எர்கந்து முயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bilateria
எர்கந்து முயல்
எர்கந்து முயலின் வரைபடம், ஆண்டு 1897.
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: லகோமோர்பா
குடும்பம்: லெபோரிடே
பேரினம்: முயல்
இனம்: L. yarkandensis
இருசொற் பெயரீடு
Lepus yarkandensis
கன்தர், 1875
எர்கந்து முயலின் பரவல்

எர்கந்து முயல் (ஆங்கிலப்பெயர்: Yarkand Hare, உயிரியல் பெயர்: Lepus yarkandensis) என்பது லெபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி இனம் ஆகும்.[2] இதன் முதுகுப்புற ரோமமானது மிருதுவாக, நேராக, மணல் போன்ற பழுப்பு நிறத்தில் சாம்பலான கருப்பு கோடுகளுடன் காணப்படும். இதன் கீழ்ப்புற ரோமமானது முழுவதுமாக வெள்ளை நிறத்தில் காணப்படும். இது சீனாவில் மட்டுமே காணப்படுகிறது. இது சீனாவின் தெற்கு சின்ஜியாங் பகுதியின் தரிம் வடிநிலத்தில் மட்டுமே காணப்படுகிறது. இது பொதுவாக ஒரு இரவாடி ஆகும். புற்கள் மற்றும் பயிர்களை உணவாக உண்கிறது. பெண் முயல் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குட்டிகளை ஈனும். ஒரு முறைக்கு இரண்டு முதல் ஐந்து குட்டிகளை ஈனும். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் மற்றும் சீன முதுகுநாணிகளின் செம்பட்டியல் ஆகியவை இம்முயலை அச்சுறு நிலையை அண்மித்த இனம் என்று வகைப்படுத்தியுள்ளன. ஆனால் குறைவான வாழ்விடம், அந்த வாழ்விடமும் சுருங்கும் நிலை, அதிகப்படியான வேட்டையாடுதல் மற்றும் கடத்தல்காரர்கள் ஆகிய காரணங்களால் சீன அறிவியலாளர்கள் இதை அருகிய இனம் என்று கூறுகின்றனர்.

உசாத்துணை[தொகு]

  1. Smith, A.T. & Johnston, C.H. 2016. Lepus yarkandensis. (errata version published in 2017) The IUCN Red List of Threatened Species 2016: e.T11796A115103994. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2016-3.RLTS.T11796A45178274.en. Downloaded on 23 September 2017.
  2. Wrobel 2007, ப. 254.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்கந்து_முயல்&oldid=2681887" இலிருந்து மீள்விக்கப்பட்டது