எரிக் டி. கோல்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரிக் டி. கோல்மன்
கனெடிகட்டின் ஆட்சிமன்றக் குழு
பதவியில்
1995–2017
முன்னையவர்திர்மன் எல். மில்னர்
பின்னவர்தக்லஸ் மெக்ரோரி
தொகுதிபுளூம்ஃபீல்ட், ஹார்ட்பர்ட், வின்ட்ஸர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
எரிக் டி. கோல்மன்[1]

மே 26, 1951 (1951-05-26) (அகவை 72)[1]
நியூ ஹேவென், கனெடிகட்[1]
அரசியல் கட்சிமக்களாட்சிக் கட்சி
துணைவர்பமீலா கோல்மன்
வாழிடம்ஹார்ட்பர்ட்[2]

எரிக் டி. கோல்மன் (Eric D. Coleman) (பிறப்பு மே 26, 1951) அமெரிக்காவில் உள்ள மக்களாட்சிக் கட்சியின் அரசியல்வாதி ஆவார். இவர் புளூம்ஃபீல்ட், ஹார்ட்பர்ட் மற்றும் வின்ட்ஸரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனெடிகட்டின் 2வது மாவட்டத்தின் மாநில ஆட்சிமன்றக் குழுவில் பணியாற்றினார். 1983 முதல் 1994 வரை மாநில பிரதிநிதியாக பணியாற்றினார். மேலும் கனெடிகட் ஆட்சிமன்றக் குழுவின் துணைத் தலைவர் (புரோ டெம்போர்) பதவியையும் வகித்தார்.

கோல்மன், பாம்ஃப்ரெட் பள்ளி, கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் கனெடிகட் பல்கலைக்கழக சட்டப் பள்ளி ஆகியவற்றின் பட்டதாரி ஆவார். 2001 இல், நீதித்துறைக் குழுவின் தலைவராக இருந்த முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கரானார். இப்போது திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுக் குழுவின் தலைவராக உள்ளார்.

2017 இல் ஆட்சிமன்றக் குழுவிலிருந்து வெளியேறினார். பின்னர் 2018 இல் உயர் நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டார்.[3]

நவம்பர் 30, 2022 அன்று, மேயர் லூக் புரோனின் ஓய்வுபெறும் முடிவைத் தொடர்ந்து, 2023 இல் ஹார்ட்ஃபோர்டின் மேயர் பதவிக்கு போட்டியிடுவதாக கோல்மன் அறிவித்தார்.[2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Who's Who Among Black Americans, 1985. Adam and Charles Black Ltd. December 1985. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780915130962. https://archive.org/details/whoswhoamongblac0000unse_a0y3. 
  2. 2.0 2.1 "Eric Coleman Is Running for Mayor of Hartford". WVIT. November 30, 2022. பார்க்கப்பட்ட நாள் December 3, 2022.
  3. "Former Sen. Eric Coleman Barely Approved by House as Judge".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்_டி._கோல்மன்&oldid=3698053" இலிருந்து மீள்விக்கப்பட்டது