எருவில் மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவிஞர் எருவில் மூர்த்தி

எருவில் மூர்த்தி (நாகப்பன் ஏரம்பமூர்த்தி, இறப்பு: ஜனவரி 11, 2007), பிரபல ஈழத்துக் கவிஞர் ஆவார். மட்டக்களப்பைச் சேர்ந்த இவர் 500 இற்கும் மேற்பட்ட வானொலி மெல்லிசைப் பாடல்களையும் நூற்றுக்கு மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

இவர் மட்டக்களப்பு எருவில் என்ற கிராமத்தில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை தனது ஊரிலேயே கற்றவர், பின்பு திருகோணமலை இந்துக் கல்லூரியில் உயர்கல்வி பெற்றார். தனது இளமைக்காலம் தொடக்கம் இறுதிவரை இலங்கையின் அனைத்துத் தமிழ்ப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் கவிதைகளை வெளிக் கொண்டுவந்தார். இவரது முதற்பாடல் 1958 ஆம் ஆண்டிலே சுதந்திரன் பத்திரிகையில் வெளிவந்தது.

வானொலிக்கலைஞர்[தொகு]

இவர் இலங்கை வானொலி, ரூபவாஹினி கூட்டுத்தாபன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும், பல பிரபல ஈழத்துப் பாடகர்களுக்கு பாடல்கள் இயற்றியுள்ளார். இவரது திரைப்படப் புகழ் இசையமைப்பாளர்களான எம். எஸ். செல்வராஜா, ஆர். முத்துசாமி, எம். கே. ரொக்சாமி, யாழ் கண்ணன் - நேசன் போன்றோர் இசையமைத்துள்ளனர்.

ஈழப்போராட்டத்தில் பங்கெடுப்பு[தொகு]

1956 ஜூன் 8 இல் மட்டக்களப்பில் தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது இரு கண்களையும் இழந்த போதிலும் இறுதிவரை தமிழ் இலக்கியப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எருவில்_மூர்த்தி&oldid=2128760" இலிருந்து மீள்விக்கப்பட்டது