எர்சுரம் மாகாணம்
எர்சுரம் மாகாணம் (Erzurum Province, துருக்கியம்: Erzurum ili ) என்பது துருக்கி நாட்டின் ஒரு மாகாணம் ஆகும். இந்த மாகாணமானது கிழக்கில் கார்ஸ் மற்றும் அரே மாகாணங்கள், தெற்கே முய் மற்றும் பிங்கால், மேற்கில் எர்சின்கான் மற்றும் பேபர்ட், வடக்கே ரைஸ் மற்றும் ஆர்ட்வின் மற்றும் வடகிழக்கில் அர்தாகான் ஆகிய மாகாணங்களை எல்லையாக கொண்டு உள்ளது.
நிலவியல்
[தொகு]எர்சுரம் மாகாணமானது பரப்பளவில் துருக்கியில் நான்காவது பெரிய மாகாணமாகும். மாகாணத்தின் பெரும்பான்மை நிலப்பரப்பானது உயர அளவீடு கொண்டதாக உள்ளது. மாகாணத்தின் பெரும்பாலான பீடபூமிகள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,000 மீ (6,600 அடி) உயரமுடையவை, மற்றும் பீடபூமிகளுக்கு அப்பால் உள்ள மலைப்பிரதேசங்கள் 3,000 மீ (9,800 அடி) மற்றும் அதற்கு மேற்பட்ட உயரம் கொண்டவை. மலைகள் மற்றும் பீடபூமிகளுக்கு இடையில் தாழ்ந்த சமவெளிகள் அமைந்துள்ளன. தெற்கு மலைத் தொடர்களில் பாலண்டேக்கன் மலைகள் (மிக உயர்ந்த சிகரம் பயாக் எஜ்டர் 3,176 m or 10,420 அடி உயரம்) மற்றும் சாவில்டு மலைகள் (மிக உயர்ந்த சிகரம் சக்மக் மலை 3,063 m or 10,049 அடி உயரம்) ஆகியவை அடங்கும். வடக்கு மலைத்தொடர்கள் வடக்கு அனடோலியன் மலைகளின் இரண்டாவது வரிசை உயரங்களாகும், அதாவது மெசிட் மலைகள் (மிக உயர்ந்த சிகரம் 3,239 m or 10,627 அடி உயரம்), கர்கபசார் மலைகள் (மிக உயர்ந்த சிகரம் 3,169 m or 10,397 அடி உயரம்) மற்றும் அல்லாஹுக்பர் மலைகள் ஆகியவை ஆகும். இந்த மலைப்பகுதிகளுக்கு இடையிலான இரண்டு தாழ்ந்த சமவெளிகள் எர்சுரம் சமவெளி மற்றும் ஹசன்கலே சமவெளி போன்றவை உள்ளன.
இந்த மாகாணத்தில் ஆண்டில் சராசரியாக நீண்ட மற்றும் கடுமையான குளிர்காலம் மற்றும் குறுகிய மற்றும் லேசான கோடைகாலம் கொண்டதாக கான்டினென்டல் காலநிலை நிலவுகிறது. சராசரி குறைந்த வெப்பநிலை −8.6 °C (16.5 °F) , சராசரி உயர் வெப்பநிலை 12 °C (54 °F) ஆகும். சராசரி ஆண்டு மழையளவு 453 mm (17.8 அங்) ஆகும். ஆண்டில் பனியானது சராசரியாக 80 நாட்களில் பெய்கிறது. இது சுமார் 150 நாட்கள் இருக்கும்.
இந்த மாகாணத்தில் பரவலாக ஸ்டெப்பி புல்வெளிகளானது ஒரு புவியியல் அம்சமாக உள்ளது. இது மாகாணத்தின் நிலப்பபரப்பில் சுமார் 60% வரை உள்ளது, இவற்றில் பெரும்பாலானவை செழுமையாவை. காடுகள் நிறைந்த பகுதிகள் குறைந்தவை. காடுகளில் முக்கியமாக ஸ்காட்ஸ் பைன்ஸ் மற்றும் கருவாலி மரம் ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளன.
மாகாணத்தின் கிழக்கு பகுதி அராஸ் ஆற்றின் வடிநிலத்திலும், மேற்கு பகுதி கராசு (யூப்ரடீஸ்) வடிநிலத்திலும், வடக்கு பகுதி சோரு ஆற்றுப் வடிநிலத்திலும் அமைந்துள்ளது.
மாகாணத்தில் சில இயற்கை ஏரிகள் உள்ளன, அவற்றில் முக்கியமானது டோர்டம் ஏரி (தோராயமாக 8) km²) இந்த ஏரிக்கு டோர்டம் (உசுண்டெரே) அருவியியல் இருந்து நீர் வந்து சேர்கிறது. 1963 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஒரு நீர் மின் ஆற்றல் நிலையம் இந்த ஏரியின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. மாகாணத்தில் மூன்று செயற்கை ஏரிகள் உள்ளன.
பொருளாதாரம்
[தொகு]வரலாற்று ரீதியாக, எர்சுரம் பகுதியானது கோதுமை [1] மற்றும் ஆளி விதை ஆகியவற்றை உற்பத்தி செய்தது ; 1920 நிலவரப்படி, ஆண்டுதோறும் ஆளி விதை உற்பத்தி 1,000 முதல் 1,500 டன் வரை இருந்தது.[2] உள்ளூர் பயன்பாட்டிற்காக தேன் வளர்க்கப்பட்டது.[3]
மாகாணத்தின் மொத்த நிலப் பரப்பில் சுமார் 18.5% வேளாண் நிலமாகும், அதில் 75% நிரந்தர பயிர்கள் உள்ளன. விவசாய விளைபொருட்களின் பெரும்பகுதியானது தானிய விளைச்சல் உள்ளது. மாகாணத்தின் மொத்த பரப்பளவில் 8.8% காடுகள் உள்ளன. வனப்பரிபாலனம் ஒரு உள்ளூர் தொழிலாக உள்ளது. மாகாணத்தின் முக்கியத் தொழில்களாக பெரும்பாலும் வனவியல், விவசாயம், நிலம் பண்படுத்துதல், வேதியியல், ஜவுளி மற்றும் சுரங்கப் பொருட்கள் உற்பத்தி ஆகியவை உள்ளன. மாகாணத்தில் 81 செயல்பாட்டில் உள்ள தொழில்துறை ஆலைகள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை எர்சுரூமின் மத்திய மாவட்டத்தில் அமைந்துள்ளன, மேலும் அவை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களாகும். ஒப்பீட்டளவில் சிறிய அளவு கொண்டவையாக உள்ளதால், இந்தத் தொழில்கள் முக்கியமாக உள்ளூர் சந்தைகளுக்கு தேவையை நம்பியுளன. இதனால் குறைந்த திறன் பயன்பாடு, குறைந்த உற்பத்தித்திறன் மற்றும் வேலையின்மை ஆகியவை உள்ளன. சுமார் 40 ஆலைகள் தற்போது பயன்பாட்டில் இல்லை, பெரும்பாலும் அதிக இயக்க செலவுகள் காரணமாக இவை இயங்கா நிலையை அடைந்தன.
குறிப்புகள்
[தொகு]- ↑ Prothero, W.G. (1920). Armenia and Kurdistan. London: H.M. Stationery Office. p. 60.
- ↑ Prothero, W.G. (1920). Armenia and Kurdistan. London: H.M. Stationery Office. p. 62.
- ↑ Prothero, W.G. (1920). Armenia and Kurdistan. London: H.M. Stationery Office. p. 64.