உள்ளடக்கத்துக்குச் செல்

எரிமலையியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரிமலை நிபுணர் ஒருவர் ஒரு பாறைச் சுத்தி மற்றும் ஒரு வாளி தண்ணீரைப் பயன்படுத்தி எரிமலை மாதிரியை ஆராய்கிறார்.

எரிமலையியல் (Volcanology) என்பது எரிமலைகள், எரி கற்குழம்பு, கற்குழம்பு ஆகியவை பற்றிய படிப்பு ஆகும். அத்துடன் அவற்றோடு தொடர்புடைய நிலவியல், புவி இயற்பியல் மற்றும் புவி வேதியியல் நிகழ்வுகளையும் பற்றிய ஒரு அறிவியலாகும். volcanology என்ற ஆங்கிலச் சொல் இலத்தீன் சொல்லான வல்கன் வல்கன் என்ற பண்டைய உரோமர்களின் கடவுளின் பெயரில் இருந்து பெறப்பட்டது..

எரிமலையியலாளர் என்பவர் எரிமலையின் வெடித்துச் சிதறல், எரிமலைகள் உருவாகும் விதம், தற்போதைய சீற்றம் பழைய எரிமலைகளின் வரலாறு ஆகியவற்றை ஆய்வு செய்யும் ஒரு புவியியல் வல்லுநர். இவர்கள் அடிக்கடி எரிமலைகளை குறிப்பாக எரிமலை வெடிப்புகளைச் சென்று பார்வையிடுவார்கள். அவைகளின் சீற்றத்தினால் உருவான சாம்பல் மற்றும் நுரைப் பாறைகள், பாறைகள் மற்றும் பாறைக் குழம்புகளின் மாதிரி அல்லது பதக்கூறுகளை சேகரிப்பதற்காக இவற்றை பார்வையிடுவார்கள். இவர்களின் முக்கிய கவனம் அல்லது முன்னிறுத்தி ஆராய்வது எரிமலை வெடிக்கும் நேரத்தைக் கணிப்பதுதான், ஏனென்றால் தற்போது அதை கணிப்பதற்கு எந்த ஒரு கருவியும் கிடையாது. ஆனால் எரிமலை வெடிப்பு அல்லது சீற்றம் மற்றும் புவி அதிர்வை வரும் முன்னாலே கணிக்கக் கூடிய கருவி ஏதேனும் இருக்குமானால் அநேகரின் வாழ்க்கை காப்பாற்றப் படக்கூடும்.

இத்தாலியில் உள்ள ஸ்ட்ரோம்போலி எரிமலை வெடிப்பு, தோராயமாக 100 மீ (300 அடி) செங்குத்தாக. பல வினாடிகள் வெளிப்பாடு. கோடு போடப்பட்ட பாதைகள், பிரகாசமான சூடான பக்கத்தையும், காற்றின் நடுவில் சுழலும் குளிர்ந்த இருண்ட பக்கத்தையும் கொண்ட எரிமலைக் குழம்புத் துண்டுகளின் விளைவாகும்.

நவீன எரிமலையியல்

[தொகு]
தென்-மத்திய ஐசுலாந்தில் எரிமலையை சோதனையிடும் எரிமலையியலாளர்.

1841 ல் முதல் எரிமலை ஆராய்ச்சி நிலையம் இரு சிசிலி நாட்டில நிறுவப்பட்டது[1].(சிசிலி நாடும் இத்தாலியும் இணைந்திருந்தது). இதன் பெயர் வெசுவியஸ் ஆராய்ச்சி நிலையம் ஆகும்.

நிலநடுக்கம் சார்ந்த ஆராய்ச்சிகள் எரிமலை வெடித்திருந்த இடத்திற்கு அருகில் நிலநடுக்கமானி கொண்டு ஆராயப்பட்டது. அந்த ஆய்வில் எரிமலைச் சீற்றத்தின் போது நிலநடுக்கத்தின் அளவு அதிகரிக்கிறதா? ஒரே சீராக நிலநடுக்கம் ஏற்படுகிறதா? இவைகள் மாக்மா அல்லது பாறைக்குழம்புகள் வழிந்தோடுவதற்கு ஒரு அடையாளமாக இருக்கிறதா என்பவைகள் ஆராயப்பட்டன. புவியின் மேற்பரப்பின் உருமாற்றங்கள் புவிப்பாத்த கருவிகளைக் கொண்டு செய்யப்பட்டது. சமன்படுத்துதல், உழுதல், நிலத் திரிபு, கோணங்கள் மற்றும் தொலைவை கணக்கிடுதல் அனைத்தும் அவற்றிற்கான கருவிகளைக் கொண்டு நடை முறைப் படுத்தப் பட்டது.[2]

குறிப்பிடத்தக்க எரிமலை வல்லுநர்கள்

[தொகு]
  • பிளேட்டோ (கிமு 428–348)
  • பிளின்னி தி எல்டர் (கிபி 23–79)
  • பிளின்னி தி யங்கர் (கிபி 61 – சுமார் 113)
  • ஜார்ஜ்-லூயிஸ் லெக்லெர்க், காம்டே டி பஃபோன் (கிபி 1707–1788)
  • ஜேம்ஸ் ஹட்டன் (1726–1797)
  • டியோடாட் கிராடெட் டி டோலோமியூ (1750–1801)
  • ஜார்ஜ் ஜூலியஸ் பவுலெட் ஸ்க்ரோப் (1797–1876)
  • கியூசெப் மெர்கல்லி (1850–1914)
  • தாமஸ் ஜாகர் (1871–1953), ஹவாய் எரிமலை ஆய்வகத்தின் நிறுவனர்
  • ஹாரூன் தாசிஃப் (1914–1998), பிரெஞ்சு அரசாங்கத்தின் ஆலோசகர் மற்றும் ஜாக் கூஸ்டியோ
  • ஜார்ஜ் பி. எல். வாக்கர் (1926–2005), முன்னோடி எரிமலை நிபுணர், இந்த விஷயத்தை ஒரு அளவு அறிவியலாக மாற்றினார்
  • ஹரால்டூர் சிகுர்ட்சன் (பிறப்பு 1939), ஐஸ்லாந்து எரிமலை நிபுணர் மற்றும் புவி வேதியியலாளர்
  • கேட்டியா மற்றும் மாரிஸ் கிராஃப்ட் (முறையே 1942–1991 மற்றும் 1946–1991), ஜப்பானில் உள்ள மவுண்ட் உன்சென்னில் 1991 இல் இறந்தார்
  • டேவிட் ஏ. ஜான்ஸ்டன் (1949–1980), 1980 இல் மவுண்ட் செயிண்ட் ஹெலன்ஸ் வெடிப்பின் போது கொல்லப்பட்டார்
  • ஹாரி க்ளிக்கன் (1958–1991), ஜப்பானில் உள்ள மவுண்ட் உன்சென்னில் 1991 இல் இறந்தார்

படத்தொகுப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Vulcani attivi பரணிடப்பட்டது 2018-03-22 at the வந்தவழி இயந்திரம், INGV, accessed 29 August 2016.
  2. ↑ Robert Decker and Barbara Decker, Volcanoes, 4th ed., W. H. Freeman, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7167-8929-9

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிமலையியல்&oldid=4573466" இலிருந்து மீள்விக்கப்பட்டது