான்காணகத்தில் நோர் முதன்மை வான்காணகராக பணியில் அமர்த்தப்பட்டார். இவர் தான் 1810 திசம்பர் 1 இல் இறக்கும் வரை அங்கேயே பணியாற்றினார்.[1]

நோர் தன் 51 ஆம் அகவையில் இறந்துவிடவே, அவரது மனைவியாகிய சென்ஃப் என்கிற சோபியும் மூன்று மகன்களும் ஏதிலிகள் ஆகினர். மனைவியை இழந்த தன் அண்ணன் கார்ல் ஆகத்து சென்ஃபிடம் தஞ்சம் புகுந்தார். இவர் பல்கலைக்கழகத்தின் கலைத்துறையில் ஓவிய ஆசிரியராக இருந்தார். நோரின் மகனான கார்ல் பிரீட்ரிக் நோருக்குத் தந்தை இறந்தபோது அகவை பத்து கூட முடியவில்லை. என்றாலும் கார்ல் அளவிறந்த தன்னம்பிக்கையோடு தற்சார்பாக வாழவும் தன் தந்தையின் பணியைத் தன் காப்பாளரான தாய்மாமன் எதிர்த்தும் தொடர்ந்தார். இளைஞர் கார்ல் அப்போதே கணித்ததிலும் இலத்தீனிலும் தொடக்கநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் பேரிளைஞர்களுக்கும் பாடம் நடத்தினார் . இதனால் இவர் தன் கல்வியைத் தானே தொடரமுடிந்த்தோடு, பல்கலைக்கழகத்திலும் தனக்கென ஓரிடத்தையும் தனது 15 ஆம் அகவையிலேயே பிடிக்க முடிந்துள்ளது . பின்னர்,கார்லும் அவரது மகன் விக்தரும் முறையே உருசியாவிலும் செருமனியிலும் புகழ்பெற்ற வானியலாளர்கள் ஆகினர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Héral, Susan. "Astronomers and Other Professions in the Knorre Family". The Dynasty of Knorre Astronomers. Nikolaev: Irina Gudym Publishing. 9 September 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Asteroid Named After the Three Generations of Knorre Astronomers". California Institute of Technology: Jet Propulsion Laboratory.
  3. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-31022-0. http://www.springerreference.com/docs/html/chapterdbid/58787.html. பார்த்த நாள்: August 22, 2012. 

வெளி இணைப்புகள்[தொகு]