உள்ளடக்கத்துக்குச் செல்

எம் அருனுர் ரசீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். ஹருனூர் ரஷீத் ( M Harunur Rashid பிறப்பு: டிசம்பர் 28, 1939) ஆங்கில இலக்கியத்தின் சிறந்த ஆசிரியர்களுள் ஒருவர் ஆவார். மேலும் குறிப்பிடத்தகுந்த கல்வி நிர்வாகிகளுள் ஒருவராகவும் நவீன கவிதை மற்றும் உரைநடை ஆசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளராகவும் இவர் அறியப்படுகிறார். வங்களதேசத்தில், சூபித்துவம் மற்றும் சூஃபி இலக்கியங்களின் எழுத்தாளர் மற்றும் சமூக, அரசியல், கலாச்சார மற்றும் இலக்கிய நூல்களின் வர்ணனையாளராகவும் உள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

ரஷீத் டிசம்பர் 28, 1939 இல் பிரித்தானிய இந்தியாவில் அசாமின் டின்சுகியாவில் பிறந்தார்.[1] இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக, அவரது தந்தை மறைந்த ரஹிமுதீன் அகமது, அஸ்ஸாம் மாநில ரயில்வே ஊழியராகப் பணிபுரிந்தார். பணிமாற்றம் காரணமாக இவர் சிட்டகாங்கிற்கு மாற்றப்பட்டார். இவர் தனது குழந்தைப் பருவத்தை பஹர்தலி மற்றும் சிட்டகாங் மலைகளின் அருகில் அதிக நேரம் செலவிட்டார். ஜப்பானியர்கள் சிட்டகாங்கில் குண்டுவீச்சு நடத்தியபோது, அவரது தந்தை இவர்களை பிரம்மன்பேரியாவின் நபினகரில் உள்ள தனது கிராமத்திற்கு அனுப்பினார். மெராட்டலியில் உள்ள அவரது வீடு டைட்டாஸ் நதியின் அருகில் இருக்கிறது. இவரது ஆரம்பக் கல்வியினை அவரது தாயார் சலேமா கட்டூனுட் கற்றுத் தந்தார். ஏனெனில் அந்த கிராமத்தில் ஒரே கல்வியறிவு பெற்ற பெண்மணி அவரின் தாய் மட்டுமே ஆவார்.

அவரது குடும்பம் பஹர்தலிக்கு குடிபெயர்ந்தது. இவர் 1947 ஆம் ஆண்டில் பஹர்தலி ரயில்வே உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இவரின் தந்தைக்கு பணிமாறுதல் கிடைத்ததால் அடுத்த ஆண்டு இவர்களின் குடும்பம் சிட்டகாங்கிற்கு குடிபெயர்ந்தது. இவரின் தந்தை இவரை சிட்டகாங் கல்லூரி பள்ளியில் சேர்த்தார் . அந்தப் பள்ளியில் இவர் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தார். பின் இவரது தந்தை பணி ஓய்வு பெற்றதனைத் தொடர்ந்து பிரம்மன்பரியா நகரத்திற்கு சென்றார். இவர் 1955 ஆம் ஆண்டில் இவர் அன்னடா மாடல் உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்பு பிரம்மன்பரியா கல்லூரியில் சேர்ந்தார், மேலும் டாக்கா பல்கலைக்கழகத்தில் இடைநிலை கலை தேர்வில் 1957 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றார்.

டாக்கா பல்கலைக்கழகத்தில் 1960 ஆம் ஆண்டில் இளங்கலைப் பட்டத்தினையும் 1961 ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டத்தினையும் பெற்றார். பின்பு இவர் இங்கிலாந்தில்உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு ( ஃபிட்ஸ்வில்லியம் கல்லூரி ) சென்று 1966 ஆம் ஆண்டு மேதகமை இளங்கலைப் பட்டத்தினையும் 1970 ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டத்தினையும் பெற்றார். 1970 ஆம் ஆண்டுகளில் இவர் ஹவாயில் உள்ள ஈஸ்ட் வெஸ்ட் மையத்திற்குச் சென்று ஈ எஸ் ஓ எல் பயிற்சியினை மேற்கொண்டார். அங்கு பயிற்சியில் இருந்தபோது அந்த மாநிலத்தில் உள்ள முக்கியமான மொழிப் பாடசாலைகளை பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

ரஷீத் தனது உறவினர் முர்ஷிதா பேகத்தை 24 ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார். அவைந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். முர்ஷிதா புற்றுநோயால் 1985 ஆம் ஆண்டில் இறந்தார். இவர் 1986 ஆம் ஆண்டில் ஷிரீன் யாஸ்மின் கான் என்பவரை திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

குறிப்புகள்

[தொகு]
  1. Syed Mohammad Shahed, ed. (1998). Lekhok Avidhan (Dictionary of Writers). Dhaka: Bangla Academy. p. 330.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்_அருனுர்_ரசீத்&oldid=3924724" இலிருந்து மீள்விக்கப்பட்டது