எயோலசு

எயோலசு (Aeolus,[1] (/iːˈoʊləs/; எயோலஸ், பண்டைக் கிரேக்கம்: Αἴολος, Aiolos) மூன்று புராணக் கதாபாத்திரங்களைக் குறிக்கும் பெயர். கிரேக்க புராணத்தின்படி காற்றை ஆட்சி செய்யும் அரசனைக் குறிக்கிறது. இந்த மூன்று கதாபாத்திரங்களையும் எப்பொழுதும் தனித்தனியாக பிரித்துக் கூறுவது கடினமாகும். பழமையான புராண ஆசிரியர்கள்கூட எது எந்த எயோலசைப் பற்றியது என்று குழம்பியுள்ளதாகத் தெரிகிறது. டியோடரஸ் சிர்குலஸ் (அவரே குழம்பியிருப்பது தெளிவான போதிலும்) இந்த மூன்று எயோலஸ்களை வரையறைக்க முயற்சித்தார். அவருடைய கருத்து பின்வருமாறு:[2] சுருக்கமாக, முதலாம் எயோலஸ் எயோலியன் இனத்தை உருவாக்கிய எலென், எபோனிமசு ஆகியோரின் மகனாவார்; இரண்டாமவர், டெரீனியன் கடலில் உள்ள தீவுப்பகுதியை வழிநடத்திய போசீடானின் மகனாவார்; மூன்றாம் எயோலஸ் ஹிப்போடெஸின் மகனாவார். இவர் ஒடிசியில் பத்தாவது புத்தகத்தில் காற்றின் தேவனாக போற்றப்பட்டுள்ளார். மென்மையான மேற்கு காற்றில் கடலில் எளிதாகப் பயணித்து இத்தாகாவிலுள்ள தனது வீட்டிற்குச் செல்ல, ஒடிஸியசுக்கு சிறைபிடிக்கப்பட்ட காற்றை ஒரு பையில் இறுக்கமாக அடைத்துக் கொடுத்து உதவியவர் இந்த மூன்றாம் எயோலஸ் என்று ஒடிசியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவனது சக பயணிகள் அந்தப் பையிலிருப்பது விலையுயர்ந்த பொருட்கள் என்று நினைத்து அதைத் திறக்க, விடுபட்ட காற்று மாபெரும் புயலாக மாறியதால், எளிதாக முடியவேண்டிய பயணம் நீண்ட பயணமானது. இவர்களுக்குள்ளான துல்லியமான உறவுமுறை தெளிவற்றதாக இருந்தாலும், (குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் எயோலஸ்கள்), இந்த மூன்று எயோலஸ்களும் வம்சாவளியின்படி ஒருவருக்கொருவர் தொடர்புடையவராகவே அறியப்படுகின்றனர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Chaucer's Eolus (de Weever, Jacqueline (1996). Chaucer Name Dictionary, s.v. "Eolus". (Garland Publishing) Retrieved on 2009-10-06
- ↑ Schmitz, Leonhard (1864), "Aeolus (1), (2) and (3)", in Smith, William (ed.), Dictionary of Greek and Roman Biography and Mythology, 1, p. 35, 2013-10-09 அன்று மூலம் பரணிடப்பட்டது, 2015-01-13 அன்று பார்க்கப்பட்டது
வெளி இணைப்புகள்[தொகு]
- Theoi Project - Aiolos
- Aeolus பரணிடப்பட்டது 2017-05-05 at the வந்தவழி இயந்திரம்