எம். ராமசந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டத்தோ எம். ராமசந்திரன்
தனிநபர் தகவல்
பிறந்த பெயர்ராமச்சந்திரன் முருசாமி
தேசியம்மலேசியர்
பிறப்புஏப்ரல் 9, 1966(1966-04-09)
பஞ்சூர், மூவார், ஜொகூர், மலேசியா
விளையாட்டு
விளையாட்டுதிடல்தட ஓட்டக்காரர்
நிகழ்வு(கள்)400 மீட்டர்

டத்தோ எம். ராமசந்திரன் எனும் ராமச்சந்திரன் முருசாமி (பிறப்பு: 9 ஏப்ரல் 1966); (மலாய்: Ramachandran Murusamy; ஆங்கிலம்: Ramachandran Murusamy) என்பவர் மலேசியாவில் புகழ்பெற்ற திடல்தட ஓட்டக்காரர்.[1]

ஓட்டப் பந்தயத் துறையில் மலேசியாவின் ஓடும் இளம் சிங்கம் எம். ராமசந்திரன் என புகழப் படுபவர். 1993-ஆம் ஆண்டில், மலேசிய தேசிய தடகள வீரர் விருது (Malaysian National Athlete Award 1993) இவருக்கு வழங்கப்பட்டது.

பொது[தொகு]

மலேசியாவின் ஒலிம்பிக் மன்றத்தால், 1993-ஆம் ஆண்டில், முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒலிம்பியன் மலேசியா (Olimpian Malaysia) எனும் சிறப்பு விருதைப் பெற்ற முதல் நபரும் இவரே ஆவார்.[2]

1990-ஆம் ஆண்டுகளில், மலேசியாவின் ஓட்டப் பந்தய வரலாற்றில் மொத்தம் 23 தேசிய சாதனைகளைச் செய்தவர் எனும் புகழையும் பெறுகிறார்.[3]

5000 மீ. மற்றும் 10000 மீ. போட்டிகளில் 28 ஆண்டுகளுக்கு முன்னர், இவர் படைத்த தடகளச் சாதனை, இதுவரையிலும் மலேசியாவில் முறியடிக்கப்படவில்லை.[1]

தவிர 1993-ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் போட்டியில், இவரின் 5000 மீட்டர் ஓட்டப் பந்தயச் சாதனை (14 நிமிடம் 08:97 வினாடி) இதுவரையிலும் முறியடிக்கப்படவிலை.[3][4] 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், 30 நிமிடங்களுக்குள் ஓடி சாதனை படைத்த முதல் மலேசியத் தடகள வீரர்.[5]

5000 மீ. 10000 மீ. சாதனை விவரங்கள்[தொகு]

 • 5,000 மீட்டர் - 14:06.84 - டிராய்சுடோர்ப் (ஜெர்மனி) - 05 ஆகஸ்டு 1994
 • 10,000 மீட்டர் - 29:38.97 - சுடட்கார்ட் (ஜெர்மனி) - 20 ஆகஸ்டு 1993
 • 10,000 மீட்டர் - 30:30.00 - புக்குவோகா (ஜப்பான்) ஆசிய சாம்பியன்சிப் - 20 ஜுலை 1998
 • 5,000 மீட்டர் - 14:57.42 - பொதுநலவாய விளையாட்டுக்கள் - கோலாலம்பூர் - 1998
 • 10,000 மீட்டர் - 31:45.79 - பொதுநலவாய விளையாட்டுக்கள் - கோலாலம்பூர் - 1998[6]

அனைத்துலகப் போட்டிகள்[தொகு]

எம். ராமசந்திரன் மலேசியாவைப் பிரதிநிதித்த அனைத்துலகப் போட்டிகள்:

சொந்த வாழ்க்கை[தொகு]

எம். ராமச்சந்திரன், ஜொகூர், மூவார், பஞ்சூர் எனும் சிறுநகரில் பிறந்தவர். தந்தையார் பெயர் முருசாமி திருவேங்கடம். தாயார் பெயர் முனியம்மாள். குடும்பத்தில் ஏழாவது பிள்ளை. சின்ன வயதில் சுவாசப்பை பாதிப்பினால் அவதிப் பட்டவர். இருப்பினும் அதையே ஏணிப் படையாக வைத்து விளையாட்டுத் துறையில் வளர்ச்சி பெற்றவர்.

இவருக்கு ஒரு மகன் விக்னேஸ்வரன். மற்றும் ஒரு மகள் கீர்த்தனா. இவரின் மனைவி சித்திரா, புற்றுநோயால் 1999-இல் காலமானார். 2000-ஆம் ஆண்டில், ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[7]

விருதுகள்[தொகு]

 • 1989 - ஜொகூர் மாநிலத்தின் சிறந்த விளையாட்டு வீரர் விருது
 • 1990 - ஜொகூர் மாநிலத்தின் சிறந்த விளையாட்டு வீரர் விருது
 • 1993 - ஜொகூர் மாநிலத்தின் சிறந்த விளையாட்டு வீரர் விருது
 • 1993 - மலேசியாவின் சிறந்த விளையாட்டு வீரர் விருது
 • 1993 - ஒலிம்பியன் மலேசியா விருது
 • 1994 - ஜொகூர் மாநிலத்தின் சிறந்த விளையாட்டு வீரர் விருது
 • 1995 - சிங்கப்பூர் ஜான் ஹான்காக் விருது

டத்தோ விருது[தொகு]

விளையாட்டுத் துறையில் இவரின் அரிய சேவைகளுக்காக மலேசியாவின் ஜொகூர் மாநில அரசாங்கம், டத்தோ எனும் உயரிய பொதுச் சேவை விருதை வழங்கிச் சிறப்பு செய்து உள்ளது. எம். ராமச்சந்திரன் உண்மையிலேயே மலேசிய இந்தியர்களால் கொண்டாடப்பட வேண்டிய ஒரு தேசியப் பொக்கிஷம்!


காணொலி[தொகு]

எம். ராமச்சந்திரன் வாழ்க்கை வரலாற்று காணொலி

மேற்கோள்[தொகு]

 1. 1.0 1.1 "M Ramachandran The Southeast Asian Athletics Runner King!". raaga.my. 20 March 2022 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Olympic Council of Malaysia - M. Ramachandran was the first winner of the Male Olympian of the Year award, for his 2 gold medals in the 5,000m and 10,000m track and field events at the 17th SEA Games in Singapore, and for setting new SEA Games records in both these events". 28 ஜனவரி 2022 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 March 2022 அன்று பார்க்கப்பட்டது.
 3. 3.0 3.1 "Ace Sprinter M Ramachandran; Southeast Asian Athletics Runner King - Ramachandran received a total number of twenty-three national records set during the 1990s, especially in mid-and long-distance races, remaining intact to date". Varnam MY. 12 December 2020. 20 March 2022 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Records are meant to be broken - In Malaysia, 23 national records set during the 1990s remain intact till date, especially in the middle and long distance events". On the sport. Be part of it (ஆங்கிலம்). 31 October 2019. 20 March 2022 அன்று பார்க்கப்பட்டது.
 5. Ming, Ong Kian (1 March 2016). "Malaysian legend M Ramachandran dominated the 10,000m race for almost a decade by bringing home the SEA Games gold medal four times, from 1993 to 1999". Malaysiakini. 20 March 2022 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Munusamy RAMACHANDRAN | Profile | World Athletics". worldathletics.org. 20 March 2022 அன்று பார்க்கப்பட்டது.
 7. "OLAHRAGAWAN MALAYSIA M.RAMACHANDRAN" (ஆங்கிலம்). 20 March 2022 அன்று பார்க்கப்பட்டது.

மேலும் காண்க[தொகு]

மலேசியாவின் சிறந்த விளையாட்டு வீரர் விருது

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ராமசந்திரன்&oldid=3593836" இருந்து மீள்விக்கப்பட்டது