உள்ளடக்கத்துக்குச் செல்

எய்லி குப்பி

ஆள்கூறுகள்: 13°30′36″N 40°42′59″E / 13.51000°N 40.71639°E / 13.51000; 40.71639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எய்லி குப்பி
உயர்ந்த புள்ளி
உயரம்493 m (1,617 அடி)
ஆள்கூறு13°30′36″N 40°42′59″E / 13.51000°N 40.71639°E / 13.51000; 40.71639
புவியியல்
அமைவிடம்அபார் பிரதேசம், எத்தியோப்பியா
மூலத் தொடர்எர்டா அலே மலைத்தொடர்
நிலவியல்
மலையின் வகைகேடய எரிமலை
கடைசி வெடிப்பு23 நவம்பர் 2025

எய்லி குப்பி (ሃይሊ-ጉቢ Haylē-Gubi) என்பது எத்தியோப்பியாவின் அஃபார் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு கேடய எரிமலை ஆகும்.[1] இது எர்டா அலே மலைத்தொடரின் தெற்கே உள்ள எரிமலையாகும். 2025 நவம்பர் வரை, இந்த எரிமலையின் ஹோலோசீன் சகாப்த வெடிப்புகள் பற்றிய எந்த பதிவும் இல்லை. இருப்பினும் இப்பகுதி தொலைதூரத்தில் உள்ளதால் இதன் வெடிப்புகள் பற்றிய பதிவுகளில் இல்லாமல் போயிருக்கலாம். [2] ஒரு கால் ஹோலோசீன் சகாப்தத்தில் இந்த எரிமலையில் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் அவை பற்றிய வரலாற்று பதிவுகள் ஏதும் இல்லை. மேலும் இதன் வெடிப்புகள் குறித்து போதுமான அளவு ஆய்வு செய்யப்படவில்லை.

2025 எரிமலை வெடிப்பு

[தொகு]

2025 நவம்பர் 23 அன்று, துலூஸ் எரிமலை சாம்பல் ஆலோசனை மையம் (VAAC) ஒரு எரிமலை வெடிப்பு நடந்து வருவதாகவும், செயற்கைக்கோள் படங்களில் சாம்பல் புகைமூட்டம் கண்டறியப்பட்டதாகவும் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. ஆரம்ப வெடிப்பு 08:30 UTC மணிக்கு ஏற்பட்டதாகவும், சாம்பல் புகைமூட்டம் 45,000 அடிகள் (14,000 m) உயரத்தை எட்டியதாகவும் கூறப்படுகிறது. [3] இதன் சாம்பல் புகைமண்டலம் பின்னர் யெமன், ஓமான் உட்பட அறபுத் தீபகற்பம் முழுவதும் நகர்ந்து இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது, இதனால் வானூர்தி போக்குவரத்தில் தடை ஏற்பட்டது. [4] [5] 20:00 UTC வாக்கில், எரிமலை வெடிப்பகள் நின்றுவிட்டதாகக் கருதப்படுகிறது.[6]

எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து, சில இடங்களில் காற்றின் தரத்தில் பாதிப்புகள் ஏற்படுதல் மற்றும் காற்றில் மிதக்கும் சாம்பல் படலத்தால் வானூர்திப் பயணத்தில் பாதிப்புகள் ஏற்படுதல் குறித்து கவலைகள் எழுந்தன. இருப்பினும், எரிமலை வெடிப்பு ஏற்பட்ட இடத்திலிருந்து வெகு தொலைவில் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டதாக எந்த செய்தியும் இல்லை. [7] [8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "በኤርታሌ እሳተ ገሞራ የተከሰተው ምንድን ነው?". Ethiopian Broadcasting Corporation (in அம்ஹாரிக்). 23 November 2025. Retrieved 23 November 2025.
  2. "Hayli Gubbi volcano (Ethiopia): large explosive eruption, first in volcano's recorded history". Volcano Discovery. 23 November 2025. Retrieved 23 November 2025.
  3. "Hayli Gubbi Volcano Volcanic Ash Advisory: ERUPTION AT 20251123/0830Z EXPLOSIVE ACTIVITY ONGOING to 10000 ft (3000 m)". Volcano Discovery. 23 November 2025. Retrieved 23 November 2025.
  4. "Ethiopian volcano erupts, EA monitoring air quality in Oman". Oman Observer. 24 November 2025. Retrieved 24 November 2025.
  5. Dey, Abhishek (25 November 2025). "Ethiopian volcano eruption sends ash to Delhi, hitting flight operations". பிபிசி. Retrieved 25 November 2025.
  6. "HAYLI GUBBI.3 – 2025-11-23 20:00 utc". Volcanic Ash Advisory Centre. 25 November 2025. Retrieved 25 November 2025.
  7. "Satellite Photos Capture Volcanic Eruption From Space". நியூஸ்வீக். 24 November 2025. Retrieved 24 November 2025.
  8. Kumari, Priyanka (24 November 2025). "Ethiopia's Hayli Gubbi volcano erupts after 10,000 years, spews massive ash cloud". இந்தியா டுடே. Retrieved 24 November 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hayli Gubbi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எய்லி_குப்பி&oldid=4420648" இலிருந்து மீள்விக்கப்பட்டது