எரிமலை வெடிப்புத் தன்மை குறியீடு

எரிமலை வெடிப்புத் தன்மை குறியீடு (எவெகு) (ஆங்கிலம்: Volcanic Explosivity Index) (VEI) என்பது எரிமலை வெடிப்புகளின் அளவை அளவிடப் பயன்படுத்தப்படும் ஓர் அளவுகோலாகும். இது 1982-ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறையின் கிறிசுதோபர் நியூகால் (Christopher G. Newhall) மற்றும் இசுடீபன் செல்ப் (Stephen Self) எனும் ஐக்கிய அமெரிக்க புவியலாளர்கள் இருவரால் உருவாக்கப்பட்டது.
வெடிப்புத் தன்மையின் மதிப்பைத் தீர்மானிக்க, வெடிப்பின் அளவு, வெடிப்பின் மேக உயரம் மற்றும் முறையான நோக்கீடுகள் போன்ற அளவு முறைகள் பயன்படுத்தப் படுகின்றன. மிகப்பெரிய வெடிப்புகளுக்கு அளவு 8 என்றும்; வெடிக்காத வெடிப்புகளுக்கு அளவு 0 என்றும் மதிப்பீடு வழங்கப்படுகிறது.[1]
பொது
[தொகு]எரிமலை வெடிப்புத் தன்மையின் குறியீடுகள் 0 முதல் 8 வரை உள்ளன. ஆகவே ஒரு வெடிப்புடன் தொடர்புடைய எரிமலை வெடிப்புத் தன்மைக் குறியீட்டை அளவிட சில வரைமுறைகளும் உள்ளன. ஓர் எரிமலை வெடிப்பில் இருந்து எவ்வளவு எரிமலைப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன; எந்த உயரத்திற்கு வெளியேற்றப்படுகின்றன; மற்றும் வெடிப்பு எவ்வளவு காலம் நீடிக்கின்றன என்பதைப் பொறுத்து ஓர் எரிமலையின் வெடிப்புத் தன்மைக் குறியீடு உறுதி செய்யப்படுகிறது.[2][3]
கடந்த 132 மில்லியன் ஆண்டுகளில் சுமார் 40 எவெகு-8 அளவிலான வெடிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 30 வெடிப்புகள் கடந்த 36 மில்லியன் ஆண்டுகளில் நிகழ்ந்தன. சில புள்ளிவிவரங்களின் அடிப்படையில், குறைந்தது 60 எவெகு 8 வெடிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.[4] 27,000 ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்து தாவுப்போ ஏரியில் (Lake Taupō) நிகழ்ந்த வெடிப்பு தான் மிக அண்மைய எவெகு 8 வெடிப்பு என அறியப்படுகிறது.[5][6][3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Newhall, Christopher G.; Self, Stephen (1982). "The Volcanic Explosivity Index (VEI): An Estimate of Explosive Magnitude for Historical Volcanism". Journal of Geophysical Research 87 (C2): 1231–1238. doi:10.1029/JC087iC02p01231. Bibcode: 1982JGR....87.1231N. http://www.agu.org/books/hg/v002/HG002p0143/HG002p0143.pdf.
- ↑ "Volcanic Explosivity Index (VEI)". Global Volcanism Program. Smithsonian Institution. Archived from the original on November 10, 2011. Retrieved August 21, 2014.
- 1 2 Mason, Ben G.; Pyle, David M.; Oppenheimer, Clive (2004). "The size and frequency of the largest explosive eruptions on Earth". Bulletin of Volcanology 66 (8): 735–748. doi:10.1007/s00445-004-0355-9. Bibcode: 2004BVol...66..735M. https://archive.org/details/bulletin-of-volcanology_2004-12_66_8/page/735.
- ↑ Bryan, S.E. (2010). "The largest volcanic eruptions on Earth". Earth-Science Reviews 102 (3–4): 207–229. doi:10.1016/j.earscirev.2010.07.001. Bibcode: 2010ESRv..102..207B. https://eprints.qut.edu.au/40259/1/c40259.pdf.
- ↑ Dosseto, A. (2011). Turner, S. P.; Van-Orman, J. A. (eds.). Timescales of Magmatic Processes: From Core to Atmosphere. Wiley-Blackwell. ISBN 978-1-4443-3260-5.
- ↑ Rothery, David A. (2010), Volcanoes, Earthquakes and Tsunamis, Teach Yourself
வெளி இணைப்புகள்
[தொகு]- VEI glossary entry from a United States Geological Survey website
- How to measure the size of a volcanic eruption, from The Guardian
- The size and frequency of the largest explosive eruptions on Earth, a 2004 article from the Bulletin of Volcanology
- List of Large Holocene Eruptions (VEI > 4) from the Smithsonian Global Volcanism Program பரணிடப்பட்டது 2012-01-17 at the வந்தவழி இயந்திரம்