எம் சாண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செயற்கை மணல் அல்லது எம் சாண்ட் (Manufactured Sand) கட்டுமான தொழிலில் ஆற்று மணலுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் செயற்கை மணல் ஆகும்.

கடினமான கருங்கற்களை இயந்திரங்கள் மூலம் தூள் தூளாக அரைத்து உற்பத்தி செய்வதே எம் சாண்ட் எனப்படும்.[1]

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் எம் சாண்ட் எனும் செயற்கை மணலைக் கொண்டு கட்டட கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது.[2] தமிழ்நாட்டில் மட்டும் பெரும்பாலாக ஆற்று மணல் வைத்து கட்டடம் கட்டும் முறை உள்ளது.

நன்மைகள்[தொகு]

  • ஆற்று மணலை விட குறைந்த குறைபாடுகளும், அதிக வலிமையும், குறைந்த விலையும், சூழியலுக்கு உகந்ததாக எம் சாண்ட் மணல் உள்ளது. இதனால் கட்டுமானச் செலவு குறைகிறது.[3]
  • எம். சாண்ட் எனும் செயற்கை மணல் பெருமளவில் பயன்படுத்துவதால், ஆற்று மணல் அள்ளப்படுவது பெருமளவில் குறைகிறது. எனவே ஆறுகளின் கரையோரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Manufactured Sand
  2. MANUFACTURED SAND (M SAND) IN CONTRUCTION
  3. PROPERTIES OF MANUFACTURED SAND FOR CONCRETE CONSTRUCTION

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்_சாண்ட்&oldid=2748342" இருந்து மீள்விக்கப்பட்டது