எரிச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரிச்சி
Erichy
கிராமம்
புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கிக்குச் செல்லும் பாதை
புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கிக்குச் செல்லும் பாதை
நாடு இந்தியா
Stateதமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
ஏற்றம்87.78 m (287.99 ft)
மொழிகள்
 • அதிகாரபூர்வ மொழிதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN614 622
தொலைபேசிக் குறியீடு04371
வாகனப் பதிவுTN 55
Sex ratio995 / 1000 ஆண்களுக்கு /

எரிச்சி (Erichi) என்பது தமிழ்நாட்டில்,அறந்தாங்கி வட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்.[1] இது புதுக்கோட்டை நகரில் இருந்து 24கிமீ தூரத்தில் உள்ளது. இவ்வூர் சங்ககால ஊர்கள் பெயரில் இடம் பெற்றுள்ளது. கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார், புறநானூற்றில் பல பாடல்களை எழுதியவர். இவரது ஊரே ’எறிச்சி’ என்பதாகும், இந்த பெயர் இப்போது மருவி ’எரிச்சி’ என வழங்கப்படுகிறது.[2]

ஆலயங்கள்[தொகு]

காசி விசுவநாதர் ஆலயம், எரிச்சி[தொகு]

காசிவிஸ்வநாதர் ஆலயம் எரிச்சி

இக்கோயில் மகாபாரதத்துடன் தொடர்புடையது. 17ம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது. ஐந்து பெருநிலங்கள்ல் ஒன்றான முல்லை நிலப்பகுதி(கடும் பாடு சாரந்த இடமும்) முழுவதும் எரிமலைப் பாறை போன்ற செம்பறாங்கல் போன்று பூமியின் அமைப்பில் காணப்படுகின்றன. இப்பாறை கற்களைக் கொண்டே இத்திருக்கோயிலும், அருகில் உள்ள மெய்யர் அய்யனார் கோயிலும், சுப்பிரமணியர் கோயிலும், காமாட்சி அம்மன் கோயிலும் அறந்தாங்கி அகரம் காசி விஸ்வநாதர் கோயிலும் குளவாய்பட்டி அட்ட வீரட்டேஸ்வரர் கோயில் கருவறை மற்றம் உள்கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

32.5 அடி நீளமும் 21.5 அடி அகலமும் 40 அடி ஆழமும் கொண்ட சுணை ஒன்று செம்மறாங்கல் பாறைகளை வெட்டி அமைக்கப்பட்டு இருப்பது சிறப்புடையது ஆகும்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-03-23. பார்க்கப்பட்ட நாள் 2014-04-21.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-03-23. பார்க்கப்பட்ட நாள் 2014-04-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிச்சி&oldid=3684504" இலிருந்து மீள்விக்கப்பட்டது