எரிமலை வகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
                             எாிமலை வகைகள்

எாிமலைகள் புவியின் நிலத்தோற்றங்களில் ஒன்றாகும். புவியின் உட்புறத்திலிருந்து எாிமலைக் குழம்பு வெடித்துச் சிதறுவதின் மூலம் உருவாகின்றன. புவியின் உட்புறத்தில் காணப்படும் பாறைக் குழம்பு மாக்மா எனவும், புவியின் மேற்புரத்தில் காணப்படும் பாறைக்குழம்பிற்கு “லாவா” என்னும் பெயராகும்.

எாிமலை வகைகள்:

எாிமலை அதன் செயல்படும் விதத்தினைக் கொண்டு மூன்று வகைகளாகப் பிாிக்கலாம். அவை, செயல்படும் எாிமலை, உறங்கும் எாிமலை, செயலற்ற எாிமலையாகும்.

செயல்படும் எாிமலைகள்:

செயல்படும் எாிமலையின் வெடிப்புச் செயல்கள் ஆண்டு முழுவதும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். உலகில் 1500-க்கும் மேற்பட்ட செயல்படும் எாிமலைகள் காணப்படுகின்றன. கடலுக்கு அடியில் 80-க்கும் மேற்பட்ட செயல்படும் எாிமலைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளன. உலகிலேயே மிகப்பொிய செயல்படும் எாிமலை ஹவாய் தீவில் உள்ள “மானாலோவா” எாிமலையாகும். அதன் உயரம் கடல் மட்டத்திற்கும் மேல் 13677 அடியாகும்.

உறங்கும் எாிமலைகள்:

குறிப்பிட்ட காலத்தில் வெடித்தபின் பல ஆண்டுகளுக்குச் செயலற்ற நிலையில் காணப்படும். நீண்ட இடைவெளிக்குப் பின்னரோ அல்லது குறகிய இடைவெளிக்குப் பின்னரோ மீண்டும் செயல்படத் தொடங்கும். இவ்வகையான எாிமலைகள் ஆபத்தானவை ஆகும்.

செயலற்ற எாிமலைகள்:

எாிமலை வெடித்துச் சிதறியபின், அதன் செயல்பாடுகள் முழுவதுமாக நின்றுவிடும். தொடா்ந்து நிகழுவதில்லை.

மேற்கோள்கள்


1. சமூக அறிவியல் கற்பித்தல், வளநூல் முதலாமாண்டு, தமிழ்நாடு அரசு ஆசிாியா் கல்வி

ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம், சென்னை
முதல் பதிப்பு - 2008

2. Das Gupta, A.R.Kapoor A.N - Principles of Physical Geography S.Chand & Co.Ltd.,

  New Delhi.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிமலை_வகைகள்&oldid=2637349" இருந்து மீள்விக்கப்பட்டது