எரிமாந்தியன் காட்டுப்பன்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரிமாந்தியன் காட்டுப்பன்றி
ஹெராக்கிள்ஸ், யூரிஸ்டியஸ் மற்றும் எரிமந்தியன் பன்றி. உருவம் கொண்ட பண்டைய கிரேக்க கருப்பு அம்ப்போரா மதுச்சாடி, காலம் கிமு 525, எட்ருரியாவிலிருந்து.இலூவா அருங்காட்சியகம், பாரிசு.
குழுபழங்கதை உயிரினம்
தொன்மவியல்கிரேக்கத் தொன்மவியல்
நாடுகிரேக்கம்
வாழ்விடம்கெரினியா, கிரேக்கம்
ஹெராக்கிள்ஸ் மற்றும் எரிமந்தியன் பன்றி, பிரான்சிஸ்கோ டி சுர்பாரன் வரைந்தது, 1634 (டெல் பிராடோ அருங்காட்சியகம்)

எரிமாந்தியன் பன்றி (Erymanthian Boar, கிரேக்கம் : ὁ Ἐρυμάνθιος κάπρος; இலத்தீன் : Erymanthius aper) என்பது கிரேக்கத் தொன்மவியலில் கூறப்படும் ஒரு காட்டுப் பன்றி ஆகும். இது "மயிரடர்ந்த" [1] "கட்டுக்கடங்காத" [2] "மிகவும் எடை " கொண்ட "பன்றி"யாகும் . [3] " மேலும் இதன் தாடைகளில் நுரையைக் கொண்டது ".இது "எரிமந்தஸின் பரந்த சதுப்பு நிலத்திற்கு" அருகிலுள்ள. "லம்பீயாவின் க்ளென்சில்" வாழ்ந்தது. [4] இது எரிமாந்தஸ் மலையடிவாரத்திலிருந்த நிலங்களில் கிழங்குகளையும், வேர்களையும், விதைகளையும், கொட்டைகளையும் தோண்டித் தின்று வந்ததுடன், கழனிகளையும் பாழாக்கிவந்தது.

எரக்குலிசின் நான்காவது பணியானது இந்த எரிமந்தியன் பன்றியை உயிருடன் மைசீனாவிலுள்ள யூரிஸ்டீயசிடம் கொண்டுவருவதாகும். [4] பன்றியைப் பிடிக்க வந்த, எர்குலிஸ் முதலில் "பன்றியை கூச்சல் போட்டபடி துரத்தினார்" [5] அதன் மூலம் அதை "ஒரு குறிப்பிட்ட புதரிலிருந்து" திசைதிருப்பினார். ஒடியோடி "முற்றிலும் சோர்ந்துபோன விலங்கை பனிநிறைந்த ஆழமான குழியில் விழுதாறு செய்தார்." பின்னர் "குழியில் அகப்பட்ட", அதை சங்கிலிகளால் பிணைத்து, தன் வலையினுள் தள்ளி", [6] வலையைத் தன் இடது தோள்மீது துக்கிப் போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டார், "காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தால் முதுகில் கறை படிந்த அவர்" அதை "மைசீனியர்களின் கூட்டத்தின் நுழைவாயிலில்" கீழே எறிந்தார், இதனால் தனது நான்காவது பணியை முடித்தார். "மன்னர் [யூரிஸ்டியஸ்] எர்குலிஸ் தன் தோளில் பன்றியை சுமந்து வருதைக் கண்டதும், பயந்துபோய் தனக்காக அமைத்திருந்த பித்தளை அறைக்குள் புகுந்து, கதவைத் தாழிட்டுக் கொண்டார்." [7]

குறிப்புகள்[தொகு]

  1. "Hercules Furens 228 ff.". Seneca's Tragedies. 1. London; New York: William Heinemann; G. R Putnam's Sons.. 1917. பக். 21. ark:/13960/t71v5s15x. 
  2. "The Fall of Troy, Book VI. 220 ff.". Quintus Smyrnaeus The Fall Of Troy. London; Cambridge, Massachusetts: William Heinemann Ltd; Harvard University Press. 1984. பக். 271. ark:/13960/t2m61f62d. 
  3. "The Heroides 9. 87 ff". Ovid Heroides And Amores. London; New York: William Heinemann; The Macmillan Co.. 1914. பக். 115. ark:/13960/t76t0t11q. 
  4. 4.0 4.1 "The Argonautica. Book 1 67-111". "The Argonautica" of Apollonius Rhodius. London: George Bell And Sons, York Street, Covent Garden.. 1889. பக். 8. ark:/13960/t03x8577n. https://archive.org/details/bub_gb__1YZAAAAYAAJ. 
  5. "The Library 2. 5. 3-4". Apollodorus the Library. 1. New York: G. P. Putnam's Sons. 1921. பக். 191 with the Scholiast. ark:/13960/t00012x9f.. 
  6. "Thebaid, VIII. 731-760. 746 ff.". Statius. London ; New York: William Heinemann Ltd.; G. P. Putnam's Sons. 1928. பக். 249. ark:/13960/t19k4m13k. https://archive.org/details/statiuswithengli02statuoft. 
  7. "Book 4. 12. 1-2". Diodorus of Sicily. London; Cambridge, Massachusetts: William Heinemann Ltd; Harvard University Press. 1967. பக். 381. ark:/13960/t7qn6bw6r. https://archive.org/details/diodorusofsicily0001diod.