எயினன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாறன் எயினன் என்றழைக்கப்பட்ட இவன் மாறன் காரியின் இளவலாவான்.எயினன் என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த இவன் மாறன் காரியின் இறப்பிற்குப் பின்னர் பராந்தகன் அரசவையில் முதல் அமைச்சனாக இருந்தான்.இவனது அண்ணன் கட்டிய திருமால் கோவிலுக்கு முகப்பு மண்டபம் கட்டியெழுப்பி அக்கோவிலுக்கு கடவுள் மங்கலம் செய்தான்.இவனது இப்பணியைப் பாராட்டி பராந்தகன் பாண்டி மங்கல விசையரையன் என்ற சிறப்புப் பட்டத்தினை அளித்தான் என்பது வரலாறு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எயினன்&oldid=1896831" இருந்து மீள்விக்கப்பட்டது