எரித்தோபிளாஸ்டாசிஸ் ஃபீடாலிஸ்
தோற்றம்
Rh நோய் | |
---|---|
ஒத்தசொற்கள் | Rhesus isoimmunization |
சிறப்பு | குழந்தை மருத்துவம், குருதியியல், transfusion medicine |
ஆரெச் நோய் (Rh disease) அல்லது ஆரெச்(D) நோய் அல்லது நீலகுழவி நோய் என்பது Rh- தாயுக்கும், Rh+ தந்தைக்கும் உள்ள பொருந்தாமையால், குழவியின் குருதியில் தோன்றும் குருதிச் சிதைவு நோய் ஆகும். இது கருக்குழவி, பிறந்த குழவி குருதிச் சிதைவு நோய் எனப்படுவதும் உண்டு. இதன் பண்புகள் பின் வருமாறு:
- இது ஒரு குருதி நோய்
- இது Rh- தாயுக்கும் Rh+ தந்தைக்கும் பிறக்கும் குழந்தைகளைத் தாக்குகின்றது.
- Rh எதிா்வினைப் பொருள் கருவின் கருதிச் சிவப்பணுக்களை அழித்துவிடுகின்றது.
- குருதிச் சிவப்பணுக்கள் அழிக்கப்படுவதினால், குருதிசோகை, மஞ்சள் காமாலை ஆகிய நோய்கள் உருவாகின்றன.
- இறந்த குருதிச் சிவப்பணுக்கள், சிதைக்கப்படுவதற்கு கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. கல்லீரலின் ஆற்றலுக்கும் மேற்பட்ட வேலை கொடுக்கப்படுவதினால் கல்லீரல் பழுதடைகின்றது.[1][2][3]
உசாத்துணை
[தொகு]Embryology, Dr. Bernice Anantharaj, Chrisolite Publications, chennai
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Macklin, Madge (December 1944). "The diagnosis of Rh incompatibility, especially by microscopic appearance. Its relation to the syndrome formerly diagnosed as erythroblastosis". The Journal of Pediatrics 25 (6): 533-554. doi:10.1016/S0022-3476(44)80174-3. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022347644801743.
- ↑ "Rh Disease". The Children's Hospital of Philadelphia (in ஆங்கிலம்). 2014-08-23. Retrieved 2021-11-21.
- ↑ "[Serious materno-fetal alloimmunization: about a case and review of the literature"]. The Pan African Medical Journal 22: 137. 2015. doi:10.11604/pamj.2015.22.137.3508. பப்மெட்:26889318.