உள்ளடக்கத்துக்குச் செல்

எருத்தேன்பதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எருத்தேம்பதி
Eruthempathy
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்9,529
மொழிகள்
 • அதிகாரபூர்வமானவைமலையாளம், ஆங்கிலம், தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல்
678555
வாகனப் பதிவுKL-9
அண்மைய நகரம்கொழிஞ்சாம்பாறை
மக்களவைத் தொகுதிஆலத்தூர்
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிசித்தூர்
காலநிலைஉலர் (கோப்பென்)

எருத்தேம்பதி (Eruthempathy) என்பது கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் சித்தூர் வட்டத்தில் கொழிஞ்சாம்பாறைக்குட்பட்ட மூன்று கிராம பஞ்சாயத்துகளில் ஒன்று. எருத்தேன்பதி பஞ்சாயத்தின் பரப்பளவு 36.93 ச.கிமீ ஆகும்.வடக்கில் வடகரப்பதி பஞ்சாயத்தும், தெற்க்கு கொழிஞ்சாம்பைற பஞ்சாயத்தும், கிழக்கில் பொள்ளாச்சி தாலுக்கும்,மேற்க்கு கொழிஞ்சாம்பாறை பஞ்சாயத்தும், எருத்தேன்பதி பஞ்சாயத்தின் எல்லைகளாக உள்ளன.  

தமிழக எல்லைக்கு அருகில் அமைந்துள்ள கொழிஞ்சாம்பாறை உட்பட்ட 11-வருவாய் கிராமங்களின் பெயர்களின் கடைசி “பதி” என்ற வார்த்தையில் முடியும். “பதி” என்றால் வனம் அல்லது காடு என்று பொருள்படும். இந்த கிராமம் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது. இதன் பூர்வீக குடிகளாக அதிகம் தமிழ் , மற்றும் தெலுங்கு கலந்த தமிழ் பேசும் மக்களும் மலையாளம் பேசும் மக்களுமாக இந்த பகுதியயில் குறைந்த அளவிலே மக்கள் வாழ்ந்திருந்தார்கள். 18-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து அண்டை மாநிலமான தமிழ் நாட்டில் இருந்து விவசாயத்திற்காகவும் வேறு வேலைகளுக்காகவும், பலதரப்பட்ட மக்கள் இங்கு வந்து குடியேறினர். அவ்வாறு இந்த பகுதியில் குடியேறி வாழ்ந்த மக்கள் கூட்டு கலாச்சாரத்தின் உடமைகள் ஆயினர்.

திருவிழாக்கள்

[தொகு]
  1. புனித பீட்டர் கத்தோலிக்க திருச்சபை நடத்தும் தேர் திருவிழா.
  2. பொங்கல்
  3. கிருஷ்ண ஜெயந்தி
  4. விநாயக சதுர்த்தி.
  5. மாங்கா பள்ளம் மூலக்கடை கருப்பராயன் சுவாமி கோவில் பொங்கல்.
  6. எருத்தேன்பதி மாரியம்மன் பூஜை
  7. புதுர் மாகாளியம்மன் கோவில் திருவிழா. போன்ற திருவிழாக்கள் இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

மக்கள் தொகை

[தொகு]

2001-இன் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, எருத்தேன்பதியின் மக்கள் தொகை 9,529 ஆகும், இதில் 4,689 ஆண்கள் மற்றும் 4,840 பெண்களும் உள்ளனர். [1]

வரலாறு

[தொகு]

இந்த பகுதியின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்தது. விவசாயமும், கால்நடைகள் வளர்ப்பதும் ஆகும். ஆரம்பக் காலத்தில் இந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் கால்நடைகளின் கழிவுகளை சாணத்தை வெய்யிலில் காய வைத்து எரிபொருளுக்காகவும், விவசாயத்திற்காகவும் பயன்படுத்த மிக அதிக அளவில் அதை இங்கு சேமித்து வைப்பது வழக்கமாக இருந்தது. அவ்வாறு காய வைத்த சாணத்தை தமிழில் எரு என்று அழைப்பார்கள். இவ்வாறு சேமிக்கப்பட்ட எருவில், இந்த பகுதியின் காடுகளில் உள்ள தேன் ஈக்கள் வந்து கூடுகட்டுவதுமாய் இருந்தது. தொடர்ந்து பலகாலமாக தேன் ஈக்கள் எருவில் கூடுகட்டுவதும் அதிலிருந்து விவசாயிகள் தேன் சேகரிப்பதும் வழக்கமாக இருந்தது. இதன் காரணமாக “எரு+தேன்+பதி”    இந்த சொற்க்களை சேர்த்து “எரு+தேன்+பதி=எருத்தேன்பதி” என்று பெயரால் இப்பகுதி அழைகக்கப் பட்டது.இந்த பஞ்சாயத்தில் பெரும்பான்மை மக்கள் ஹிந்துக்களாக இருந்தனர். ஆதி காலத்திலிருந்தே வினாயகர் கோவில், மாரியம்மன் கோவில், சுப்பிரமணியன் கோவில் போன்ற கோவில்கள் நிறுவப்பட்டு இருந்தது. கிருஷ்த்துவர்களின் ஆதரவோடு “1894”-ல் முதன்முதலாக எருத்தேன்பதியில் ஒரு கிருஷ்த்துவ தேவாலையம் புனித பீட்டர் ஆன்ட் பெளல் என்ற பெயரில் ஆரம்பிக்க பட்டது. பிற்க்காலத்தில் ராமவர்மபுரம் புதுரில் ஒரு இஸ்லாம் பள்ளியும் நிறுவப்பட்டது. பட்டியல்இனத்தில் ஒரு பிரிவு மக்கள் மட்டும் தமிழ் கலாச்சாரத்தில் தொடர்புடைய மதுரைவீரனை தெய்வமாக வழிபட்டனர்.

மன்னர் ஆட்சி காலத்திலேயே இப் பஞ்சாயத்தில் உள்ள ராமவர்மபுரம் புதுர், வண்ணாமடை போன்ற இடங்களில் அரசாங்கத்தின் வகையில் ஒரு கச்சேரியும்,ஒரு ஆரம்ப பள்ளியும்  அரசாங்க நிலத்தில் அமைந்திருந்தன. கல்வி அறிவில் இப்பககுதி மக்கள் மிகவும் பின்தங்கியிருந்தனர். கோயம்புத்துர் மறைமாவட்டத்தின் கீழ் உள்ள செயின்ட் பீட்டர் அப்பர் பிரைமரி பள்ளிக்கூடம்.

( S.P.A.U.P.S. Eruthenpathy) இந்த பஞ்சாயத்தின் ஆரம்ப கல்விக்காக தன் நிகரில்லாத பெரும்பங்களிப்பை தந்து மிகப் பெரும் சேவை செய்துள்ளது.பின்னர் தான் வண்ணாமடையிலும் ,ராமவர்மபுரம் புதுரிலும் ஒவ்வொரு ஆரம்ப பள்ளியை அரசு நிறுவியது.

மேற்கில் நீலகிரி மலைக்கும் ஆனைமலைக்கும் மத்தியில் பாலக்காட்டின் கோடியில் கடல் பரப்பிலிருந்து ஏறக்குறைய 180-மீட்டர் உயரத்தில்  அமைந்துள்ளது  எருத்தேன்பதி பஞ்சாயத்து இப் பஞ்சாயத்தில்   எருத்தேன்பதி, கோழிப்பதி, என்ற இரண்டு வருவாய் கிராமங்கள் உள்ளன. இப் பஞ்சாயத்தில் மத்திய பாகத்தில் பருத்தி சாகுபடி செய்ய தகுந்த கருமண் உள்ளது. மேலும் மத்திய பாகத்தில் நிலத்தடி நீர் அதிகமாக காணப்படுகிறது. பருவகாலங்களிலும் மழை  குறைவாகவே கிடைக்கிறது. பெரும் பாலும் இங்கு வறண்ட காலநிலையே  எப்பொழுதும் காணப்படடுகிறது.

கொழிஞ்சாம்பாறைக்குட்பட்ட  எருத்தேன்பதி, கோழிப்பதி,என்ற இரண்டு ரெவன்யு கிராமங்கள் உட்பட்டது தான் எருத்தேன்பதி பஞ்சாயத்து. இந்த இரண்டு கிராமங்ளும் தமிழக எல்லைக்கு அருகில் அமைந்துள்ளன. அதன் காரணமாகவே  இப்பகுதி மக்கள் ஒரு கலப்பு அல்லது கூட்டு கலாச்சாரத்திற்க்கு சொந்தக் காரர்களாக இருக்கிறார்கள். இந்த மக்களின் பழக்க வழக்கங்கள், ஆச்சார அனுஷ்டானங்கள், தமிழக கலாச்சாரத்தோடு  நெருங்கிய  தொடர்பு கொண்டுள்ளது. இப்பகுதியில்   குறைந்தது 50% சதவீத மக்கள்  தமிழ் மொழிழை பேசுகின்றனர். இவர்களின் தாய் மொழி மலையாலமாக இருந்தாலும். தமிழ் மொழியின்  தாக்கம் மிக அதிகமாக காணப்படுககிறது.

கேரளத்தில் மட்டும் குறைவாக காணப்படும் கவுண்டர் இன மக்கள் இங்கு ஏராளமாக உள்ளனர். இவர்களின் பூர்வீகம் தமிழகம். இங்குள்ள மக்ககளின் முக்கய தொழில் விவசாயம் ஆகும். கேரளாவின் மற்ற பகுதிகளில் காணப்படாத கரும்பு,பருத்தி, நிலக்கடலை போன்ற பயிர்கள் இங்கு முக்கியமாக பயிரிடப்படுகிறது. தமிழக விவசாய முறைகளே இங்கு கடைபிடிக்கபடுகிறது.

கேரளத்தின் மற்ற பகுதிகளில் அறியபடத்ததும் ,கொண்டாடப்படாத்ததுமான , பொங்கள், சூரன்போர், உறியடி , போன்ற பண்டிகைகள் இங்கு எல்லோரும் உற்ச்சாகத்தோடு விமர்சையாக கொண்டாடுகிறார்கள்.

இங்கு மலையாளம் , தமிழ், ஆங்கல செய்தித்தாள்களும் தற்ப்போது கிடைக்கன்றன. இந்த பஞ்சாயத்தில் வண்ணாமடையிலும் ,ராமாவர்மபுரம்  புதுரிலும் ஒவ்வோரு நூலகங்கள் உள்ளன.

இந்த மக்களின் அழிந்து போன கலைகள் சிக்காட்டம், மயிலாட்டம், பொராட்டுகளி போன்றவையாகும். இங்குள்ள மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சம்  திரைபடங்கள் ஆகும்.

மேலும் சில செய்திகள்.

[தொகு]
  • கொச்சி அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. பிறகு ஜமீன்தாரிகள் ஆதிக்கத்துக்கு உட்படுத்தபட்டது.
  • இந்தியா சுதந்திரம் அடைவதற்க்கு முன்பு இங்கிருந்து , அப்பு கவுண்டர் மற்றும் ஆ.பி. சுவாமியப்ப கவுணடர் போன்றவர்கள் கொச்சி அரசாங்கத்தில் சட்ட சபையில் எம்.எல்.ஏ. வாக சேவை செய்துள்ளனர்.
  • 1914-ல் இங்கு கோயம்புத்துர் கிஷ்த்துவ மிஷனரி
  • லோயர் பிரைமரி ஸ்கூல் ஆரம்பித்தது.
  • எருத்தேன்பதி முக்கியமாக காய்கறிகள் விற்ப்பனை கேந்திரமாக இருந்தது. அக்னிபக்தன் நம்பூதிரி மெம்மோர்ரியல் சந்தபேட்டை, முங்கில்மடை வார சந்தை, ஆர்.வி.பி. புதுர் வார சந்தை,போன்றவை முக்கிய விற்ப்பனை கேந்திரங்களாக இருந்தது.
  • 1914-ல் கொச்சின் பஞ்சாயத்து ஆக்ட் பிரகாரம் உருவாக்கப்பட்ட எருத்தேன்பதி பஞ்சாயத்தின் முதல் நோமிநேட்டேட் பஞ்சாயத்து தலைவர் ஆர்.எஸ். கோபால் சாமி கவுண்டர் இருந்தார் . 1953-ல் தேர்தலில் பஞ்சாயத்து தலைவராக ராமவர்மபுரம் பதுரில் இருந்து அலுபெட்ட தேர்ந்தெடுக்க பட்டார்.

குறிப்புகள்

[தொகு]
  1. "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எருத்தேன்பதி&oldid=2882183" இலிருந்து மீள்விக்கப்பட்டது