எரிக்சன் உலகம்
எரிக்சன் உலகம் | |
---|---|
குளோபன் (Globen) | |
இடம் | ஸ்டாக்ஹோம், சுவீடன் |
எழும்பச்செயல் ஆரம்பம் | செப்டம்பர் 10, 1986 |
திறவு | பெப்ரவரி 19, 1989 |
உரிமையாளர் | SGA Fastigheter |
கட்டிடக்கலைஞர் | ஸ்வாண்டே பேர்க், லார்ஸ் விரட்பிளட் |
முன்னாள் பெயர்(கள்) | ஸ்டாக்ஹோம் உலக அரங்கு (1989-2009) |
குத்தகை அணி(கள்) | சுவீடன் ஆன்கள் தேசிய பனி வளைகோற் பந்தாட்ட அணி |
அமரக்கூடிய பேர் | 13,850 (வளைகோற் பந்தாட்டம்) 16,000 (இசை நிகழ்ச்சி) |
எரிக்சன் உலகம் (Ericsson Globe) (ஸ்டாக்ஹோம் உலக அரங்கு, குளோபன் (உலகம்) எனவும் அறியப்பட்டது) என்பது சுவீடனின் ஸ்டாக்ஹோம் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய உள்ளக அரங்கு ஆகும். எரிக்சன் உலகம் உலகிலுள்ள மிகப்பெரிய அரைக்கோள கட்டிடம் ஆகும். இதனைக் கட்டி முடிக்க இரண்டரை ஆண்டுகள் தேவைப்பட்டது. பெரிய வெள்ளைப் பந்து போன்ற வடிவமுடைய இது 110 மீட்டர் (361 அடி) விட்டமும், 85 அடி (276 அடி) உள்ளக உயரமும் உடையது. இக்கட்டிடத்தின் கனவளவு 605,000 கன சதுர மீட்டர்கள் (21,188,800 கன சதுர அடிகள்) ஆகும். இசை நிகழ்ச்சியின்போது 16,000 பார்வையாளர்களும், வளைகோற் பந்தாட்டத்தின்போது 13,850 பார்வையாளர்களும் இங்கு அமர முடியும்.
இது உலகின் பெரிய சூரியக் குடும்ப அளவு மாதிரியான சுவீடன் சூரியக் குடும்ப முறையின் சூரியனை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.[1]
பெப்ரவரி 2, 2009 அன்று ஸ்டாக்ஹோம் உலக அரங்கு சுவீடன் தொலைத்தொடர்பு குழுமம் எரிக்சன் கையகப்படுத்தப்பட்டு, பெயரிடல் உரிமையின்படி "எரிக்சன் உலகம்" என பெயர் மாற்றபப்ட்டது.[2]
படக் காட்சியகம்
[தொகு]-
ஏப்ரல் 1987 இல் உலகம்.
-
கட்டுமான நிலையில்
-
இன்னுமொரு கட்டுமான நிலை படம்
-
1988 இல் முடியும் தருவாயில்
-
2007 இல் பனி வளைகோற் பந்தாட்டத்தின்போது
-
உள்ளக அரங்கு
-
உள்ளக அரங்கு
-
உலகமும் அதனைச் சுற்றியும்
உசாத்துணை
[தொகு]- ↑ "Sweden Solar System: English summary". Sweden Solar System. பார்க்கப்பட்ட நாள் 2009-11-03.
- ↑ "Press release for Ericsson naming rights" (PDF). globearenas.se. Archived from the original (PDF) on 2011-07-22. பார்க்கப்பட்ட நாள் 2009-02-06.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- Stockholm Globe Arenas, website. பரணிடப்பட்டது 2009-05-20 at the வந்தவழி இயந்திரம் (English).
- Stockholm Globe City பரணிடப்பட்டது 2008-05-07 at the வந்தவழி இயந்திரம்
- Hockeyarenas.net entry பரணிடப்பட்டது 2009-03-08 at the வந்தவழி இயந்திரம்
- Web cams monitoring the construction on the Globe Arena பரணிடப்பட்டது 2012-03-01 at the வந்தவழி இயந்திரம்