எரிச் கிளார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எரிச் கிளார் (Erich Clar) பல்வளைய அரோமாட்டிக் ஐதரோகார்பனை ஆய்வு செய்த கரிமவேதியியலாளர் ஆவார். 1902 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 23 ஆம் நாள் இவர் பிறந்தார். பல்வளைய அரோமாட்டிக் ஐதரோகார்பன்கள் தொடர்பான வேதியியலை இரண்டு தொகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார். பல்வளைய அரோமாட்டிக் ஐதரோகார்பன்கள் தயாரிப்பு, பண்புகள், நூற்றுக்கணக்கான பல்வளைய அரோமாட்டிக் ஐதரோகார்பன்களின் புற ஊதா-கட்புல ஈர்ப்பு நிறமாலைகள் போன்றவை இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. எனவே பல்வளைய அரோமாட்டிக் ஐதரோகார்பன் வேதியியல் துறையின் தந்தை என்று எரிச் கிளார் போற்றப்படுகிறார்[1]. பல்வளைய அரோமாட்டிக் ஐதரோகார்பன் மாற்றியன்களின் நடத்தையை விவரிக்கும் ஒரு கோட்பாட்டை உருவாக்கினார். செக்சுடெட் கோட்பாடு என்றழைக்கப்பட்ட அக்கோட்பாடு தற்போது மூலவரான அவர் பெயராலாயே கிளார் விதி என்று அழைக்கப்படுகிறது. அரோமாட்டிக் செக்சுடெட் என்று அவருடைய நூலிலும் இக்கோட்பாடு விவரிக்கப்பட்டுள்ளது. 1965 ஆம் ஆண்டு[2] செருமன் நாட்டைச் சேர்ந்த வேதியியல் கழகம் வெளிநாட்டு அறிவியலாளர்களுக்கு வழங்கும் அதன் மிக உயரிய விருதான ஆகத்து கெக்குலே பதக்கத்தை இவருக்கு வழங்கி சிறப்பித்தது[3]. மற்றும் 1987 ஆம் ஆண்டு பாலிநியூக்ளியர் அரோமாடிக் ஐதரோகார்பன்கள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கின் முதல் பல்வளைய அரோமாடிக் ஐதரோகார்பன் ஆராய்ச்சி விருது எரிச் கிளாருக்கு வழங்கப்பட்டது[4]. 1987 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 27 ஆம் நாள் இவர் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dr. Erich (Eric) Clar". http://www.chem.gla.ac.uk/staff/alanc/clar.htm. பார்த்த நாள்: 2014-01-20. 
  2. "High award for Glasgow scientist". The Glasgow Herald: p. 8. October 29, 1965. https://news.google.com/newspapers?nid=2507&dat=19651029&id=-nVDAAAAIBAJ&sjid=jqMMAAAAIBAJ&pg=5031,4957392. பார்த்த நாள்: 2014-01-20. 
  3. "New titular professors at Glasgow". The Glasgow Herald: p. 5. June 29, 1966. https://news.google.com/newspapers?nid=2507&dat=19660629&id=239AAAAAIBAJ&sjid=zKMMAAAAIBAJ&pg=4388,4936959. பார்த்த நாள்: 2014-01-20. 
  4. "ISPAC Awards" இம் மூலத்தில் இருந்து 2016-03-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160314043722/http://ispac.org/awards.html. பார்த்த நாள்: 2014-01-20. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிச்_கிளார்&oldid=3095104" இருந்து மீள்விக்கப்பட்டது