எயின்ரிச் ராபர்ட் சிம்மர்
Appearance
எயின்ரிச் ராபர்ட் சிம்மர் (Heinrich Robert Zimmer 6 திசம்பர் 1890 - 20 மார்ச்சு 1943 ) என்பவர் செருமனி நாட்டு வரலாற்றாளர், தென்னாசியக் கலை மற்றும் இந்திய ஆய்வாளர் ஆவார். இந்தியக் கலைகள் நாகரிகம், தத்துவம் ஆகியவற்றின் பழங்கதைகள் அடையாளங்கள் ஆகியன பற்றிய இவருடைய ஆய்வுகள் பிரசித்தி பெற்றவை. மாக்சு முல்லர் போன்ற புகழ் வாய்ந்த செருமானிய அறிஞர் என இவர் அறியப்படுகிறார்.[1] 2010 ஆம் ஆண்டில் எயிடல்பர்க் பல்கலைக்கழகத்தில் இவரது பெயரில் இந்தியத் தத்துவம் மற்றும் அறிவுத் துறை வரலாறு என ஓர் இருக்கை உருவாக்கி நிறுவினார்கள்.[2]