உள்ளடக்கத்துக்குச் செல்

எம். வி. கோவிந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். வி. கோவிந்தன்
എം. വി. ഗോവിന്ദൻ
உள்ளாட்சித் துறை கேரள சுங்கத் துறை அமைச்சர், கேரள அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
20 மே 2021
முதலமைச்சர்பிணறாயி விஜயன்
முன்னையவர்ஏ. சி. மொய்தீன்
டி. பி. இராமகிருஷ்ணன்
கேரள சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2021
முன்னையவர்ஜேம்ஸ் மேத்யூ
தொகுதிதளிப்பறம்பு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 ஏப்ரல் 1953 (1953-04-23) (அகவை 71)
மொராழா, கண்ணூர், கேரளம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிசம்)
துணைவர்பி. கே. சியாமளா
பிள்ளைகள்2
பெற்றோர்மறைந்த கே.குஞ்சாம்பு
மறைந்த எம். வி. மாதவி

எம். வி. கோவிந்தன் (M. V. Govindan) மேலும் கோவிந்தன் மாஸ்டர் எனவும் அழைக்கப்படும், இவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிசம்) மத்திய குழு உறுப்பினராக உள்ளார். [1] மேலும், கேரளாவின் முக்கியமான அரசியல் தலைவருமாவார். இவர் மலையாள செய்தித்தாளான தேசாபிமானியின் முன்னாள் தலைமை ஆசிரியரும் ஆவார். இவர் மூன்று நூல்களையும் எழுதியுள்ளார்.[2] இவர் தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கான அமைச்சராக பணியாற்றுகிறார். [3] 15 வது கேரள சட்டமன்றத்தில் தளிப்பறம்பு சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் [4]

சொந்த வாழ்க்கை

[தொகு]

இவர் மறைந்த கே.குஞ்சாம்பு - மறைந்த எம். வி. மாதவி ஆகியோருக்கு 23 ஏப்ரல் 1953 அன்று கண்ணூரின் மொராழாவில் பிறந்தார்.[5] இவரது மனைவி, பி. கே. சியாமளா, அந்தூர் நகராட்சியின் தலைவராகவும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்ச்சிசம்) கண்ணூர் மாவட்டக் குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர்களுக்கு சியாம்ஜித் , ரங்கீத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New Central Committee Elected at the 22nd Congress". Communist Party of India (Marxist) (in ஆங்கிலம்). 22 April 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-04-27.
  2. KeralaBookStore.com. "About Author M V Govindan Master". keralabookstore.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-27.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-05-21. பார்க்கப்பட்ட நாள் 2021-08-07.
  4. "Taliparamba Election Result 2021 LIVE: Taliparamba MLA Election Result & Vote Share - Oneindia". www.oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
  5. "KERALA LEGISLATURE - MEMBERS". 2018-04-27. Archived from the original on 2018-04-27. பார்க்கப்பட்ட நாள் 2018-04-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._வி._கோவிந்தன்&oldid=3545880" இலிருந்து மீள்விக்கப்பட்டது