எம தர்மராஜா கோவில்
எம தர்மராஜா கோயில் (Yama Dharmaraja Temple) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சிற்றம்பலத்தில் அமைந்துள்ள ஓர் இந்துக் கோவிலாகும். மரணத்தின் கடவுளான எமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சில கோயில்களில் இந்தக் கோவிலும் ஒன்றாகும்.[1]
ஆலயங்கள்
[தொகு]இறப்பின் இந்து கடவுளான எமன் இக்கோவிலின் முதன்மையானத் தெய்வம் ஆவார். வீரனார், இராக்காச்சி, முத்துமணி, கருப்புசாமி, கொம்புக்காரன் மற்றும் வடுவாச்சி ஆகிய கடவுளுருக்கான பீடங்களும் உள்ளன. சித்ரகுப்தர், பாம்பட்டி சித்தர், அய்யனார் மற்றும் இவரது மனைவிகள் பூர்ணா மற்றும் புஷ்கலா ஆகியோரின் சிலைகளும் உள்ளன.
வரலாறு
[தொகு]இந்து புராணங்களின்படி, அன்பின் கடவுளான காமதேவன் சிவனின் கோபத்தைத் தூண்டிவிட்டதால் எரித்துக் கொல்லப்பட்டார். பேராவூரணிக்கு அருகிலுள்ள புராதனவனேசுவரர் கோவிலில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் எமனின் வேண்டுகோளின் பேரில், காமதேவன் உயிர்பெற்றார். இவர் உயிர் பெற்ற இடத்தில் எம தர்மராஜா கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.[2][3]
நீண்ட வாழ்நாள் வேண்டியும், மரண பயம் நீங்கவும், திருமணத் தடை அகலவும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுகிறது. சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் வழிபாடு எமனை வழிபடுவது சிறப்பான பலனைத் தரும் என்பது இவர்களது நம்பிக்கை.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஆர்.வி.பழனிவேல் (2021-05-13). "ஆயுள் பலத்தை அதிகரிக்கும் திருச்சிற்றம்பலம் எமதர்மராஜா ஆலயம்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2024-08-06.
- ↑ தினத்தந்தி (2023-03-21). "எமதர்மனுக்கு அமைந்த தனிக் கோவில்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2024-08-06.
- ↑ "Ema Dharmaraja Temple". Dinamalar.
- ↑ "அனைத்து துன்பங்களையும் தீர்க்கும் எமதர்மராஜா கோவில்: எங்கு உள்ளது? - ஐபிசி பக்தி". IBC Bakthi. 2024-08-07. பார்க்கப்பட்ட நாள் 2024-08-07.