உள்ளடக்கத்துக்குச் செல்

எம். வி. பைலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். வி. பைலி
பிறப்பு(1922-10-05)5 அக்டோபர் 1922
புலிக்குன்னு, கேரளா, இந்தியா
இறப்பு30 திசம்பர் 2017(2017-12-30) (அகவை 95)
கொச்சி, கேரளா
பணிகல்வியாளர், அறிஞர், எழுத்தாளர்
விருதுகள்பத்ம பூசண்
வலைத்தளம்
mvpylee.com

மூலமட்டம் வர்க்கி பைலி (Moolamattom Varkey Pylee) (5 அக்டோபர் 1919 - 30 டிசம்பர் 2017) ஓர் இந்திய அறிஞர், கல்வியாளர், மேலாண்மைத் துறை நிபுணர் ஆவார். இவர் கேரளத்தில் மேலாண்மை கல்வியின் தந்தை என்றும்[1], அரசியலமைப்புச் சட்டத்தில் மிகுந்த புலமை பெற்றவராகவும் பலரால் கருதப்படுகிறார். கல்வி மற்றும் மேலாண்மைத் துறைகளில் இவர் ஆற்றிய பணிக்காக, இந்திய அரசு 2006-ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம பூசண் விருதை வழங்கியது.[2][3]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

எம். வி. பைலி 1919-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி புலிக்குன்னுவில் பிறந்தார்.[4]

இவரது மனைவி எல் சி பைலி 2004-இல் காலமானார்.[5]கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்,'எம். வி. பைலி விருது' என்ற விருதை நிறுவியுள்ளது. கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் கல்விச் சமூகத்திற்கான பங்களிப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் இவ்விருது, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது; இதில் ரூ. 2,00,000 ரொக்கப் பரிசு, நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை அடங்கும்.[6]

கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சங்கனாச்சேரியில் உள்ள செயின்ட் பெர்க்மேன்ஸ் கல்லூரி, புலிக்குன்னில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளி, மங்களூரில் உள்ள செயின்ட் ஆக்னஸ் கல்லூரி, கேரள உயர்கல்வி அறக்கட்டளை, குட் சமாரியன் திட்டம் (இந்தியா) மற்றும் பிற நிறுவனங்கள் இவரது அறக்கட்டளையின் நிதியுதவி மூலம் பயனடைந்துள்ளன.[7]

படைப்புகள்

[தொகு]

எம். வி. பைலி ஆங்கிலம் , மலையாள மொழிகளில் பல நூல்களை எழுதியுள்ளார்.[8][9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ DCSMAT Governing Council பரணிடப்பட்டது 30 மே 2014 at the வந்தவழி இயந்திரம்
  2. ↑ Padma Bhushan Awards (2000–09) – Wikipedia, the free encyclopaedia
  3. ↑ "M.V. Pylee passes away". The Hindu. 30 December 2017. https://www.thehindu.com/news/national/kerala/mv-pylee-passes-away/article22334858.ece.
  4. ↑ "Autograph of M. V. Pylee". Indian Autographs. 2016. Retrieved 10 June 2016.
  5. ↑ The Hindu : Kerala / Kochi News : Around the City
  6. ↑ Banaras Hindu University VC wins MV Pylee award for best academician – The Times of India
  7. ↑ "Profile". Archived from the original on 4 May 2014. Retrieved 4 May 2014.
  8. ↑ "Selected Works". Archived from the original on 4 May 2014. Retrieved 4 May 2014.
  9. ↑ Works of Moolamattom Varkey Pylee at Google Books
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._வி._பைலி&oldid=4636097" இலிருந்து மீள்விக்கப்பட்டது