எரோல்டு பிரிக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எரோல்டு பிரிக்ஸ்
Harold Rawdon Briggs
பிறப்பு24 சூலை1894
மினசோட்டா, அமெரிக்கா
இறப்பு27 அக்டோபர் 1952 (வயது 58)
சைப்ரஸ்
சார்பு ஐக்கிய இராச்சியம்
சேவை/கிளை ஐக்கிய இராச்சிய இராணுவம்
பிரித்தானிய இந்தியாவின் இராணுவம்
சேவைக்காலம்1915–1948
தரம்லெப்டினன்ட் ஜெனரல்
படைப்பிரிவு16-ஆவது பஞ்சாப் படைப்பிரிவு
கட்டளை
  • 2-ஆவது படைத்துறைப் பிரிவு, பலூச் படையணி (1937–40)
    * 7-ஆவது இந்திய காலாட்படை (1940–42)
    * 5-ஆவது காலாட்படை பிரிவு (இந்தியா) (1942–44)
    * பர்மா இராணுவம் (1946–48)
போர்கள்/யுத்தங்கள்முதலாம் உலகப் போர்
இரண்டாம் உலகப் போர்
மலாயா அவசரகாலம்

சர் எரோல்டு பிரிக்ஸ் அல்லது சர் எரோல்டு ராவ்டன் பிரிக்ஸ் (KCIE, KBE, CB, DSO); (மலாய்: Harold Rawdon Briggs; ஆங்கிலம்: Sir Harold Rawdon Briggs; சீனம்: 哈罗德·罗登·布里格斯); (பிறப்பு: 24 சூலை 1894 - இறப்பு: 27 அக்டோபர் 1952) என்பவர் பிரித்தானிய இந்தியாவின் ஒரு மூத்த இராணுவ அதிகாரி (Senior British Indian Army officer) ஆவார்.

முதலாம் உலகப் போர்; இரண்டாம் உலகப் போர் மற்றும் மலாயா அவசரகாலம் ஆகியவற்றின் காலக் கட்டங்களில் அவரின் சேவைகளுக்காக நன்கு அறியப் பட்டவர். பிரித்தானிய இந்தியாவின் இராணுவத்தில் அவரின் உயர் அதிகாரிகளால் மிகவும் மதிக்கப் பட்டவர்.

பொது[தொகு]

1942–ஆம் ஆண்டில் இருந்து 1944-ஆம் ஆண்டு வரை, இந்தியாவின் 5-ஆவது காலாட்படை பிரிவிற்குத் தளபதியாக இருந்து சேவை செய்தவர்.

மலாயா அவசரகாலத்தின் போது பிரிக்ஸ் திட்டம்; மலாயா புதுக்கிராமங்கள் ஆகியவற்றை உருவாக்கியவர் என்றும் மலேசியாவில் நன்கு அறியப் படுகிறார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

24 சூலை 1894-இல் அமெரிக்கா, மினசோட்டாவில் ஆங்கிலேயப் பெற்றோருக்குப் பிறந்த எரோல்டு பிரிக்ஸ், 1914-இல் ஐக்கிய இராச்சியத்தின் குடிமகனார்.

ஐக்கிய இராச்சியம், சாண்ட்ஹர்ஸ்ட் (Sandhurst), அரச இராணுவக் கல்லூரியில் படித்துத் தேர்ச்சி பெற்றார்.[1]

1916-இல் இந்திய இராணுவத்திற்கு மாற்றப் பட்டார். 16-ஆவது பஞ்சாப் படைப்பிரிவில் (16th Punjab Regiment) இணைந்து மெசபடோமியாவிலும் பின்னர் பாலஸ்தீனத்திலும் சேவை செய்தார்.[2]

இரண்டாம் உலகப் போர்[தொகு]

இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் இந்தியாவில் பலூச் படையணி 2-ஆவது படைத்துறைப் பிரிவுக்கு (2nd Battalion, 10th Baluch Regiment) எரோல்டு பிரிக்ஸ் தலைமை தாங்கினார். செப்டம்பர் 1940-இல் அவர் பிரிகேடியர் பதவிக்கு உயர்வு பெற்றார். இந்தியக் காலாட்படை 7-ஆவது படைப் பிரிவிற்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார் (7th Indian Infantry Brigade).[3][1][4]

மலாயா[தொகு]

1950-ஆம் ஆண்டில், எரோல்டு பிரிக்ஸ் பதவி ஓய்வு பெற்று, சைப்பிரஸ் (Cyprus) தீவில் ஓய்வில் இருந்தார். அந்தக் காலக் கட்டத்தில் மலாயா நாடு மலாயா அவசரகால நிலைமையில் இருந்தது. அப்போது ஐக்கிய இராச்சியத்தின் இராணுவத் தலைமைத் தளபதியாக (Chief of the Imperial General Staff) வில்லியம் சிலிம் (Sir William Slim) என்பவர் இருந்தார். இவர் எரோல்டு பிரிக்ஸை மலாயாவின் செயல்பாட்டு இயக்குனராக நியமித்தார்.

அதன் பின்னர் பிரிக்ஸ் திட்டம் (Briggs Plan) செயல்பாட்டிற்கு வந்தது. மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் (Malayan Communist Party) கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான பிரிக்ஸ் திட்டத்தை செயல் படுத்துவதில் எரோல்டு பிரிக்ஸ் ஒரு முக்கிய காரணியாகக் கருதப் படுகிறது.[5]

மலாயா புதுக்கிராமங்கள்[தொகு]

மலாயா புதுக்கிராமங்கள் என்று அழைக்கப்படும் ஒரு வகையான தடுப்பு முகாம்களை உருவாக்கப் படுவதற்கு பிரிக்ஸ் திட்டம் மூலகாரணமாக அமைந்தது.

மலாயா புதுக்கிராமங்கள் அமைக்கப் பட்டதின் அசல் நோக்கம், சீன இனத்தைச் சேர்ந்த அனுதாபிகளை (Sympathizers); மலாயா தேசிய விடுதலை படையின் கொரில்லாக்களுடன் தொடர்பு கொள்ளாமல் பிரித்து வைப்பதாகும். அதற்காகவே 1950-ஆம் ஆண்டில் பிரிக்ஸ் திட்டம் உருவாக்கப்பட்டது.[6]

ஜெரால்டு டெம்பிளர்[தொகு]

அத்துடன் மலாயா தேசிய விடுதலை படையினருக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் பொருள் உதவிகளைத் துண்டிப்பது; மலாயா கம்யூனிஸ்டுகளைத் தோற்கடிப்பது; இவையே பிரிக்ஸ் திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.[7]

1951-இல் எரோல்டு பிரிக்ஸ் மீண்டும் சைப்பிரஸ் தீவில் ஓய்வு பெற்றார். ஆனால், மலாயாவில் இருந்த காலத்தில்ல் அவரின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 1952-இல் உயிர் துறந்தார். அதன் பின்னர் பிரிக்ஸ் திட்டத்தை; சர் ஜெரால்டு டெம்பிளர் (Sir Gerald Templer) என்பவர் வெற்றிகரமாகச் செயல்படுத்தினார்.[5]

நூல்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Indian Army officer histories". Unit Histories. பார்க்கப்பட்ட நாள் 2022-07-09.
  2. "No. 28892". இலண்டன் கசெட். 4 September 1914. p. 7030.
  3. Mead 2007, ப. 69.
  4. "Biography of Lieutenant-General Harold Rawdon Briggs (1894−1952), Great Britain". generals.dk.
  5. 5.0 5.1 Mead 2007, ப. 72.
  6. Hale, Christopher (2013). Massacre in Malaya: Exposing Britain's My Lai. Brimscombe Port: The History Press. பக். 319. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7524-8701-4. 
  7. Hale, Christopher (2013). Massacre in Malaya: Exposing Britain's My Lai. Brimscombe Port: The History Press. பக். 326. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7524-8701-4. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரோல்டு_பிரிக்ஸ்&oldid=3622559" இலிருந்து மீள்விக்கப்பட்டது