எரிசனம்பட்டி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எரிசனம்பட்டி ஊராட்சி ஒன்றியம் என்பது இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களுல் ஒன்றாகும். இந்த ஊராட்சி ஒன்றியம் விரைவில் உடுமலைப்பேட்டை ஒன்றியத்திலிருந்து பிரிக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் வைத்துள்ளது. இந்த ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் தற்போது உடுமலைப்பேட்டையில் இயங்கி வருகிறது. இந்த ஒன்றியத்தில் இருபது ஊராட்சிகள் அடங்கியுள்ளன.

மக்கள் தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, எரிசனம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 86,452 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 18,564 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 638 ஆக உள்ளது.

போக்குவரத்து[தொகு]

இந்த ஒன்றியத்திற்கு பெரும்பாலும் உடுமலைப்பேட்டை நகரையே அணுக வேண்டும். இங்கிருந்து உடுமலைப்பேட்டை , ஆனைமலை போன்ற பகுதிகளுக்கு நேரடி போக்குவரத்து வசதி உள்ளது.

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

இந்த எரிசனம்பட்டி ஊராட்சி ஒன்றியமானது இருபது ஊராட்சிகளைக் கொண்டுள்ளது. அவைகள்:-

மேற்கோள்கள்[தொகு]