எரிவாயு விசையாழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மனிதன் நவநாகரீக உலகில் மின்சாரம் முதன்மையான இடத்தை வகிக்கிறது. மின்சாரம் இல்லாமல் மனிதன் எந்த ஒரு செயல்பாடும் நடைபெறாது என்ற நிலை உள்ளது. ஏனென்றால் மனிதம் பெரிதும் இயந்திரங்களை சார்ந்து வாழ பழக்கப்டுத்திக் கொண்டுவிட்டான். அத்தகைய மின்சாரம் பல்வேற முறைகளில் தயாரிக்கப்படுகிறது. இங்கு எரிவாயு விசையாழியைப் பயன்படுத்தி எவ்வாறு எவ்வாறு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என பார்ப்போம்.

எரிவாயு விசையாழி முறையிலும் பல்வேறு வகைகள் உள்ளது. அவற்றில் ஒன்று- திறந்த எரிவாயு விசையாழி சுற்று இரண்டு- மூடிய எரிவாயு விசையாழி சுற்று முறையில் மின்சாரம் தயாரிக்கப்படும் முறையை இங்கு காண்போம்.

இந்த திறந்த சுற்று விசையாழி முறையில் 1) காற்று அழுத்தும் கருவி 2) எரிக்கும் அறை 3) விசையாழி 4) மின் உற்பத்திக் கருவி ஆகிய பாகங்களை பெற்று இருக்கும். காற்ற அழுத்தும் கருவி காற்றை உறிஞ்சி காற்றை வெப்பமாற்றமில்லா முறையில் அழுத்தி அழுத்தப்பட்ட காற்று எரிக்கும் அறைக்குள் செலுத்தப்படுகிறது. பீச்சாங்குழல் மூலம் எரிவாயு எரிக்கும் அறைக்குள் சிறிது சிறிதாக செலுத்தப்படுகிறது. எரிக்கும் அறைக்குள் எரிவாயும், காற்றும் கலந்து அதிக வெப்ப வாயுவாக மாற்றப்படுகிறது. இந்த வெப்பவாயு விசையாழி வழியாக செலுத்தப்படும் போது விசையாழி சுழல்கிறது. விசையாழி சுழல்வதால் விசையாழியுடன் அச்சு வழியாக இணைக்கப்பட்டிக்கும் மின் உற்பத்தி செய்யும் கருவி சுழலும் போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறுது. இங்கு விசையாழி வழியாக செல்லும் அதிக வெப்ப வாயு விசையாழியிலிருந்து வளிமண்டலத்தில் வெளியேற்றப்படுவதால் இது திறந்த சுற்று என அழைக்கப்படுகிறது.

2) மூடிய சுற்று எரிவாயு விசையாழி

  திறந்த சுற்று முறையில் நடைபெறும் அனைத்து செயல்பாடுகளும் இங்கும் நடைபெறும். விசையாழியில் இருந்து வெளியேறும் அதிக வெப்ப காற்று, திறந்த சுற்றில் வளிமண்டலத்தில் வெளியெற்றப்படும் மடிய வளிமண்டலத்தில் வெளியேற்றாமல் அந்த வாயுவை குளிரூட்டும் அறையில் செலுத்தி அதிக வெப்பத்தை மீண்டும் காற்றும் அழுத்தும் கருவிக்கு அனுப்பப்படுகிறது. இங்கு வாயு வளிமண்டலத்தில் வெளியேற்றாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் மூடி சுற்று விசையாழி என அழைக்கப்படுகிறது.

[1]

  1. Applied Thermodynamics - Author : Er.K. Balasundaram - Pratheeba Publishers, Coimbatore- 641 012 (Syllabus-2003J)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிவாயு_விசையாழி&oldid=2723853" இருந்து மீள்விக்கப்பட்டது